யோவேல் 3:1-21

3  “அந்த நாட்களில், சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களுக்கு விடுதலை தருவேன்.அவர்களை யூதாவுக்கும் எருசலேமுக்கும் மறுபடியும் கூட்டிக்கொண்டு வருவேன்.+   அப்போது, எல்லா தேசத்து ஜனங்களையும் ஒன்றுகூட்டுவேன்.யோசபாத்தின்* பள்ளத்தாக்குக்குக் கொண்டுவருவேன். அங்கே அவர்களுக்குத் தீர்ப்பு கொடுப்பேன்.+என் சொத்தாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்காக அவர்களைத் தண்டிப்பேன். ஏனென்றால், என் ஜனங்களை மற்ற தேசங்களுக்குத் துரத்தியடித்தார்கள்.என் தேசத்தைத் தங்களுக்குள் பங்குபோட்டுக்கொண்டார்கள்.+   என் ஜனங்களுக்காகக் குலுக்கல் போட்டார்கள்.+விபச்சாரிக்குக் கூலி கொடுப்பதற்காகச் சிறுவனை விற்றார்கள்.திராட்சமதுவை வாங்கிக் குடிப்பதற்காகச் சிறுமியை விற்றார்கள்.   தீரு, சீதோன், பெலிஸ்தியா பகுதிகளில் வாழ்கிறவர்களே,என்ன துணிச்சல் இருந்தால் என்னிடம் இப்படி நடந்துகொள்வீர்கள்? என்னைப் பழிவாங்க நினைக்கிறீர்களோ? நீங்கள் என்னைப் பழிவாங்க நினைத்தால்,நான் சீக்கிரமாகவும் வேகமாகவும் வந்து உங்களைப் பழிவாங்குவேன்.+   என்னுடைய வெள்ளியையும் தங்கத்தையும் நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள்.+என்னுடைய விலைமதிப்புள்ள பொருள்களை உங்கள் கோயில்களுக்குக் கொண்டுபோனீர்கள்.   யூதா ஜனங்களையும் எருசலேம் ஜனங்களையும் கிரேக்கர்களிடம் விற்றீர்கள்.+தேசத்தைவிட்டு ரொம்பத் தூரத்துக்குத் துரத்தியடித்தீர்கள்.   நீங்கள் விற்றுப்போட்ட இடத்திலிருந்து அவர்களை வரவழைப்பேன்.+என்னைப் பழிவாங்க நினைத்த உங்களை நான் பழிவாங்குவேன்.   உங்கள் மகன்களையும் மகள்களையும் யூதா ஜனங்களிடம் விற்றுவிடுவேன்.+அவர்கள் உங்கள் பிள்ளைகளைத் தொலைதூரத்திலுள்ள சேபா தேசத்தாரிடம் விற்றுவிடுவார்கள்.யெகோவாவாகிய நான் இதைச் சொல்கிறேன்.   எல்லா தேசங்களிலும் இதை அறிவியுங்கள்:+ ‘போருக்குத் தயாராகுங்கள்!* மாவீரர்களே, கிளம்புங்கள்! படைகளே, ஒன்றாக அணிவகுத்து வாருங்கள்!+ 10  மண்வெட்டிகளை வாள்களாகவும், அரிவாள்களை ஈட்டிகளாகவும் மாற்றுங்கள். பலவீனமானவன், “நான் பலசாலி” என்று சொல்லட்டும். 11  அக்கம்பக்கத்திலுள்ள தேசங்களே, ஒன்றுகூடி வந்து+ உதவுங்கள்!’” யெகோவாவே, உங்கள் மாவீரர்களை அங்கே அனுப்புங்கள். 12  “தேசங்களே, யோசபாத்தின் பள்ளத்தாக்குக்குச் சீக்கிரமாக வாருங்கள்.நான் அங்கே உட்கார்ந்து, சுற்றியுள்ள எல்லா தேசங்களுக்கும் தீர்ப்பு கொடுப்பேன்.+ 13  பயிர் முற்றிவிட்டது, அரிவாளை எடுத்து அறுங்கள். ஆலையில் திராட்சைப் பழம் கொட்டிக்கிடக்கிறது, வந்து மிதியுங்கள்.+ திராட்சரசத் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன; ஏனென்றால், தேசங்களின் அக்கிரமங்கள் பெருகிவிட்டன. 14  யெகோவா தீர்ப்பு கொடுக்கப்போகும் பள்ளத்தாக்கில் ஜனங்கள் கூட்டம் கூட்டமாகக் கூடியிருக்கிறார்கள்.அவருடைய நாள் நெருங்கிவிட்டது.+ 15  அப்போது, சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்.நட்சத்திரங்கள் ஒளி இழந்துவிடும். 16  சீயோனிலிருந்து யெகோவா கர்ஜிப்பார்.எருசலேமிலிருந்து சத்தமிடுவார். வானமும் பூமியும் அதிரும்.யெகோவா தன்னுடைய ஜனங்களுக்கு அடைக்கலமாக இருப்பார்.+இஸ்ரவேல் ஜனங்களைக் கோட்டைபோல் பாதுகாப்பார். 17  உங்கள் கடவுளாகிய யெகோவா நானே என்பதை அப்போது தெரிந்துகொள்வீர்கள். பரிசுத்த மலையாகிய சீயோனில் நான் குடியிருக்கிறேன்.+எருசலேம் பரிசுத்த இடமாக மாறும்.+ அன்னியர்கள் இனி அங்கு கால்வைக்க மாட்டார்கள்.+ 18  அந்த நாளில் மலைகளிலிருந்து தித்திப்பான திராட்சமது சொட்டும்.+குன்றுகளில் பால் வழிந்தோடும்.யூதாவின் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுக்கும். யெகோவாவின் வீட்டிலிருந்து நீரூற்று புறப்படும்.+சித்தீம்* பள்ளத்தாக்கில்* அது பாய்ந்தோடும். 19  எகிப்து பாழ்நிலமாகும்.+ஏதோம் வெறுமையான வனாந்தரமாகும்.+ஏனென்றால், அவை யூதாவிலுள்ள ஜனங்களுக்குக் கொடுமை செய்தன.+அப்பாவிகளைக் கொன்று குவித்தன.+ 20  ஆனால், யூதாவில் ஜனங்கள் என்றென்றும் குடியிருப்பார்கள்.எருசலேமில் தலைமுறை தலைமுறையாக வாழ்வார்கள்.+ 21  அவர்கள்மேல் இருக்கும் கொலைப்பழியை* நான் நீக்குவேன்.+யெகோவா சீயோனில் குடியிருப்பார்.”+

அடிக்குறிப்புகள்

இந்தப் பெயரின் அர்த்தம், “யெகோவாவே நீதிபதி.”
நே.மொ., “போரைப் புனிதப்படுத்துங்கள்.”
அர்த்தம், “வேல மரங்கள்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கில்.”
வே.வா., “இரத்தப்பழியை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா