2 நாளாகமம் 19:1-11

19  பின்பு, யூதாவின் ராஜாவான யோசபாத் எருசலேமில் உள்ள தன்னுடைய அரண்மனைக்குப் பத்திரமாக* திரும்பி வந்தார்.+  தரிசனக்காரரான அனானியின்+ மகன் யெகூ+ அவரைப் பார்க்க வந்தார். அவர் யோசபாத்திடம், “மோசமான ஆட்களுக்கு நீங்கள் உதவி செய்தது சரியா?+ யெகோவாவை வெறுக்கிற ஆட்கள்மீது அன்பு காட்டியது சரியா?+ இதனால் யெகோவா உங்கள்மேல் பயங்கர கோபமாக இருக்கிறார்.  ஆனாலும், நீங்கள் செய்த நல்ல காரியங்களை அவர் கவனித்திருக்கிறார்.+ ஏனென்றால், நீங்கள் பூஜைக் கம்பங்களை* அழித்தீர்கள், உண்மைக் கடவுளைத் தேட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தீர்கள்”*+ என்று சொன்னார்.  எருசலேமில் வாழ்ந்த யோசபாத் தன் மக்களை மறுபடியும் போய்ச் சந்திப்பதற்காகப் பயணம் செய்தார்; அதற்காக பெயெர்-செபாமுதல் எப்பிராயீம் மலைப்பகுதிவரை போனார்;+ தங்கள் முன்னோர்களின் கடவுளான யெகோவாவைத் திரும்பவும் வழிபட ஆரம்பிக்கும்படி+ அவர்களை உற்சாகப்படுத்தினார்.  அதோடு, யூதா தேசத்திலிருந்த மதில் சூழ்ந்த நகரங்கள் ஒவ்வொன்றிலும் நீதிபதிகளை நியமித்தார்.+  அவர்களிடம், “நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது கவனமாக இருங்கள், ஏனென்றால் நீங்கள் யாரோ ஒரு மனிதனின் சார்பாகத் தீர்ப்பு சொல்லவில்லை, யெகோவாவின் சார்பாகத் தீர்ப்பு சொல்கிறீர்கள். நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது அவர் உங்களோடு இருக்கிறார்.+  யெகோவாவுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள்;+ நம்முடைய கடவுளான யெகோவா அநியாயம் செய்ய மாட்டார்,+ பாரபட்சம் பார்க்க மாட்டார்,+ லஞ்சம் வாங்க மாட்டார்.+ அதனால், எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.  அதோடு, எருசலேமிலும் லேவியர்கள், குருமார்கள், தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் ஆகியோரில் சிலரை நீதிபதிகளாக நியமித்தார். அவர்கள் அங்கிருந்த மக்களுடைய வழக்குகளை விசாரித்து யெகோவாவின் சார்பாகத் தீர்ப்பு சொன்னார்கள்.+  அவர்களிடம், “உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கு உண்மையாகச் செய்ய வேண்டும், முழு இதயத்தோடு செய்ய வேண்டும். 10  மற்ற நகரங்களில் இருக்கிற உங்கள் சகோதரர்கள் கொலை வழக்குகளை உங்களிடம் கொண்டுவரலாம்,+ அல்லது ஒரு சட்டத்தையோ கட்டளையையோ விதிமுறைகளையோ நீதித்தீர்ப்புகளையோ பற்றி விளக்கம் கேட்டு வரலாம். அவர்கள் யெகோவாவுக்கு முன்னால் குற்றமுள்ளவர்களாக ஆகிவிடாமல் இருப்பதற்காக அவர்களை நீங்கள் எச்சரிக்க வேண்டும். இல்லாவிட்டால், நீங்களும் அவர்களும் கடவுளுடைய கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும். உங்கள்மீது பழி வராமல் இருக்க வேண்டுமென்றால் நான் சொன்னபடி செய்யுங்கள். 11  யெகோவாவின் சேவை சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் முதன்மை குரு அமரியா கவனிப்பார்.+ ராஜாவின் வேலை சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் இஸ்மவேலின் மகனும் யூதா வம்சத்தின் தலைவருமான செபதியா கவனிப்பார். லேவியர்கள் உங்களுக்காக அதிகாரிகளாய்ச் சேவை செய்வார்கள். தைரியமாக வேலை செய்யுங்கள். நல்லது செய்கிறவர்களுக்கு* யெகோவா துணையாக இருப்பார்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “சமாதானமாக.”
வே.வா., “கடவுளைத் தேடுவதற்கு இதயத்தைத் தயார்படுத்தினீர்கள்.”
வே.வா., “நல்லதுக்கு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா