உன்னதப்பாட்டு 1:1-17

  • தலைசிறந்த பாட்டு (1)

  • இளம் பெண் (2-7)

  • எருசலேம் மகள்கள் (8)

  • ராஜா (9-11)

    • “தங்க ஆபரணங்களால் உன்னை அலங்கரிப்போம்” (11)

  • இளம் பெண் (12-14)

    • “வாசனையான வெள்ளைப்போள பையைப் போல் இருக்கிறார் என் காதலன்” (13)

  • மேய்ப்பன் (15)

    • “என் அன்பே, நீ எத்தனை அழகானவள்!”

  • இளம் பெண் (16, 17)

    • “என் இனிய காதலனே, நீங்கள் அழகானவர்” (16)

1  சாலொமோன் எழுதிய தலைசிறந்த* பாட்டு:+   “உங்கள் உதடுகளால் என்னை முத்தமிடுங்கள்.நீங்கள் காட்டும் நேசம் திராட்சமதுவைவிட இன்பமானது.+   நீங்கள் பூசுகிற எண்ணெயின் வாசனை மணமணக்கிறது.+ உங்களுடைய பெயர், இதமாக ஊற்றப்படுகிற நறுமண எண்ணெய்போல் இருக்கிறது.+ அதனால்தான், இளம் பெண்கள் உங்களை நேசிக்கிறார்கள்.   ராஜா என்னை அவருடைய உள்ளறைக்குள் கொண்டுவந்துவிட்டார்! என்னைக் கூட்டிக்கொண்டு போங்கள், நாம் ஓடிப்போய்விடலாம்! நீங்களும் நானும் ஒன்றுசேர்ந்து சந்தோஷமாக இருக்கலாம். நீங்கள் என்மேல் காட்டுகிற பாசத்தையும் நேசத்தையும் பற்றி ஆசை ஆசையாகப் பேசலாம். திராட்சமதுவைவிட தித்திப்பானது உங்கள் காதல். இளம் பெண்கள் உங்களை நேசிப்பதில் ஆச்சரியமே இல்லை!   எருசலேம் மகள்களே, நான் கறுப்பாக இருந்தாலும் அழகானவள்.நான் கேதாரின் கூடாரங்களைப்+ போன்றவள்,சாலொமோனின் கூடாரத்துணிகளைப்+ போன்றவள்.   நான் கறுப்பாக இருக்கிறேன் என்று பார்க்காதீர்கள்,வெயில் பட்டதால்தான் நான் கறுத்துவிட்டேன். என் அண்ணன்கள் என்மேல் கோபமாக இருந்தார்கள்.அவர்களுடைய திராட்சைத் தோட்டத்துக்கு என்னைக் காவல்காரியாக வைத்தார்கள்.ஆனால், எனக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டத்தைக் காவல்காக்க முடியவில்லை.   உயிருக்கு உயிரான காதலனே,கொஞ்சம் சொல்லுங்கள், உங்கள் ஆடுகளை எங்கே மேய்க்கிறீர்கள்?+மத்தியானத்தில் அவற்றை எங்கே ஓய்வெடுக்க வைக்கிறீர்கள்?துக்கத்தில் முக்காடு போட்ட பெண் போல நான் ஏன் உங்கள் நண்பர்களின் மந்தைகளுக்கு இடையில் அலைய வேண்டும்?”   “பெண்களில் பேரழகியே, உனக்குத் தெரியவில்லை என்றால்மந்தைகள் போன பாதையிலேயே போ.உன் வெள்ளாட்டுக் குட்டிகளை மேய்ப்பர்களின் கூடாரங்களுக்குப் பக்கத்தில் மேய விடு.”   “என் அன்பே, பார்வோனின் ரதங்களில் பூட்டப்பட்ட பெண் குதிரை நீ!+ 10  ஆபரணங்கள்* சூழ்ந்த உன் கன்னங்கள் அழகோ அழகு!முத்துமணி மாலை தவழும் உன் கழுத்து கொள்ளை அழகு! 11  வெள்ளி மணிகள் பதிக்கப்பட்டதங்க ஆபரணங்களால் உன்னை அலங்கரிப்போம்.” 12  “ராஜா அவருடைய வட்டமான மேஜையில் உட்கார்ந்திருக்கும்போது,என் வாசனை எண்ணெய்*+ மணம் பரப்புகிறது. 13  ராத்திரியில் என் மார்புகளுக்கு இடையில் தவழுகிறவாசனையான வெள்ளைப்போள*+ பையைப் போல் இருக்கிறார் என் காதலன். 14  என்-கேதி+ திராட்சைத் தோட்டங்களில் முளைத்திருக்கிறமருதாணி கொத்துபோல்+ மணக்கிறார் என் இனியவர்.” 15  “என் அன்பே, நீ எத்தனை அழகானவள்! நீ எத்தனை அழகானவள்! உன் கண்கள் புறாக் கண்கள்.”+ 16  “என் இனிய காதலனே, நீங்கள் அழகானவர், இனிமையானவர்.+ பசும் புல்வெளிதான் நமக்குப் பஞ்சு மெத்தை. 17  தேவதாரு மரங்கள்தான் நம் வீட்டின்* சட்டங்கள்.ஆபால் மரங்கள்தான் நம் வீட்டின் கூரைகள்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “உன்னத.”
அல்லது, “ஜடைகள்.”
நே.மொ., “சடாமாஞ்சி எண்ணெய்.”
வே.வா., “மாளிகையின்.”