1 நாளாகமம் 27:1-34

27  ராஜாவின் படையில் இஸ்ரவேல் வீரர்கள் பல பிரிவுகளாகச் சேவை செய்தார்கள். தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள், ஆயிரம் வீரர்களுக்குத் தலைவர்கள், நூறு வீரர்களுக்குத் தலைவர்கள்,+ ராஜாவுக்காக அந்தப் பிரிவுகளைக் கவனித்துக்கொண்ட அதிகாரிகள்+ ஆகியோர் அந்தப் பிரிவுகளில் இருந்தார்கள். வருஷம் முழுக்க ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிரிவினர் சேவை செய்தார்கள். ஒவ்வொரு பிரிவிலும் 24,000 பேர் இருந்தார்கள். அந்தப் பிரிவுகள் இவையே:  முதலாம் மாதம் சேவை செய்த முதலாவது பிரிவுக்கு சப்தியேலின் மகன் யாஷோபியாம்+ தலைவராக இருந்தார். அவருடைய பிரிவில் 24,000 பேர் இருந்தார்கள்;  அவர் பாரேசின்+ வம்சத்தில் வந்தவர். முதலாம் மாதம் சேவை செய்த பிரிவிலுள்ள எல்லா அதிகாரிகளுக்கும் தலைவராக இருந்தார்.  இரண்டாம் மாதம் சேவை செய்த பிரிவுக்கு தோதாய்+ தலைவராக இருந்தார்; இவர் அகோகி+ வம்சத்தில் வந்தவர்; இவருக்குக் கீழே மிக்லோத் என்பவர் அதிகாரியாக இருந்தார். அவருடைய பிரிவில் 24,000 வீரர்கள் இருந்தார்கள்.  மூன்றாம் மாதம் சேவை செய்த மூன்றாவது பிரிவுக்கு பெனாயா+ தலைவராக இருந்தார்; இவர் முதன்மை குருவாகிய யோய்தாவின்+ மகன். அவருடைய பிரிவில் 24,000 பேர் இருந்தார்கள்.  மாவீரர்கள் முப்பது பேரில் பெனாயா ஒருவராக இருந்தார். அவர்களுக்குத் தலைவராகவும் இருந்தார். அந்தப் பிரிவுக்கு அவருடைய மகன் அமிசபாத் அதிகாரியாக இருந்தார்.  நான்காம் மாதம் சேவை செய்த நான்காவது பிரிவுக்கு யோவாபின் சகோதரன்+ ஆசகேல்+ தலைவர். அவருக்குப் பிறகு அவருடைய மகன் செபதியா தலைவரானார். அவருடைய பிரிவில் 24,000 வீரர்கள் இருந்தார்கள்.  ஐந்தாம் மாதம் சேவை செய்த ஐந்தாவது பிரிவுக்கு இஸ்ராகியனான சம்கூத் தலைவராக இருந்தார். அவருடைய பிரிவில் 24,000 வீரர்கள் இருந்தார்கள்.  ஆறாம் மாதம் சேவை செய்த ஆறாவது பிரிவுக்கு ஈரா+ தலைவராக இருந்தார்; இவர் தெக்கோவாவைச்+ சேர்ந்த இக்கேசின் மகன். இவருடைய பிரிவில் 24,000 வீரர்கள் இருந்தார்கள். 10  ஏழாம் மாதம் சேவை செய்த ஏழாவது பிரிவுக்கு பெலோனியனான ஏலெஸ்+ தலைவராக இருந்தார்; இவர் எப்பிராயீமியர். இவருடைய பிரிவில் 24,000 வீரர்கள் இருந்தார்கள். 11  எட்டாம் மாதம் சேவை செய்த எட்டாவது பிரிவுக்கு உஷாத்தியரான சிபெக்காய்+ தலைவராக இருந்தார்; இவர் சேராகியர்.+ இவருடைய பிரிவில் 24,000 வீரர்கள் இருந்தார்கள். 12  ஒன்பதாம் மாதம் சேவை செய்த ஒன்பதாவது பிரிவுக்கு ஆனதோத்தியரான+ அபியேசர்+ தலைவராக இருந்தார்; இவர் பென்யமீனியர். இவருடைய பிரிவில் 24,000 வீரர்கள் இருந்தார்கள். 13  பத்தாம் மாதம் சேவை செய்த 10-வது பிரிவுக்கு நெத்தோபாத்தியரான மகராய்+ தலைவராக இருந்தார்; இவர் சேராகியர்.+ இவருடைய பிரிவில் 24,000 வீரர்கள் இருந்தார்கள். 14  பதினொன்றாம் மாதம் சேவை செய்த 11-வது பிரிவுக்கு பிரத்தோனியரான பெனாயா+ தலைவராக இருந்தார்; இவர் எப்பிராயீம் வம்சத்தைச் சேர்ந்தவர். இவருடைய பிரிவில் 24,000 வீரர்கள் இருந்தார்கள். 15  பன்னிரண்டாம் மாதம் சேவை செய்த 12-வது பிரிவுக்கு நெத்தோபாத்தியரான எல்தாய் தலைவராக இருந்தார்; இவர் ஒத்னியேல் வம்சத்தில் வந்தவர். இவருடைய பிரிவில் 24,000 வீரர்கள் இருந்தார்கள். 16  இஸ்ரவேல் கோத்திரத் தலைவர்கள்: ரூபன் கோத்திரத்துக்கு சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோன் கோத்திரத்துக்கு மாக்காவின் மகன் செப்பத்தியா; 17  லேவி கோத்திரத்துக்கு கேமுவேலின் மகன் அஷபியா; ஆரோன் வம்சத்துக்கு சாதோக்; 18  யூதா கோத்திரத்துக்கு எலிகூ,+ இவர் தாவீதின் அண்ணன்களில் ஒருவர்; இசக்கார் கோத்திரத்துக்கு மிகாவேலின் மகன் உம்ரி; 19  செபுலோன் கோத்திரத்துக்கு ஒபதியாவின் மகன் இஸ்மாயா; நப்தலி கோத்திரத்துக்கு அசரியேலின் மகன் யெரிமோத்; 20  எப்பிராயீம் கோத்திரத்துக்கு அசசியாவின் மகன் ஓசெயா; மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கு பெதாயாவின் மகன் யோவேல். 21  கீலேயாத்தில் குடியிருந்த மனாசேயின் இன்னொரு பாதிக் கோத்திரத்துக்கு சகரியாவின் மகன் இத்தோ; பென்யமீன் கோத்திரத்துக்கு அப்னேரின்+ மகன் யாசீயேல்; 22  தாண் கோத்திரத்துக்கு எரோகாமின் மகன் அசரெயேல். இவர்களே இஸ்ரவேல் கோத்திரத்தின் தலைவர்கள். 23  இருபது அல்லது அதற்குக் குறைவான வயதுள்ளவர்களை தாவீது கணக்கெடுக்கவில்லை. ஏனென்றால், இஸ்ரவேலர்களை வானத்து நட்சத்திரங்களைப் போல் பெருகச் செய்வதாக யெகோவா வாக்குறுதி கொடுத்திருந்தார்.+ 24  செருயாவின் மகன் யோவாப் இஸ்ரவேல் மக்களைக் கணக்கெடுக்க ஆரம்பித்திருந்தார், ஆனால் முடிக்கவில்லை. கணக்கெடுத்த காரணத்துக்காக இஸ்ரவேல் மக்கள்மீது கடவுள் கோபப்பட்டார்.+ தாவீது ராஜாவின் காலத்தில் எழுதப்பட்ட சரித்திரப் பதிவுகளில் அந்த எண்ணிக்கை பதிவு செய்யப்படவில்லை. 25  ராஜாவின் கஜானாவுக்கு+ ஆதியேலின் மகன் அஸ்மாவேத் அதிகாரியாக இருந்தார். வயல்வெளிகளிலும் நகரங்களிலும் கிராமங்களிலும் கோபுரங்களிலும் இருந்த கிடங்குகளுக்கு உசியாவின் மகன் யோனத்தான் அதிகாரியாக இருந்தார். 26  வயலில் பயிரிடுகிற விவசாயிகளுக்கு கேலூப்பின் மகன் எஸ்ரி அதிகாரியாக இருந்தார். 27  ராமா ஊரைச் சேர்ந்த சீமேயி திராட்சைத் தோட்டங்களை மேற்பார்வை செய்தார். திராட்சமது கிடங்குகளுக்கு சேப்பாமை* சேர்ந்த சப்தி அதிகாரியாக இருந்தார். 28  சேப்பெல்லாவில்+ இருந்த ஒலிவத் தோப்புகளுக்கும் காட்டத்தி மரங்களுக்கும்+ கெதேரா ஊரைச் சேர்ந்த பாகால்-கானான் அதிகாரியாக இருந்தார்; எண்ணெய்க் கிடங்குகளுக்கு யோவாஸ் அதிகாரியாக இருந்தார். 29  சாரோனில்+ மேய்கிற மாட்டு மந்தைகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சித்ராய் மேற்பார்வையாளராக இருந்தார்; சமவெளிகளில் மேய்கிற மாட்டு மந்தைகளுக்கு அத்லாயின் மகன் சாப்பாத் மேற்பார்வையாளராக இருந்தார். 30  ஒட்டகங்களுக்கு இஸ்மவேலரான ஓபில் மேற்பார்வையாளராக இருந்தார். கழுதைகளுக்கு மெரோனோத்தியரான எகேதியா மேற்பார்வையாளராக இருந்தார். 31  ஆட்டு மந்தைகளுக்கு ஆகாரியரான யாசிஸ் மேற்பார்வையாளராக இருந்தார். இவர்கள் எல்லாரும் தாவீது ராஜாவின் சொத்துப்பத்துகளை மேற்பார்வை செய்துவந்தார்கள். 32  தாவீதின் அண்ணன் மகனான யோனத்தான்+ புத்திசாலியாக இருந்தார்; அவர் ஆலோசகர்களில் ஒருவராகவும், செயலாளராகவும் இருந்தார். அக்மோனியின் மகன் யெகியேல் ராஜாவின் மகன்களைக்+ கவனித்துக்கொண்டார். 33  அகித்தோப்பேல்+ ராஜாவின் ஆலோசகர்களில் ஒருவர்; அற்கியனான ஊசாய்+ ராஜாவின் நண்பராக* இருந்தார். 34  அகித்தோப்பேலுக்குப் பின்பு பெனாயாவின்+ மகன் யோய்தாவும் அபியத்தாரும்+ ஆலோசகர்களாக இருந்தார்கள்; யோவாப்+ படைத் தளபதியாக இருந்தார்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “சிப்மோத்தை.”
வே.வா., “ஆலோசகராக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா