எஸ்றா 5:1-17

  • யூதர்கள் ஆலயத்தைத் திரும்பக் கட்ட ஆரம்பிக்கிறார்கள் (1-5)

  • தரியு ராஜாவுக்கு தத்னாய் எழுதிய கடிதம் (6-17)

5  பின்பு, தீர்க்கதரிசிகளான ஆகாயும்+ இத்தோவின்+ பேரன் சகரியாவும்+ யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்த யூதர்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். தங்களை வழிநடத்திய இஸ்ரவேலின் கடவுளுடைய பெயரில் அதைச் சொன்னார்கள்.  அப்போது, சலாத்தியேலின் மகன் செருபாபேலும்+ யோசதாக்கின் மகன் யெசுவாவும்+ எருசலேமிலிருந்த ஆலயத்தைத் திரும்பக் கட்ட ஆரம்பித்தார்கள்.+ கடவுளுடைய அந்தத் தீர்க்கதரிசிகள் அவர்களோடு இருந்து, அவர்களை ஆதரித்தார்கள்.+  அந்தச் சமயத்தில், ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின் ஆளுநர் தத்னாயும், சேத்தார்-பொஸ்னாயும், அவர்களோடு சேர்ந்தவர்களும் வந்து, “இந்த ஆலயத்தையும் இதன் மதில்களையும் கட்டி முடிக்க உங்களுக்கு யார் உத்தரவு கொடுத்தது?” என்று கேட்டார்கள்.  அதோடு, “யாரெல்லாம் இந்தக் கட்டிடத்தைக் கட்டுகிறீர்கள்? உங்களுடைய பெயர்களைச் சொல்லுங்கள்” என்றார்கள்.  ஆனால், யூத ஜனங்களின் பெரியோர்களை* கடவுள் பாதுகாத்துவந்தார்.*+ அதனால், தரியுவுக்குக் கடிதம் எழுதி அவரிடமிருந்து பதில் வரும்வரை அந்த ஆட்களால் கட்டுமான வேலையை நிறுத்த முடியவில்லை.  ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தின் ஆளுநர் தத்னாயும், சேத்தார்-பொஸ்னாயும், அவரோடு சேர்ந்த துணை ஆளுநர்களும் தரியு ராஜாவுக்குக் கடிதம் எழுதி அனுப்பினார்கள்.  அந்தக் கடிதத்தில், “தரியு ராஜாவே: வாழ்த்துக்கள்!  ராஜாவே, யூதா மாகாணத்திலுள்ள மகா தேவனின் ஆலயத்தை நாங்கள் போய்ப் பார்த்தோம். பெரிய பெரிய கற்களை உருட்டிவந்து கட்டிடத்தைக் கட்டுகிறார்கள். மரச்சட்டங்களை வைத்து மதில்களைக் கட்டுகிறார்கள். ஜனங்கள் மும்முரமாக வேலை செய்கிறார்கள். அதனால் வேலை மடமடவென்று நடக்கிறது.  நாங்கள் அவர்களுடைய பெரியோர்களைப் பார்த்து, ‘இந்த ஆலயத்தையும் இதன் மதில்களையும் கட்டி முடிக்க உங்களுக்கு யார் உத்தரவு கொடுத்தது?’ என்று கேட்டோம்.+ 10  அந்த வேலையைத் தலைமைதாங்கி நடத்துகிறவர்கள் யாரென்று உங்களுக்கு எழுதி அனுப்புவதற்காக அவர்களுடைய பெயர்களைக்கூட கேட்டோம். 11  அதற்கு அவர்கள், ‘பரலோகத்துக்கும் பூமிக்கும் கடவுளாக இருப்பவரின் ஊழியர்கள் நாங்கள். பல வருஷங்களுக்கு முன்பு இஸ்ரவேலின் மகா ராஜா ஒருவர் கட்டி முடித்த ஆலயத்தை+ இப்போது திரும்பக் கட்டிக்கொண்டிருக்கிறோம். 12  எங்கள் முன்னோர்கள் பரலோகத்தின் கடவுளைக் கோபப்படுத்தினார்கள்.+ அதனால் அவர் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் கையில் அவர்களைக் கொடுத்துவிட்டார்.+ அந்தக் கல்தேயன் இந்த ஆலயத்தை அழித்து,+ ஜனங்களை பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.+ 13  ஆனால் பாபிலோன் ராஜா கோரேஸ், தன்னுடைய ஆட்சியின் முதலாம் வருஷத்தில் இந்த ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கு உத்தரவு கொடுத்தார்.+ 14  அதோடு, நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து எடுத்துக்கொண்டு போய் பாபிலோனின் கோயிலில் வைத்த தங்கப் பாத்திரங்களையும் வெள்ளிப் பாத்திரங்களையும்+ ஆளுநராக+ தான் நியமித்திருந்த சேஸ்பாத்சாரிடம்* ஒப்படைத்தார்.+ 15  அப்போது அவரிடம், “இந்தப் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போய் எருசலேமிலுள்ள ஆலயத்தில் வையுங்கள். கடவுளுடைய ஆலயம் முன்பிருந்த இடத்திலேயே திரும்பக் கட்டப்பட வேண்டும்” என்றார்.+ 16  அதன்படியே, சேஸ்பாத்சார் எருசலேமுக்கு வந்து கடவுளுடைய ஆலயத்துக்கு அஸ்திவாரம் போட்டார்.+ அன்று ஆரம்பித்த கட்டுமான வேலை இன்றுவரை நடக்கிறது, இன்னும் முடிவடையவில்லை’+ என்று சொன்னார்கள். 17  அதனால் ராஜாவே, உங்களுக்குச் சரியென்று பட்டால், பாபிலோனின் அரண்மனை கஜானாவை* ஆராயுங்கள். எருசலேமிலிருந்த ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி கோரேஸ் ராஜா உத்தரவு கொடுத்தது உண்மைதானா+ என்று பாருங்கள். அதன்பின், உங்கள் தீர்மானத்தைத் தயவுசெய்து எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று எழுதி அனுப்பினார்கள்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றுக்கு மேற்கிலுள்ள.”
வே.வா., “மூப்பர்களை.”
நே.மொ., “கடவுளுடைய கண் யூத ஜனங்களின் பெரியோர்கள்மேல் இருந்தது.”
ஒருவேளை, “செருபாபேலிடம்.”
வே.வா., “அரசுப் பதிவேடுகளை.”