யோபு 37:1-24

37  பின்பு அவர், “என் நெஞ்சு படபடக்கிறது.வெளியே தெறித்து விடும்போல் இருக்கிறது.   அதிர வைக்கும் அவருடைய குரலைக் கவனமாகக் கேளுங்கள்.அவர் இடிபோல் முழங்குவதைக் கேளுங்கள்.   வானத்தின் கீழெங்கும் அவர் அதைக் கேட்க வைக்கிறார்.பூமியெங்கும் மின்னலை மின்னச் செய்கிறார்.+   பின்பு, அவர் கர்ஜிக்கிறார்.கம்பீரமாக முழங்குகிறார்.+அப்போதும் மின்னலை நிறுத்தாமல் மின்ன வைக்கிறார்.   கடவுள் இடிபோல் முழங்குவது+ ஒரு அற்புதம்.நம்மால் புரிந்துகொள்ள முடியாத அதிசயங்களை அவர் செய்கிறார்.+   பனியைப் பார்த்து, ‘பூமியில் இறங்கு’ என்று சொல்கிறார்.+ மழையைப் பார்த்து, ‘பலமாகக் கொட்டு’ என்று சொல்கிறார்.+   அவருடைய செயலை அற்ப மனுஷர்கள் எல்லாரும் புரிந்துகொள்வதற்காகஅவர்களுடைய வேலைகளையெல்லாம் நிறுத்துகிறார்.   காட்டு மிருகங்கள் குகைக்குள் போகின்றன.அங்கேயே பதுங்கியிருக்கின்றன.   புயல்காற்று அதன் இடத்திலிருந்து புறப்பட்டு வருகிறது.+வடக்கிலிருந்து குளிர்காற்று அடிக்கிறது.+ 10  கடவுளுடைய மூச்சால் பனிக்கட்டி உருவாகிறது.+நீர்நிலைகள்* உறைந்துபோகின்றன.+ 11  அவர் மேகங்களைத் தண்ணீர்த் துளிகளால் நிரப்புகிறார்.அந்த மேகங்களில் மின்னலைத் தெறிக்க வைக்கிறார்.+ 12  அவர் அனுப்புகிற இடங்களுக்கு மேகங்கள் சுழன்று சுழன்று போகின்றன.அவர் கொடுக்கிற கட்டளைகளைப் பூமியில் நிறைவேற்றுகின்றன.+ 13  அவற்றால் அவர் தண்டனையும் கொடுக்கிறார்,+ நிலத்துக்கு நீரும் பாய்ச்சுகிறார்,+மாறாத அன்பையும் காட்டுகிறார். 14  யோபுவே, இதைக் கேளுங்கள்.கடவுள் செய்திருக்கிற அற்புதங்களைக் கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பாருங்கள்.+ 15  கடவுள் எப்படி மேகங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்* தெரியுமா?மேகங்களில் மின்னலை எப்படி மின்ன வைக்கிறார் என்று தெரியுமா? 16  மேகங்களை எப்படி வானத்தில் மிதக்க வைக்கிறார் என்று தெரியுமா?+ எல்லாம் தெரிந்தவர்* செய்கிற அற்புதங்கள் இவை.+ 17  தெற்கிலிருந்து வீசும் காற்றினால் உலகமே ஸ்தம்பித்துப்போகும்போது,உங்கள் உடை ஏன் சூடாகிறது என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?+ 18  அவரோடு சேர்ந்து வானத்தை விரிக்க உங்களால் முடியுமா?+பளபளப்பான உலோகத்தை* போல அதை உறுதியாக்க முடியுமா? 19  இப்போது அவரிடம் என்ன சொல்வது?அவருக்கு எப்படிப் பதில் சொல்ல முடியும்? நாம் இருட்டில் இருக்கிறோமே. 20  நான் கடவுளிடம், ‘உங்களுக்கு ஒரு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும்’ என்று சொல்ல முடியுமா? அவருக்குத் தெரிய வேண்டிய ஒன்றை யாராவது இதுவரை சொன்னது உண்டா?+ 21  மேகத்தில் மறைந்திருக்கும் சூரியனைக்கூட மனுஷனால் பார்க்க முடியாது.அது வானத்தில் பிரகாசித்தாலும்,காற்று அடித்து, மேகங்கள் கலைந்த பின்புதான் அவனுடைய கண்களுக்குத் தெரியும். 22  வடக்கிலிருந்து தங்க நிறத்தில் ஒளிவீசுகிறது.கடவுளுடைய மகத்துவம்+ பிரமிக்க வைக்கிறது. 23  சர்வவல்லமையுள்ளவரை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.+அவர் மகா வல்லமை உள்ளவர்.+அவர் ஒருபோதும் நியாயத்தைப் புரட்ட மாட்டார்;+ எப்போதும் நீதியாக நடந்துகொள்வார்.+ 24  அதனால், ஜனங்கள் அவருக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ தங்களுக்கே எல்லாம் தெரியும் என்று நினைக்கிற மேதாவிகளுக்கு அவர் உதவி செய்யவே மாட்டார்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

கடல், ஆறு, ஏரி போன்றவை.
வே.வா., “மேகங்களுக்குக் கட்டளை கொடுக்கிறார்.”
வே.வா., “எல்லா அறிவும் உள்ளவர்.”
வே.வா., “உலோகக் கண்ணாடியை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா