2 நாளாகமம் 17:1-19

17  அடுத்து, அவருடைய மகன் யோசபாத்+ ராஜாவாகி, இஸ்ரவேலில் தன்னுடைய ஆட்சியை வலுப்படுத்தினார்.  யூதாவிலிருந்த மதில் சூழ்ந்த நகரங்கள் எல்லாவற்றிலும் தன் படைகளை நிறுத்தினார். அதுமட்டுமல்ல, யூதா தேசத்திலும் தன்னுடைய அப்பா ஆசா கைப்பற்றிய எப்பிராயீம் நகரங்களிலும்+ புறக்காவல் படைகளை நிறுத்தினார்.  பாகால் தெய்வங்களை வணங்காமல் யோசபாத் தன்னுடைய மூதாதையான தாவீதின் வழியில்+ நடந்ததால் யெகோவா எப்போதும் அவருக்குத் துணையாக இருந்தார்.  அவர் தன்னுடைய அப்பாவின் கடவுளைத் தேடி,+ அவர் கொடுத்த கட்டளைகளின்படி நடந்தார்; இஸ்ரவேல் தேசத்து மக்களுடைய பழக்கவழக்கங்களின்படி நடக்கவில்லை.+  அவருடைய ஆட்சியை யெகோவா வலுப்படுத்தினார்.+ யூதா மக்கள் எல்லாரும் அவருக்கு அன்பளிப்புகளைக் கொடுத்துவந்தார்கள். அவருக்குச் செல்வமும் புகழும் ஏராளமாகக் கிடைத்தன.+  அவர் யெகோவாவின் வழிகளில் தைரியமாக நடந்தார். யூதா தேசத்திலிருந்த ஆராதனை மேடுகளையும் பூஜைக் கம்பங்களையும்* அழித்துப்போட்டார்.+  அவர் ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில், பென்னாயில், ஒபதியா, சகரியா, நெதனெயேல், மிகாயா ஆகிய அதிகாரிகளை வரவழைத்து, யூதாவின் நகரங்களில் இருப்பவர்களுக்குக் கற்றுக்கொடுக்கச் சொல்லி அனுப்பினார்.  லேவியர்களான செமாயா, நெத்தனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யெகோனத்தான், அதோனியா, தொபையா, தோபத்தோனியா ஆகியோரும் குருமார்களான எலிஷாமாவும் யோராமும் அவர்களுடன் போனார்கள்.+  யெகோவாவின் திருச்சட்ட புத்தகத்தை அவர்கள் எடுத்துக்கொண்டு போய் யூதா மக்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள்.+ அதற்காக, யூதா தேசத்திலுள்ள எல்லா நகரங்களுக்கும் போனார்கள். 10  யூதாவைச் சுற்றியிருந்த எல்லா ராஜ்யங்களும் யெகோவாவை நினைத்துப் பயந்து நடுங்கியதால் யோசபாத்துக்கு எதிராகப் போர் செய்ய வரவில்லை. 11  பெலிஸ்தியர்கள் யோசபாத்துக்குப் பரிசுகளைக் கொண்டுவந்து கொடுத்தார்கள், பணத்தைக் கப்பமாகக் கட்டினார்கள். அரேபியர்கள் தங்களுடைய மந்தையிலிருந்து 7,700 செம்மறியாட்டுக் கடாக்களையும் 7,700 வெள்ளாட்டுக் கடாக்களையும் கொண்டுவந்து கொடுத்தார்கள். 12  யோசபாத் நாளுக்கு நாள் வலிமைமிக்கவராக ஆனார்.+ யூதா தேசத்தில், கோட்டைகளையும் கிடங்குகளுக்கான நகரங்களையும் கட்டிக்கொண்டே இருந்தார்.+ 13  யூதாவின் நகரங்களில் பெரிய பெரிய திட்டங்களை நிறைவேற்றினார். எருசலேமில் அவருக்கு மாவீரர்கள் இருந்தார்கள். 14  இந்த மாவீரர்களைக் குடும்பம்வாரியாகப் பிரித்தார்; யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களில் ஆயிரம் வீரர்களுக்குத் தலைவர்கள் இருந்தார்கள். அவர்களில், அத்ணா என்ற தலைவர் இருந்தார். அவருடன் 3,00,000 மாவீரர்கள் இருந்தார்கள்.+ 15  அவருக்குக்கீழ் யெகோனான் என்பவர் தலைவராக இருந்தார்; அவருடன் 2,80,000 வீரர்கள் இருந்தார்கள். 16  அதோடு, அத்ணாவுக்குக்கீழ் சிக்ரியின் மகன் அமசியா இருந்தார். இவர் யெகோவாவுக்குச் சேவை செய்ய சந்தோஷமாக முன்வந்தார். அவருடன் 2,00,000 மாவீரர்கள் இருந்தார்கள். 17  பென்யமீன்+ கோத்திரத்தில், மாவீரரான எலியாதா என்பவர் இருந்தார், வில்லும் கேடயமும் வைத்திருந்த 2,00,000 வீரர்கள் அவருடன் இருந்தார்கள்.+ 18  அவருக்குக்கீழ் யெகோஸபாத் இருந்தார். அவருடன் 1,80,000 வீரர்கள் இருந்தார்கள், அவர்கள் போர்ப் பயிற்சி பெற்றவர்கள். 19  யூதா முழுவதிலும் இருந்த மதில் சூழ்ந்த நகரங்களில் ராஜா நியமித்திருந்த ஆட்களைத் தவிர, இவர்களும் ராஜாவுக்குச் சேவை செய்தார்கள்.+

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா