கொரிந்தியருக்கு முதலாம் கடிதம் 13:1-13

13  நான் மனிதர்களுடைய மொழிகளில் பேசினாலும் தேவதூதர்களுடைய மொழிகளில் பேசினாலும் எனக்கு அன்பு இல்லையென்றால், ஓசையெழுப்புகிற வெண்கலத்தைப் போலவும் சத்தமிடுகிற ஜால்ராவைப் போலவும்தான் இருப்பேன்.  தீர்க்கதரிசனம் சொல்கிற வரம் எனக்கு இருந்தாலும், பரிசுத்த ரகசியங்கள் எல்லாவற்றையும் புரிந்திருப்பவனாக இருந்தாலும், எல்லா அறிவும் இருந்தாலும்,+ மலைகளை நகர வைக்குமளவுக்கு விசுவாசம் இருந்தாலும், எனக்கு அன்பு இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை.*+  தற்பெருமைக்காக என்னிடம் இருப்பதையெல்லாம் அன்னதானம் செய்வதற்குக் கொடுத்தாலும்+ என் உயிரையே தியாகம் செய்தாலும், எனக்கு அன்பு இல்லையென்றால்+ எந்தப் பிரயோஜனமும் இல்லை.  அன்பு+ பொறுமையும்+ கருணையும்+ உள்ளது. அன்பு பொறாமைப்படாது,+ பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது,+  கேவலமாக* நடந்துகொள்ளாது,+ சுயநலமாக நடந்துகொள்ளாது,+ எரிச்சல் அடையாது,+ தீங்கை* கணக்கு வைக்காது,+  அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல்+ உண்மையைக் குறித்து சந்தோஷப்படும்.  எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும்,+ எல்லாவற்றையும் நம்பும்,+ எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்,+ எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்.+  அன்பு ஒருபோதும் ஒழியாது. ஆனால், தீர்க்கதரிசனம் சொல்கிற வரமானாலும் ஒழிந்துபோகும், வெவ்வேறு மொழி* பேசுகிற வரமானாலும்* மறைந்துபோகும்; அறிவென்ற வரமானாலும் அழிந்துபோகும்.  ஏனென்றால், நமக்கு அரைகுறையான அறிவுதான் இருக்கிறது,+ அரைகுறையாகத்தான் தீர்க்கதரிசனம் சொல்கிறோம். 10  ஆனால், முழுமையானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோகும். 11  நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப் போல் பேசினேன், குழந்தையைப் போல் சிந்தித்தேன், குழந்தையைப் போல் யோசித்தேன்; இப்போது நான் பெரியவனாகிவிட்டதால் குழந்தைத்தனமானவற்றை ஒழித்துவிட்டேன். 12  இப்போது நாம் உலோகக் கண்ணாடியில் மங்கலாகப் பார்க்கிறோம், அப்போதோ தெள்ளத்தெளிவாக* பார்ப்போம். இப்போது நான் கடவுளைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்து வைத்திருக்கிறேன், அப்போதோ கடவுள் என்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பதைப் போல நான் அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பேன். 13  ஆனால் விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய மூன்றும் நிலைத்திருக்கும்; இவற்றில் அன்புதான் தலைசிறந்தது.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “நான் ஒன்றுக்கும் உதவாதவனாக இருப்பேன்.”
வே.வா., “தவறுகளை.”
வே.வா., “அநாகரிகமாக.”
வே.வா, “அன்னிய பாஷை.”
அதாவது, “அற்புதமாக மற்ற மொழிகளில் பேசுகிற வரமானாலும்.”
நே.மொ., “முகமுகமாக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா