1 சாமுவேல் 12:1-25

12  பின்பு, சாமுவேல் இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும், “நீங்கள் கேட்டதையெல்லாம் நான் செய்துவிட்டேன், உங்களை ஆட்சி செய்வதற்கு ஒரு ராஜாவையும் ஏற்படுத்திவிட்டேன்.+  இனிமேல் இவர்தான் உங்களுக்குத் தலைமைதாங்குவார்.+ எனக்கு வயதாகிவிட்டது, தலை நரைத்துவிட்டது. என் மகன்கள் உங்களோடு இருக்கிறார்கள்.+ நான் இளம் வயதிலிருந்து உங்களை வழிநடத்தி வந்திருக்கிறேன்.+  பாருங்கள், இப்போது உங்கள் முன்னால்தான் நிற்கிறேன். யாருக்காவது என்மேல் குறை இருந்தால் யெகோவாவுக்கும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும்*+ முன்னால் வந்து சொல்லுங்கள். யாருடைய மாட்டையாவது கழுதையையாவது நான் எடுத்துக்கொண்டேனா?+ யாரையாவது ஏமாற்றினேனா? யாரையாவது கொடுமைப்படுத்தினேனா? யாரிடமாவது லஞ்சம் வாங்கி நீதியைப் புரட்டினேனா?+ அப்படியிருந்தால் சொல்லுங்கள், அதையெல்லாம் திருப்பித் தந்துவிடுகிறேன்”+ என்றார்.  அதற்கு அவர்கள், “நீங்கள் எங்களை ஏமாற்றவில்லை, கொடுமைப்படுத்தவில்லை, யார் கையிலிருந்தும் எதையும் வாங்கவில்லை” என்று சொன்னார்கள்.  அப்போது அவர், “என்மேல் உங்களுக்கு எந்தக் குறையும் இல்லை என்பதற்கு இன்று யெகோவா சாட்சியாக இருக்கிறார். அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் சாட்சியாக இருக்கிறார்” என்று சொன்னார். அதற்கு அவர்கள், “ஆமாம், அவர் சாட்சியாக இருக்கிறார்” என்றார்கள்.  அப்போது சாமுவேல் ஜனங்களிடம், “மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தி உங்கள் முன்னோர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த யெகோவா+ எனக்குச் சாட்சியாக இருக்கிறார்.  இப்போது அப்படியே நில்லுங்கள். உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் யெகோவா செய்திருக்கிற நீதியான காரியங்களை எடுத்துச் சொல்லி, யெகோவாவின் முன்னிலையில் உங்களோடு வழக்காடுகிறேன்.  யாக்கோபு எகிப்துக்கு வந்த+ சமயத்தைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். யெகோவாவிடம் உங்களுடைய முன்னோர்கள் உதவி கேட்டுக் கெஞ்சியபோது,+ யெகோவா மோசேயையும்+ ஆரோனையும் அனுப்பி அவர்களை எகிப்திலிருந்து இங்கு கொண்டுவந்து சேர்த்தார்.+  ஆனால், அவர்கள் தங்களுடைய கடவுளாகிய யெகோவாவை மறந்தார்கள். அதனால், அவர்களை ஆத்சோரின் படைத் தளபதி சிசெராவின் கையிலும்+ பெலிஸ்தியர்களின் கையிலும்+ மோவாப் ராஜாவின் கையிலும்+ அவர் விட்டுவிட்டார்.*+ அந்த ஆட்கள் உங்களுடைய முன்னோர்களோடு போர் செய்தார்கள். 10  அப்போது, உங்கள் முன்னோர்கள் யெகோவாவிடம் உதவி கேட்டு,+ ‘யெகோவாவே, நாங்கள் உங்களை விட்டுவிட்டு பாகால்களின் சிலைகளையும் அஸ்தரோத்தின் சிலைகளையும் வணங்கி+ பாவம் செய்துவிட்டோம்.+ இனிமேல் உங்களைத்தான் வணங்குவோம். அதனால் இப்போது எங்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுங்கள்’ என்று கெஞ்சினார்கள். 11  அப்போது, யெகோவா யெருபாகாலையும்+ பேதானையும் யெப்தாவையும்+ சாமுவேலையும்+ அனுப்பி, சுற்றியுள்ள எல்லா எதிரிகளிடமிருந்தும் உங்களைக் காப்பாற்றி, பாதுகாப்பாக வாழ வைத்தார்.+ 12  அம்மோனியர்களின் ராஜாவாகிய நாகாஸ்+ உங்களோடு போர் செய்ய வந்தபோது, ‘எங்களுக்குக் கண்டிப்பாக ராஜா வேண்டும்!’ என்று என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தீர்கள்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு ராஜாவாக இருந்தும்,+ வேறு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டே இருந்தீர்கள். 13  இதோ, நீங்கள் விரும்பிக் கேட்ட ராஜா இங்கே இருக்கிறார். நீங்கள் கேட்டபடியே யெகோவா உங்களுக்கு ஒரு ராஜாவைத் தந்திருக்கிறார்.+ 14  நீங்கள் யெகோவாவின் கட்டளையை மீறாமல், யெகோவாவுக்குப் பயந்து,+ அவருக்குக் கீழ்ப்படிந்து,+ அவரையே வணங்க வேண்டும்.+ நீங்களும் உங்கள் ராஜாவும் உங்கள் கடவுளாகிய யெகோவாவைப் பின்பற்றி நடக்க வேண்டும். அப்படிச் செய்தால், நல்லது. 15  ஆனால், நீங்கள் யெகோவாவின் பேச்சைக் கேட்காமல், யெகோவாவின் கட்டளையை மீறினால், உங்களையும் உங்கள் தகப்பன்களையும் யெகோவா தண்டிப்பார்.+ 16  இப்போது நீங்கள் அப்படியே நின்று, யெகோவா உங்கள் கண் முன்னால் செய்யப்போகிற மாபெரும் அற்புதத்தைப் பாருங்கள். 17  இன்று கோதுமையை அறுவடை செய்ய வேண்டிய நாள்தானே? இடியுடன்கூடிய மழை வர வேண்டுமென்று நான் யெகோவாவிடம் வேண்டிக்கொள்கிறேன். ஒரு ராஜா வேண்டுமென்று நீங்கள் கேட்டது யெகோவாவின் பார்வையில் எவ்வளவு மோசமான காரியம் என்பதை அப்போது நன்றாகப் புரிந்துகொள்வீர்கள்”+ என்று சொன்னார். 18  பின்பு, சாமுவேல் யெகோவாவிடம் வேண்டிக்கொண்டார். யெகோவா அன்று இடியுடன்கூடிய மழையைப் பெய்ய வைத்தார். அதனால், ஜனங்கள் எல்லாரும் யெகோவாவுக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்தார்கள். 19  அவர்கள் சாமுவேலிடம், “உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் எங்களுக்காக ஜெபம் செய்யுங்கள்.+ நாங்கள் சாக விரும்பவில்லை. ராஜா வேண்டுமென்று கேட்டு நாங்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்துவிட்டோம்” என்று சொன்னார்கள். 20  அதற்கு சாமுவேல், “பயப்படாதீர்கள். நீங்கள் பாவம் செய்திருந்தாலும், இனிமேலாவது யெகோவாவைவிட்டு விலகாமல் இருங்கள்.+ முழு இதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்.+ 21  அவரை விட்டுவிட்டு ஒன்றுக்கும் உதவாத+ வீணான தெய்வங்களைத்+ தேடிப்போகாதீர்கள். ஏனென்றால், அவை வீணானவை. 22  யெகோவா உங்களைத் தன்னுடைய ஜனங்களாக விரும்பித் தேர்ந்தெடுத்திருப்பதால்+ உங்களைக் கைவிட மாட்டார். யெகோவா தன்னுடைய மகத்தான பெயரை மனதில் வைத்து,+ உங்களைக் கைவிடாமல் இருப்பார்.+ 23  என்னைப் பொறுத்தவரை, உங்களுக்காக ஜெபம் செய்யாமல் இருப்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஏனென்றால், அது யெகோவாவுக்கு முன்னால் ஒரு பாவம். அதனால், நான் உங்களுக்கு நல்ல வழியைத் தொடர்ந்து கற்றுக்கொடுப்பேன். 24  யெகோவாவுக்கு மட்டும் பயப்படுங்கள்,+ முழு இதயத்தோடும் உண்மையோடும் அவருக்குச் சேவை செய்யுங்கள். உங்களுக்காக அவர் எப்பேர்ப்பட்ட அற்புதங்களைச் செய்திருக்கிறார் என்பதை யோசித்துப் பாருங்கள்.+ 25  நீங்கள் பாவம் செய்யத் துணிந்தால் நீங்களும் சரி, உங்களுடைய ராஜாவும் சரி,+ அடியோடு அழிக்கப்படுவீர்கள்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அபிஷேகம் செய்யப்பட்டவருக்கும்.”
நே.மொ., “விற்றுப்போட்டார்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா