1 நாளாகமம் 8:1-40

8  பென்யமீனின்+ மகன்கள்: மூத்த மகன் பேலா,+ இரண்டாம் மகன் அஸ்பேல்,+ மூன்றாம் மகன் அகராக்,  நான்காம் மகன் நோஹா, ஐந்தாம் மகன் ரஃபா.  பேலாவின் மகன்கள்: ஆதார், கேரா,+ அபியுத்,  அபிசுவா, நாகமான், அகோவா,  கேரா, செப்புப்பான், ஊராம்.  கெபா+ நகர மக்களுக்கு ஏகூத்தின் மகன்கள் தலைவர்களாக இருந்தார்கள்; மானகாத் என்ற இடத்துக்கு அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள். தந்தைவழிக் குடும்பத் தலைவர்களாக இருந்த ஏகூத்தின் மகன்கள்:  நாகமான், அகியா, கேரா; கேராவின் தலைமையில் அவர்கள் மானகாத்துக்குக் கொண்டுபோகப்பட்டார்கள். இவர் ஊத்சாவுக்கும் அகியூத்துக்கும் தகப்பன்.  மோவாப் பகுதியில் குடியிருந்த மக்களை* சகராயீம் துரத்திவிட்டார்; அதன் பின்பு, அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள். ஊசிமும் பாராளும் அவருடைய மனைவிகள்.  அவருடைய இன்னொரு மனைவியான ஓதேஸ் மூலம் அவருக்குப் பிறந்த மகன்கள்: யோபாப், சீபீயா, மேசா, மல்காம், 10  எயூஸ், சாகியா, மிர்மா. இவர்களே அவருடைய மகன்கள், தங்களுடைய தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள். 11  அவருடைய மனைவி ஊசிம் அவருக்கு அபிதூப்பையும் எல்பாலையும் பெற்றாள். 12  எல்பாலின் மகன்கள்: ஏபேர், மீஷாம், சாமேத் (இவர் ஓனோவையும்+ லோதுவையும்+ அதன் சிற்றூர்களையும்* கட்டினார்), 13  பெரீயா, சேமா. இவர்கள் ஆயலோன்+ நகர மக்களின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள். இவர்கள் காத் நகரத்தில் குடியிருந்தவர்களைத் துரத்திவிட்டார்கள். 14  அகியோ, சாஷாக், எரேமோத், 15  செபதியா, ஆராத், ஏதேர், 16  மிகாவேல், இஷ்பா, யோஹா ஆகியோர் பெரீயாவின் வம்சத்தில் வந்தவர்கள்; 17  செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஹேபெர், 18  இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் ஆகியோர் எல்பாலின் வம்சத்தில் வந்தவர்கள்; 19  யாக்கிம், சிக்ரி, சப்தி, 20  எலியேனாய், சில்த்தாய், ஏலியேல், 21  அதாயா, பெராயா, சிம்ராத் ஆகியோர் சீமேயியின் வம்சத்தில் வந்தவர்கள்; 22  இஸ்பான், ஏபேர், ஏலியேல், 23  அப்தோன், சிக்ரி, ஆனான், 24  அனனியா, ஏலாம், அந்தோதியா, 25  இபிதியா, பெனூவேல் ஆகியோர் சாஷாக்கின் வம்சத்தில் வந்தவர்கள்; 26  சம்சேராய், ஸெகரியா, அத்தாலியா, 27  யரெஷியா, எலியா, சிக்ரி ஆகியோர் எரோகாமின் வம்சத்தில் வந்தவர்கள். 28  வம்சாவளிப் பட்டியலின்படி, இவர்கள் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தின் தலைவர்களாக இருந்தார்கள். இந்தத் தலைவர்கள் எருசலேமில் குடியிருந்தார்கள். 29  கிபியோனின் தகப்பனான எயியேல் கிபியோனில்+ குடியிருந்தார். அவருடைய மனைவி பெயர் மாக்காள்.+ 30  அவருடைய மூத்த மகன் அப்தோன்; மற்ற மகன்கள்: சூர், கீஸ், பாகால், நாதாப், 31  கேதோர், அகியோ, சேகேர். 32  மிக்லோத்தின் மகன் சிமியா. இவர்கள் எல்லாரும் எருசலேமில் தங்களுடைய சகோதரர்களுக்குப் பக்கத்தில், மற்ற சகோதரர்களுடன் குடியிருந்தார்கள். 33  நேரின்+ மகன் கீஸ்; கீசின் மகன் சவுல்;+ சவுலின் மகன்கள்: யோனத்தான்,+ மல்கிசூவா,+ அபினதாப்,+ எஸ்பால்.*+ 34  யோனத்தானின் மகன் மெரிபால்.*+ மெரிபாலின் மகன் மீகா.+ 35  மீகாவின் மகன்கள்: பித்தோன், மேலேக், தரியா, ஆகாஸ். 36  ஆகாசின் மகன் யோகதா; யோகதாவின் மகன்கள்: அலெமேத், அஸ்மாவேத், சிம்ரி. சிம்ரியின் மகன் மோசா. 37  மோசாவின் மகன் பினியா; பினியாவின் மகன் ரப்பாஹ், ரப்பாஹின் மகன் எலியாசா, எலியாசாவின் மகன் ஆத்சேல். 38  ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்களுடைய பெயர்கள்: அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான். இவர்கள் எல்லாரும் ஆத்சேலின் மகன்கள். 39  அவருடைய சகோதரன் எசேக்கின் மகன்கள்: மூத்த மகன் ஊலாம், இரண்டாம் மகன் எயூஷ், மூன்றாம் மகன் எலிப்பேலேத். 40  ஊலாமின் மகன்கள் மாவீரர்கள், அம்பு எறிவதில் வல்லவர்கள்; இவர்களுக்கு நிறைய மகன்களும் பேரன்களும் இருந்தார்கள், மொத்தம் 150 பேர். இவர்கள் எல்லாரும் பென்யமீன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “தன்னுடைய மனைவிகளான ஊசிமையும் பாராளையும்.”
வே.வா., “அதைச் சுற்றியுள்ள ஊர்களையும்.”
இஸ்போசேத் என்றும் அழைக்கப்படுகிறார்.
மேவிபோசேத் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா