யோபு 4:1-21

4  அப்போது, தேமானியனான எலிப்பாஸ்+ யோபுவைப் பார்த்து,   “உன்னிடம் பேசினால், நீ பொறுமை இழந்துவிட மாட்டாய்தானே? ஏனென்றால், இப்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது.   நீ நிறைய பேரைத் திருத்தியிருப்பது உண்மைதான்.சோர்ந்துபோனவர்களைப் பலப்படுத்தியிருப்பது நிஜம்தான்.   தடுமாறி விழுகிறவர்களை உன் வார்த்தைகளால் தூக்கி நிறுத்தினாய்.தள்ளாடுகிற முழங்கால்கள் உள்ளவர்களைப் பலப்படுத்தினாய்.   ஆனால், உனக்குப் பிரச்சினைகள் வந்தவுடன் நிதானம் இழந்துவிட்டாய்.கஷ்டங்கள் உன்னைத் தாக்கியவுடன் ஆடிப்போய்விட்டாய்.   உன் கடவுள்பக்தி உனக்கு நம்பிக்கை தரவில்லையா? உன்னுடைய உத்தம குணம்,+ நல்லது நடக்குமென்ற உறுதியை* கொடுக்கவில்லையா?   தயவுசெய்து யோசித்துப் பார், தப்பு செய்யாதவன் எப்போதாவது அழிந்துபோயிருக்கிறானா? நேர்மையாக நடப்பவன் எப்போதாவது ஒழிந்துபோயிருக்கிறானா?   நான் பார்த்தவரையில், வினை* விதைப்பவன் வினை* அறுக்கிறான்.கெட்டது செய்பவனுக்குக் கெட்டதுதான் நடக்கிறது.   கடவுளுடைய மூச்சுக்காற்று அவனை அழிக்கிறது.அவருடைய கோபம் அவனைப் பொசுக்குகிறது. 10  சிங்கம் கர்ஜிக்கலாம், இளம் சிங்கம் உறுமலாம்.ஆனால், பலம் படைத்த சிங்கங்களின் பற்கள்கூட உடைந்துபோகின்றன. 11  இரை கிடைக்காவிட்டால் சிங்கம் செத்துப்போகும்.சிங்கக்குட்டிகள் சிதறிப்போகும். 12  எனக்கு ரகசியச் செய்தி ஒன்று வந்தது.அது லேசாக என் காதில் விழுந்தது. 13  ஜனங்கள் ஆழ்ந்து தூங்கும் ராத்திரி நேரத்தில்,நான் தரிசனங்களைப் பார்த்துக் கலங்கிப்போனேன். 14  எனக்குக் குலைநடுங்கியது.என் எலும்பெல்லாம் ஆடிப்போனது. 15  ஒரு உருவம் என்னைக் கடந்துபோனது.என் உடம்பெல்லாம் சிலிர்த்தது. 16  பின்பு, அந்த உருவம் அப்படியே நின்றது.அதன் தோற்றம் எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், ஏதோவொரு வடிவம் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது.கொஞ்ச நேரத்துக்கு ஒரே அமைதி; அதன் பிறகு ஒரு குரல், 17  ‘அற்ப மனுஷன் கடவுளைவிட நீதியாக இருக்க முடியுமா? தன்னைப் படைத்தவரைவிட பரிசுத்தமாக இருக்க முடியுமா?’ என்று கேட்டது. 18  கடவுள் தன்னுடைய ஊழியர்களை நம்புவதே இல்லை.தன்னுடைய தூதர்களிடமே* குறை கண்டுபிடிக்கிறார். 19  அப்படியென்றால், மண்ணில் அஸ்திவாரம் போட்டு,+களிமண் வீடுகளில் குடியிருந்து,பூச்சி* போல எளிதில் நசுக்கிக் கொல்லப்படும் மனுஷன் எந்த மூலைக்கு? 20  காலையில் இருக்கிறான், சாயங்காலத்துக்குள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறான்.நிரந்தரமாக அழிக்கப்படுகிறான்; யாரும் கண்டுகொள்வதில்லை. 21  கயிறு அவிழ்க்கப்பட்ட கூடாரம் போலத்தானே அவன் இருக்கிறான்? அவன் ஞானம் இல்லாமல் செத்துப்போகிறான்” என்று சொன்னான்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “நம்பிக்கையை.”
வே.வா., “தீமையை.”
வே.வா., “தீமையை.”
வே.வா., “தூதுவர்களிடமே.”
நே.மொ., “அந்துப்பூச்சி.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா