உன்னதப்பாட்டு 6:1-13

  • எருசலேம் மகள்கள் (1)

  • இளம் பெண் (2, 3)

    • “நான் என் காதலனுக்குச் சொந்தம். என் காதலன் எனக்குச் சொந்தம்” (3)

  • ராஜா (4-10)

    • “நீ திர்சா நகரம் போல அழகில் ஜொலிக்கிறாய்” (4)

    • பெண்கள் சொல்வது (10)

  • இளம் பெண் (11, 12)

  • ராஜா (மற்றவர்களும்) (13அ)

  • இளம் பெண் (13ஆ)

  • ராஜா (மற்றவர்களும்) (13இ)

6  “பெண்களில் பேரழகியே,உன் காதலன் எங்கே? எந்தத் திசையில் போனார்? நாங்களும் உன்னோடு சேர்ந்து தேடுகிறோம்.”   “என் காதலன் அவருடைய தோட்டத்துக்குப் போயிருக்கிறார்.நறுமணச் செடிகளின் பாத்திகளுக்குப் போயிருக்கிறார்.அழகிய தோட்டங்களின் நடுவே ஆடுகளை மேய்க்கப் போயிருக்கிறார்.லில்லிப் பூக்களைப் பறிக்கப் போயிருக்கிறார்.+   நான் என் காதலனுக்குச் சொந்தம்.என் காதலன் எனக்குச் சொந்தம்.+ என்னவர் லில்லிப் பூக்களின் நடுவே ஆடுகளை மேய்க்கிறார்.”+   “என் அன்பே, நீ திர்சா நகரம்*+ போல அழகில் ஜொலிக்கிறாய்.+எருசலேம் நகரம் போலக் கண்களைக் கவருகிறாய்.+போர்க் கொடிகளைச் சுற்றி நிற்கும் படைகள் போலப் பிரமிக்க வைக்கிறாய்.+   உன் கண்கள்+ என்னைச் சுண்டியிழுக்கின்றன.உன் பார்வையை என்னைவிட்டுத் திருப்பிவிடு. கீலேயாத் மலைச் சரிவுகளில் இறங்கிவரும் வெள்ளாட்டு மந்தை உன் கூந்தல்.+   குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறிக் கூட்டம் உன் பற்கள்,அவை எல்லாவற்றுக்குமே இரட்டைக் குட்டிகள் இருக்கின்றன.ஒன்றுகூட குறையாமல் இருக்கின்றன.   முக்காட்டுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உன் கன்னங்கள்,வெடித்த மாதுளம் பழங்கள்.   அறுபது ராணிகள் இருந்தாலும்,எண்பது மறுமனைவிகள் இருந்தாலும்,ஏராளமான கன்னிப்பெண்கள் இருந்தாலும்,+   நீ மட்டும்தான் என் புறா,+ என் உத்தமி. உன் தாய்க்கு நீ ஒரே மகள். உன்னைப் பெற்றவளின் செல்ல மகள். இளம் பெண்கள் உன்னைப் பார்க்கிறார்கள், பாராட்டுகிறார்கள்.ராணிகளும் மறுமனைவிகளும் உன்னைப் புகழ்கிறார்கள். 10  ‘யார் இவள்? விடியற்கால ஒளிபோல் பிரகாசிக்கிறாளே!முழு நிலாபோல் அழகாக இருக்கிறாளே!சூரிய வெளிச்சம்போல் தூய்மையாக இருக்கிறாளே!போர்க் கொடிகளைச் சுற்றி நிற்கும் படைகள்போல் பிரமிக்க வைக்கிறாளே!’”+ 11  “பள்ளத்தாக்கில் செடிகொடிகள் துளிர்விட்டிருக்கிறதா,திராட்சைக் கொடிகள் அரும்பு விட்டிருக்கிறதா,மாதுளை மரங்கள் பூப் பூத்திருக்கிறதா என்றெல்லாம் பார்க்கபழமர* தோப்புக்குப்+ போனேன். 12  அதையெல்லாம் பார்க்கிற ஆசையில்,என்னை அறியாமலேயே,ராஜாவின்* ரதங்களுக்குப் பக்கத்தில் போய்விட்டேன்.” 13  “சூலேமியப் பெண்ணே, திரும்பி வா, திரும்பி வா! நாங்கள் மறுபடியும் உன்னைப் பார்க்க வேண்டும்,திரும்பி வா, திரும்பி வா!” “நீங்கள் ஏன் இந்த சூலேமியப் பெண்ணைப் பார்க்க விரும்புகிறீர்கள்?”+ “இரண்டு நடனக் குழுக்களின் நடனத்தைப் போல அவள் இருக்கிறாளே!”

அடிக்குறிப்புகள்

வே.வா., “இனிமையான நகரம்.”
வே.வா., “கொட்டைப் பருப்புகளைத் தரும் மரங்களின்.”
வே.வா., “உயர்ந்த உள்ளம் கொண்டவர்களின்.”