யோவானின் முதலாம் கடிதம் 1:1-10

1  ஆரம்பம்முதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களால் பார்த்ததும், நாங்கள் கவனித்ததும், கைகளால் தொட்டுப் பார்த்ததுமான வாழ்வளிக்கும் வார்த்தையை+ உங்களுக்குச் சொல்கிறோம்.  (ஆம், முடிவில்லாத வாழ்வு+ வெளிப்படுத்தப்பட்டது; அதை நாங்கள் பார்த்திருக்கிறோம், பரலோகத் தகப்பனிடம் இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த வாழ்வைப் பற்றியே இப்போது உங்களுக்குச் சாட்சியாகச் சொல்கிறோம்.)+  பரலோகத் தகப்பனோடும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவோடும் நாம் ஒன்றுபட்டிருப்பது*+ போலவே, நீங்கள் எங்களோடு ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்பதற்காக, நாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் உங்களுக்குச் சொல்கிறோம்.+  நம்முடைய சந்தோஷம் நிறைவாய் இருப்பதற்காக இந்த விஷயங்களை உங்களுக்கு எழுதுகிறோம்.  நாங்கள் அவரிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவித்து வருகிற செய்தி இதுதான்: கடவுள் ஒளியாக இருக்கிறார்;+ இருள் என்பது அவரிடம் துளிகூட இல்லை.  “அவரோடு ஒன்றுபட்டிருக்கிறோம்” என்று சொல்லிக்கொண்டு இருளிலேயே நடந்தால், நாம் பொய் சொல்கிறவர்களாகவும் சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களாகவும் இருப்போம்.+  ஆனாலும், அவர் ஒளியில் இருப்பதுபோல் நாமும் ஒளியில் நடந்தால், ஒருவரோடொருவர் ஒன்றுபட்டிருப்போம். அதோடு, அவருடைய மகனான இயேசுவின் இரத்தம் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்கும்.+  “எங்களிடம் பாவம் இல்லை” என்று சொன்னால், நம்மையே ஏமாற்றிக்கொள்கிறவர்களாக இருப்போம்;+ நமக்குள் சத்தியம் இருக்காது.  நம்முடைய பாவங்களை ஒத்துக்கொண்டால், கடவுள் அந்தப் பாவங்களை மன்னித்து, அநீதியான எல்லாவற்றிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குவார்.+ ஏனென்றால், அவர் நம்பகமானவர், நீதியுள்ளவர். 10  “நாங்கள் பாவம் செய்யவில்லை” என்று சொன்னால், கடவுள் ஒரு பொய்யர் என்று சொல்வதுபோல் இருக்கிறது. அவருடைய வார்த்தை நம் உள்ளத்தில் இருக்காது.

அடிக்குறிப்புகள்

வே.வா., “நல்லுறவை அனுபவிப்பது.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா