யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் 8:1-13

8  அவர்+ ஏழாவது முத்திரையை உடைத்தபோது,+ சுமார் அரை மணிநேரத்துக்குப் பரலோகத்தில் அமைதி உண்டானது.  பின்பு, கடவுளுக்கு முன்னால் நிற்கிற ஏழு தேவதூதர்களைப் பார்த்தேன்.+ அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.  இன்னொரு தேவதூதர் பலிபீடத்தின்+ பக்கத்தில் வந்து நின்றார்; அவருடைய கையில் தங்கத் தூபக்கிண்ணம் இருந்தது; பரிசுத்தவான்கள் எல்லாருடைய ஜெபங்களும் கேட்கப்பட்ட நேரத்தில், சிம்மாசனத்துக்கு முன்பாக இருந்த தங்கப் பீடத்தில்+ போடுவதற்குப் பெருமளவு தூபப்பொருள்+ அவரிடம் கொடுக்கப்பட்டது.  தேவதூதரின் கையிலிருந்து தூபப்பொருளின் புகை பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடு+ சேர்ந்து கடவுளிடம் மேலே போனது.  உடனடியாக, தேவதூதர் பலிபீடத்திலிருந்து கொஞ்சம் நெருப்பை எடுத்து தூபக்கிண்ணத்தில் நிரப்பி அதைப் பூமியில் கொட்டினார். அப்போது, இடிமுழக்கங்களும் குரல்களும் மின்னல்களும்+ நிலநடுக்கமும் வந்தன.  ஏழு எக்காளங்களை வைத்திருந்த ஏழு தேவதூதர்கள்+ அவற்றை ஊதுவதற்குத் தயாரானார்கள்.  முதலாவது தேவதூதர் தன்னுடைய எக்காளத்தை ஊதினார். அப்போது, இரத்தம் கலந்த ஆலங்கட்டியும் நெருப்பும் பூமியில் கொட்டப்பட்டன.+ அதனால், பூமியில் மூன்றிலொரு பகுதி எரிந்துபோனது; மரங்களில் மூன்றிலொரு பகுதி எரிந்துபோனது; பசுமையான செடிகொடிகளெல்லாம் எரிந்துபோயின.+  இரண்டாவது தேவதூதர் தன்னுடைய எக்காளத்தை ஊதினார். அப்போது, தீப்பற்றி எரிகிற பெரிய மலை போன்ற ஒன்று கடலுக்குள்+ தள்ளப்பட்டது. அதனால் கடலில் மூன்றிலொரு பகுதி இரத்தமானது.+  கடலில் வாழ்கிற உயிரினங்களில் மூன்றிலொரு பகுதி செத்துப்போனது.+ கப்பல்களில் மூன்றிலொரு பகுதி நாசமானது. 10  மூன்றாவது தேவதூதர் தன்னுடைய எக்காளத்தை ஊதினார். அப்போது, ஒரு பெரிய நட்சத்திரம் தீப்பந்தம்போல் எரிந்துகொண்டே வானத்திலிருந்து பாய்ந்து வந்து, ஆறுகளிலும் நீரூற்றுகளிலும் மூன்றிலொரு பகுதிமீது விழுந்தது.+ 11  அந்த நட்சத்திரத்தின் பெயர் எட்டி. அதனால், தண்ணீரில் மூன்றிலொரு பகுதி எட்டிபோல் கசப்பானது. தண்ணீர் இப்படிக் கசப்பானதால்+ அதைக் குடித்த நிறைய பேர் செத்துப்போனார்கள். 12  நான்காவது தேவதூதர் தன்னுடைய எக்காளத்தை ஊதினார். அப்போது, சூரியனில் மூன்றிலொரு பகுதியும்,+ சந்திரனில் மூன்றிலொரு பகுதியும், நட்சத்திரங்களில் மூன்றிலொரு பகுதியும் சேதமடைந்தன. அதனால், அவை எல்லாவற்றிலும் மூன்றிலொரு பகுதி இருளடைந்தது; பகலில் மூன்றிலொரு பகுதி வெளிச்சம் இல்லாமல் போனது;+ இரவிலும் அப்படியே ஆனது. 13  பின்பு, நடுவானத்தில் ஒரு கழுகு பறப்பதைப் பார்த்தேன்; அது உரத்த குரலில், “இன்னும் மூன்று தேவதூதர்கள் தங்களுடைய எக்காளங்களை ஊதப்போகிறார்கள்,+ அவர்களுடைய எக்காள முழக்கங்களால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, கேடு!”+ என்று சொல்வதைக் கேட்டேன்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா