யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் 10:1-11

10  பலமுள்ள இன்னொரு தேவதூதர் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; மேகம் அவருக்கு உடையாக* இருந்தது; அவருடைய தலைக்குமேல் ஒரு வானவில் இருந்தது; அவருடைய முகம் சூரியனைப் போலவும்,+ அவருடைய கால்கள்* நெருப்புத் தூண்களைப் போலவும் இருந்தன;  விரிக்கப்பட்ட ஒரு சிறிய சுருள் அவருடைய கையில் இருந்தது. அவர் தன்னுடைய வலது காலைக் கடலின் மீதும், இடது காலைப் பூமியின் மீதும் வைத்தார்.  பின்பு, சிங்கம் கர்ஜிப்பதுபோல்+ உரக்கச் சத்தம் போட்டார். அப்படி அவர் சத்தம் போட்டபோது, ஏழு இடிகளின் குரலைக்+ கேட்டேன்.  ஏழு இடிகள் பேசியபோது, அவற்றை நான் எழுதப்போனேன். ஆனால், பரலோகத்திலிருந்து ஒரு குரல்,+ “ஏழு இடிகள் சொன்னதை முத்திரை போடு; அவற்றை எழுதாதே” என்று சொல்வதைக் கேட்டேன்.  கடலின் மீதும் பூமியின் மீதும் நின்றுகொண்டிருந்த அந்தத் தேவதூதர் வானத்தை நோக்கித் தன்னுடைய வலது கையை உயர்த்தினார்.  என்றென்றும் வாழ்கிறவரும்,+ வானத்தையும் அதில் இருக்கிறவற்றையும் பூமியையும் அதில் இருக்கிறவற்றையும் கடலையும் அதில் இருக்கிறவற்றையும் படைத்தவருமான+ கடவுளின் பெயரில் அவர் ஆணையிட்டு, “இனியும் தாமதமாகாது.  ஏழாவது தேவதூதர்+ தன்னுடைய எக்காளத்தை ஊதப்போகிற நாட்களில்,+ கடவுளுடைய பரிசுத்த ரகசியம்+ நிறைவேற்றப்படும். இதுதான் கடவுள் தன்னுடைய அடிமைகளாகிய தீர்க்கதரிசிகளுக்கு அறிவித்த நல்ல செய்தி”+ என்று சொன்னார்.  பரலோகத்திலிருந்து நான் கேட்ட குரல்+ மறுபடியும் என்னிடம், “கடலின் மீதும் பூமியின் மீதும் நிற்கிற தேவதூதரின் கையில் இருக்கிற விரிக்கப்பட்ட சுருளை நீ போய் வாங்கிக்கொள்”+ என்று சொன்னது.  அதன்படியே நான் அந்தத் தேவதூதரிடம் போய், அந்தச் சிறிய சுருளைக் கொடுக்கும்படி கேட்டேன். அதற்கு அவர், “இதை வாங்கிச் சாப்பிடு;+ இது உன் வாயில் தேன்போல் இனிக்கும், ஆனால் உன் வயிற்றில் கசக்கும்” என்று சொன்னார். 10  நான் அந்தத் தேவதூதரின் கையிலிருந்த சிறிய சுருளை வாங்கிச் சாப்பிட்டேன்;+ அது என்னுடைய வாயில் தேன்போல் இனித்தது;+ ஆனால், அதைச் சாப்பிட்டு முடித்தவுடன் என் வயிற்றில் கசப்பாக இருந்தது. 11  அப்போது, “பல இனத்தினரையும் தேசத்தினரையும் மொழியினரையும் ராஜாக்களையும் பற்றி நீ மறுபடியும் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும்” என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அவரைச் சுற்றி.”
நே.மொ., “பாதங்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா