1 நாளாகமம் 24:1-31

24  ஆரோனின் வம்சத்தைச் சேர்ந்த குருமார்களின் பிரிவுகளைப் பற்றிய விவரம். நாதாப், அபியூ,+ எலெயாசார், இத்தாமார்+ ஆகியோர் ஆரோனின் மகன்கள்.  நாதாபும் அபியூவும் அவர்களுடைய அப்பாவுக்கு முன்பே இறந்துவிட்டார்கள்.+ அவர்களுக்கு மகன்கள் இல்லை. ஆனால், எலெயாசாரும்+ இத்தாமாரும் குருமார்களாகச் சேவை செய்துவந்தார்கள்.  குருமார்கள் செய்ய வேண்டிய வேலைகளை தாவீது பிரித்துக் கொடுத்தார். எலெயாசாரின் வம்சத்தில் வந்த சாதோக்கும்+ இத்தாமாரின் வம்சத்தில் வந்த அகிமெலேக்கும் அவருக்கு உதவி செய்தார்கள்.  இத்தாமாரின் வம்சத்தைவிட எலெயாசாரின் வம்சத்தில்தான் நிறைய தலைவர்கள் இருந்தார்கள். அதற்கேற்றபடி அவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். எலெயாசாரின் வம்சத்தில் வந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் மொத்தம் 16 பேர். இத்தாமாரின் வம்சத்தில் வந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் மொத்தம் 8 பேர்.  பரிசுத்த இடத்தில் சேவை செய்த தலைவர்களும் உண்மைக் கடவுளுக்குச் சேவை செய்த தலைவர்களும் எலெயாசார், இத்தாமார் ஆகிய இரண்டு பேரின் வம்சத்திலும் இருந்தார்கள்; அதனால், இந்த இரண்டு வம்சத்திலும் வந்த தலைவர்களைக் குலுக்கல் முறையில்+ மாறிமாறி தேர்ந்தெடுத்தார்கள்; அவர்கள் எப்போது சேவை செய்ய வேண்டும் என்பதை இப்படித் தீர்மானித்தார்கள்.  ராஜா, அதிகாரிகள், குருவாகிய சாதோக்,+ அபியத்தாரின்+ மகன் அகிமெலேக்கு+ ஆகியோர் முன்பாகவும், குருமார்கள் மற்றும் லேவியர்களின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் முன்பாகவும் செமாயா அந்தப் பெயர்களை எழுதினார்; இவர் லேவியர்களின் செயலாளரான நெதனெயேலின் மகன். எலெயாசார் வம்சம், இத்தாமார் வம்சம் என மாறிமாறி குலுக்கல் போட்டுத் தேர்ந்தெடுத்தார்கள்.  குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்: முதலாவது யோயாரீப், இரண்டாவது யெதாயா,  மூன்றாவது ஆரீம், நான்காவது செயோரீம்,  ஐந்தாவது மல்கீயா, ஆறாவது மியாமின், 10  ஏழாவது அக்கோஸ், எட்டாவது அபியா,+ 11  ஒன்பதாவது யெசுவா, பத்தாவது செக்கனியா, 12  பதினோராவது எலியாசிப், பன்னிரண்டாவது யாக்கிம், 13  பதின்மூன்றாவது உப்பா, பதினான்காவது எசெபெயாப், 14  பதினைந்தாவது பில்கா, பதினாறாவது இம்மேர், 15  பதினேழாவது ஏசீர், பதினெட்டாவது அப்சேஸ், 16  பத்தொன்பதாவது பெத்தகியா, இருபதாவது எகெசெக்கியேல், 17  இருபத்தோராவது யாகீன், இருபத்திரண்டாவது காமுவேல், 18  இருபத்து மூன்றாவது தெலாயா, இருபத்து நான்காவது மாசியா. 19  யெகோவாவின் ஆலயத்தில் சேவை செய்வதற்கு இந்த முறையில்தான் நியமிக்கப்பட்டார்கள்.+ தங்களுடைய மூதாதையான ஆரோன் ஏற்படுத்திய வழக்கத்தின்படியே அவர்கள் சேவை செய்துவந்தார்கள். இஸ்ரவேலின் கடவுளான யெகோவாதான் ஆரோனுக்கு இப்படிச் செய்யச் சொல்லி கட்டளை கொடுத்திருந்தார். 20  லேவி வம்சத்தைச் சேர்ந்த மற்றவர்கள்: அம்ராமின்+ மகன்களில், சூபவேல்;+ சூபவேலின் மகன்களில், எகேதியா; 21  ரெகபியாவின்+ மகன்களில் தலைவராக இருந்த இஷியா; 22  இத்சேயாரின் மகன்களில், செலெமோத்;+ செலெமோத்தின் மகன்களில், யாகாத்; 23  எப்ரோனின் மகன்களில் தலைவராக இருந்த எரியா,+ இரண்டாவதாக அமரியா, மூன்றாவதாக யகாசியேல், நான்காவதாக எக்காமியாம். 24  ஊசியேலின் மகன்களில், மீகா; மீகாவின் மகன்களில், சாமீர்; 25  மீகாவின் சகோதரன் இஷியா; இஷியாவின் மகன்களில், சகரியா. 26  மெராரியின்+ மகன்கள்: மகேலி, மூசி; யாசியாவின் வம்சத்தில், பெனோ. 27  மெராரியின் வம்சத்தில் வந்த யாசியாவின் வம்சத்தார்: பெனோ, சோகாம், சக்கூர், இப்ரி; 28  மகேலியின் மகன் எலெயாசார். எலெயாசாருக்கு மகன்கள் இல்லை;+ 29  கீசின் மகன்களில், யெர்மெயேல்; 30  மூசியின் மகன்களில், மகேலி, ஏதேர், யெரிமோத். இந்த லேவியர்கள் எல்லாரும் தங்களுடைய தந்தைவழிக் குடும்பம்வாரியாகப் பட்டியலிடப்பட்டவர்கள். 31  அவர்களுடைய சகோதரர்களான ஆரோனின் வம்சத்தார் செய்தது போலவே இவர்களும் தாவீது ராஜா, சாதோக், அகிமெலேக்கு, குருமார்களின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள், லேவியர்களின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் ஆகியோரின் முன்னால் குலுக்கல்+ போட்டார்கள். தந்தைவழிக் குடும்பத் தலைவர்களில் மூத்தவர்களும் சரி, இளையவர்களும் சரி, சரிசமமாக நடத்தப்பட்டார்கள்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா