1 நாளாகமம் 7:1-40

7  இசக்காரின் மகன்கள்: தோலா, பூவா, யாசூப், சிம்ரோன்+ என நான்கு பேர்.  தோலாவின் மகன்கள்: உசீ, ரெபாயா, யெரியேல், யக்மாய், இப்சாம், ஷெமுவேல்; இவர்கள் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவர்களாக இருந்தார்கள். தோலாவின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மாவீரர்களாக இருந்தார்கள், தாவீதின் காலத்தில் அவர்களுடைய எண்ணிக்கை 22,600.  உசீயின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்: இஸ்ரகியா, இவருடைய மகன்கள் மிகாவேல், ஒபதியா, யோவேல், இஷியா. இந்த ஐந்து பேரும் தலைவர்களாக இருந்தார்கள்.  இவர்களுடைய வம்சத்தில் வந்தவர்களுக்கு நிறைய மனைவிகளும் மகன்களும் இருந்தார்கள். அதனால், போர் செய்வதற்கு அவர்களுடைய தந்தைவழியில் மொத்தம் 36,000 போர்வீரர்கள் இருந்தார்கள்.  இசக்கார் வம்சத்தைச் சேர்ந்த மற்ற குடும்பங்களில் இருந்த அவர்களுடைய சகோதரர்கள் மாவீரர்களாக இருந்தார்கள். அவர்கள் மொத்தம் 87,000 பேர். இவர்களுடைய பெயர்கள் வம்சாவளிப் பட்டியலில் இருக்கின்றன.+  பென்யமீனின் மகன்கள்:+ பேலா,+ பெகேர்,+ யெதியாயேல்+ என மூன்று பேர்.  பேலாவின் மகன்கள்: இஸ்போன், உசீ, ஊசியேல், யெரிமோத், இரி. இந்த ஐந்து பேரும் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவர்களாகவும் மாவீரர்களாகவும் இருந்தார்கள். இவர்களுடைய வம்சாவளிப் பட்டியலில் மொத்தம் 22,034 ஆட்களின் பெயர்கள் இருக்கின்றன.+  பெகேரின் மகன்கள்: செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, எரேமோத், அபியா, ஆனதோத், அலெமேத்; இவர்கள் எல்லாரும் பெகேரின் மகன்கள்.  இவர்களுடைய வம்சத்தில் குடும்பத் தலைவர்களாகவும் மாவீரர்களாகவும் இருந்தவர்கள் மொத்தம் 20,200 பேர்; வம்சாவளிப் பட்டியலில் இவர்களுடைய பெயர்கள் இருக்கின்றன. 10  யெதியாயேலின்+ வம்சத்தில் வந்தவர்கள்: அவருடைய மகன் பில்கான், பில்கானின் மகன்களான எயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார். 11  யெதியாயேல் வம்சத்தில் வந்த இவர்கள் எல்லாரும் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களுடைய வம்சத்தில் வந்தவர்களில் போருக்குத் தயாராக இருந்த மாவீரர்கள் 17,200 பேர். 12  சுப்பீமியரும் உப்பிமியரும்* இர்+ என்பவரின் வம்சத்தில் வந்தவர்கள்; ஊசிமியர்* ஆகேரின் வம்சத்தில் வந்தவர்கள். 13  நப்தலியின் மகன்கள்:+ யாத்ஸியல், கூனி, எத்செர், சல்லூம்; இவர்கள் பில்காளின் வம்சத்தில்+ வந்தவர்கள். 14  மனாசேயின்+ மகன்கள்: அஸ்ரியேல், இவர் மனாசேயின் மறுமனைவிக்குப் பிறந்தவர். அவள் சீரியாவைச் சேர்ந்த பெண். (கீலேயாத்தின் தகப்பன் மாகீரும்+ இவளுக்குப் பிறந்தவர். 15  உப்பிமுக்கும் சுப்பீமுக்கும் மாகீர் திருமணம் செய்து வைத்தார்; இவர்களுடைய சகோதரி மாக்காள்.) மனாசேயின் இரண்டாம் மகன் செலோப்பியாத்,+ இவருக்கு மகள்கள்தான் இருந்தார்கள்.+ 16  மாகீரின் மனைவியான மாக்காள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு பேரேஸ் என்று பெயர் வைத்தாள். அவனுடைய சகோதரன் பெயர் சேரேஸ்; அவனுடைய மகன்கள்: ஊலாம், ரெக்கேம். 17  ஊலாமின் மகன் பேதான்; இவர்கள் மனாசேயின் பேரனும் மாகீரின் மகனுமாகிய கீலேயாத்தின் வம்சத்தில் வந்தவர்கள். 18  கீலேயாத்தின் சகோதரி அம்மொளெகேத். இஸ்கோத்தையும் அபியேசரையும் மக்லாவையும் அவள் பெற்றெடுத்தாள். 19  செமீதாவின் மகன்கள்: அகியான், சீகேம், லிக்கே, அனியாம். 20  எப்பிராயீமின் வம்சத்தில்+ வந்தவர்கள்: அவருடைய மகன் சுத்தெலாக்,+ சுத்தெலாக்கின் மகன் பேரேத், பேரேத்தின் மகன் தாகாத், தாகாத்தின் மகன் எலாதா, எலாதாவின் மகன் தாகாத், 21  தாகாத்தின் மகன் சாபாத், சாபாத்தின் மகன் சுத்தெலாக்; ஏத்சேரும் எலியத்தும்கூட எப்பிராயீமின் மகன்கள். எப்பிராயீம் வம்சத்தில் வந்தவர்களுடைய கால்நடைகளைப் பிடித்து வருவதற்காக ஒருசமயம் காத்+ நகரத்தைச் சேர்ந்தவர்கள் போனார்கள்; அப்போது, ஏச்சேரையும் எலியத்தையும் அவர்கள் கொன்றுபோட்டார்கள். 22  அவர்களுடைய தகப்பன் எப்பிராயீம் அவர்களுக்காகப் பல நாட்கள் துக்கம் அனுசரித்தார்; ஆறுதல் சொல்ல அவருடைய சகோதரர்கள் அடிக்கடி வந்தார்கள். 23  பின்பு, அவர் தன்னுடைய மனைவியோடு உறவுகொண்டார்; அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றாள்; அந்தக் குடும்பத்துக்குக் கஷ்டம் வந்த சமயத்தில் அவன் பிறந்ததால் அவனுக்கு பெரீயா* என்று அவர் பெயர் வைத்தார்; 24  அவருடைய மகள் பெயர் ஷீராள்; மேல் பெத்-ஓரோனையும்+ கீழ் பெத்-ஓரோனையும்+ ஊசேன்-ஷீராவையும் அவள் கட்டினாள். 25  ரேப்பாக்கும் ரேசேப்பும் எப்பிராயீம் வம்சத்தில் வந்தவர்கள்; ரேசேப்பின் மகன் தேலாக், தேலாக்கின் மகன் தாகான், 26  தாகானின் மகன் லாதான், லாதானின் மகன் அம்மியூத், அம்மியூத்தின் மகன் எலிஷாமா, 27  எலிஷாமாவின் மகன் நூன், நூனின் மகன் யோசுவா.*+ 28  அவர்களுக்குச் சொந்தமான இடங்கள்: பெத்தேலும்+ அதன் சிற்றூர்களும்,* கிழக்கே நாரானும், மேற்கே கேசேரும் அதன் சிற்றூர்களும், சீகேமும் அதன் சிற்றூர்களும், அய்யாவும்* அதன் சிற்றூர்களும்; 29  மனாசே வம்சத்தாருடைய எல்லைக்குப் பக்கத்திலிருந்த பகுதிகளான பெத்-செயானும்+ அதன் சிற்றூர்களும், தானாக்கும்+ அதன் சிற்றூர்களும், மெகிதோவும்+ அதன் சிற்றூர்களும், தோரும்+ அதன் சிற்றூர்களுமே. இந்தப் பகுதிகளில் இஸ்ரவேலின் மகனாகிய யோசேப்பின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் குடியிருந்தார்கள். 30  ஆசேரின் மகன்கள்: இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா.+ இவர்களுடைய சகோதரி சேராள்.+ 31  பெரீயாவின் மகன்கள்: ஹேபெர், மல்கியேல், இவர் பிர்சாவீத்தின் தகப்பன். 32  ஹேபெரின் மகன்கள்: யப்லேத், சோமேர், ஓத்தாம். அவர்களுடைய சகோதரி சூவா. 33  யப்லேத்தின் மகன்கள்: பாசாக், பிம்மால், அஸ்வாத். இவர்களே யப்லேத்தின் மகன்கள். 34  சேமேரின்* மகன்கள்: அகி, ரோகா, எகூபா, அராம். 35  அவருடைய சகோதரன் ஏலேமின்* மகன்கள்: சோபாகு, இம்ணா, சேலேஸ், ஆமால். 36  சோபாகுவின் மகன்கள்: சூவாக், அர்னெப்பர், சூவால், பேரி, இம்ரா, 37  பேசேர், ஓத், ஷம்மா, சில்சா, இத்தரான், பீரா. 38  யெத்தேரின் மகன்கள்: எப்புன்னே, பிஸ்பா, ஏரா. 39  உல்லாவின் மகன்கள்: ஆராக், அன்னியேல், ரித்சியா. 40  இவர்கள் எல்லாரும் ஆசேர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள், தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள், மிகச் சிறந்த மாவீரர்கள், மிக முக்கியமான தலைவர்கள்; வம்சாவளிப் பட்டியலின்படி,+ போர் செய்வதற்கு மொத்தம் 26,000 போர்வீரர்கள்+ இருந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “சுப்பீமும், உப்பிமும்.”
அல்லது, “ஊசிம்.”
அர்த்தம், “கஷ்டத்துடன்.”
வே.வா., “யெஹோஷுவா”; அர்த்தம், “யெகோவாவே மீட்பு.”
வே.வா., “அதைச் சுற்றியுள்ள ஊர்களும்.”
அல்லது, “காசாவும்.” ஆனால், பெலிஸ்தியாவிலுள்ள காசா அல்ல.
32-ஆம் வசனத்தில் சோமேர் என அழைக்கப்படுகிறார்.
32-ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்ட ஓத்தாமாக இருக்கலாம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா