ஏசாயா 1:1-31

  • அப்பாவும் அடங்காத மகன்களும் (1-9)

  • சம்பிரதாயத்துக்காக வணங்குபவர்களை யெகோவா வெறுக்கிறார் (10-17)

  • “நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம்” (18-20)

  • சீயோன் திரும்பவும் விசுவாசமுள்ள நகரமாக மாறும் (21-31)

1  உசியா,+ யோதாம்,+ ஆகாஸ்,+ எசேக்கியா+ ஆகியவர்கள் யூதாவை ஆட்சி செய்த+ காலத்தில், ஆமோத்ஸ் என்பவரின் மகனான ஏசாயா* வாழ்ந்தார். யூதாவையும் எருசலேமையும் பற்றி அவர் பார்த்த தரிசனம்+ இதுதான்:   பரலோகமே, கேள்! பூமியே, கவனி!+யெகோவா சொல்வது இதுதான்: “பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினேன்.+ஆனால், அவர்கள் எனக்கு அடங்கி நடக்கவில்லை.+   காளை மாட்டுக்கு அதன் எஜமானைத் தெரியும்.கழுதைக்கு அதன் எஜமான் வைத்திருக்கிற தீவனத் தொட்டி தெரியும்.ஆனால், என் ஜனங்களான இஸ்ரவேலர்களுக்கு என்னை* தெரியவில்லை.+என் சொந்த ஜனங்களே புத்தியில்லாமல்* நடந்துகொள்கிறார்கள்.”   பாவம் செய்கிற ஜனங்களே! உங்களுக்கு ஐயோ கேடு!+நீங்கள் குற்றத்துக்குமேல் குற்றம் செய்கிறீர்கள்.அக்கிரமக்காரக் கும்பலே! கேடுகெட்ட பிள்ளைகளே! நீங்கள் யெகோவாவை ஒதுக்கித்தள்ளினீர்கள்.+இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளிடம் மரியாதை இல்லாமல் நடந்துகொண்டீர்கள்.அவரைவிட்டு விலகிப்போனீர்கள்.   ஏன் அவருக்கு அடங்க மறுக்கிறீர்கள், வாங்கிய அடியெல்லாம் போதாதா?+ உங்கள் தலை முழுக்க புண் வந்திருக்கிறது.இதயம் முழுக்க கோளாறு இருக்கிறது.+   உள்ளங்கால்முதல் உச்சந்தலைவரை ஒன்றும் சரியில்லை. வெளிக்காயங்களும், உள்காயங்களும், சீழ்வடியும் புண்களுமாக இருக்கிறது.மருந்து போடாமலும், கட்டுப் போடாமலும், எண்ணெய் பூசாமலும் விட்டிருக்கிறீர்கள்.+   உங்கள் தேசம் பாழாய்க் கிடக்கிறது. உங்கள் நகரங்கள் கொளுத்தப்பட்டுக் கிடக்கின்றன. மற்ற தேசத்து ஜனங்கள் உங்கள் கண் முன்னாலேயே உங்கள் நிலத்தைக் கைப்பற்றுகிறார்கள்.+ அதை அழித்து நாசமாக்குகிறார்கள்.+   சீயோன் மகள், திராட்சைத் தோட்டத்து காவல்காரனுடைய பந்தல் போலவும்,வெள்ளரித் தோட்டத்தில் உள்ள குடிசை போலவும்,எதிரிகளால் சூழப்பட்ட நகரத்தைப் போலவும் இருக்கிறாள்.+   பரலோகப் படைகளின் யெகோவா நம்மில் கொஞ்சம் பேரை மீதியாக வைக்காமல் போயிருந்தால்,நாம் சோதோமைப் போலவும்,கொமோராவைப் போலவும் ஆகியிருப்போம்.+ 10  சோதோமின் ஆட்சியாளர்களே,* யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.+ கொமோராவின் மக்களே, நம் கடவுளுடைய சட்டத்தை* காதுகொடுத்துக் கேளுங்கள்.+ 11  யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நீங்கள் எத்தனை பலிகளைக் கொடுத்தாலும் எனக்கு என்ன லாபம்?+ உங்களுடைய செம்மறியாட்டுக் கடாக்களின் தகன பலிகளும்,+ புஷ்டியான மிருகங்களின் கொழுப்பும்+ எனக்கு வெறுப்பாக இருக்கிறது.இளம் காளைகள்,+ செம்மறியாட்டுக் குட்டிகள், வெள்ளாடுகள்+ ஆகியவற்றின் இரத்தம்+ எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. 12  நீங்கள் என் ஆலயத்துக்கு வந்து போகிறீர்கள்.+ஆனால், என்னுடைய பிரகாரங்களின் தரை தேய்ந்ததுதான் மிச்சம்.இப்படி வீணாக வந்துபோகும்படி நான் சொன்னேனா?+ 13  பிரயோஜனமில்லாத உணவுக் காணிக்கைகளைக் கொண்டுவருவதை நிறுத்துங்கள். நீங்கள் தூபம் காட்டுவது எனக்கு அருவருப்பாக இருக்கிறது.+ மாதப் பிறப்புகளிலும்*+ ஓய்வுநாட்களிலும்+ மாநாடுகளிலும்+ நீங்கள் செய்வதை என்னால் இனி சகிக்க முடியாது.என்னை வணங்குவதற்காகக் கூடிவரும்போது நீங்கள் மாயமந்திரத்தில் ஈடுபடுவதை என்னால் இனி பொறுக்க முடியாது.+ 14  நீங்கள் கொண்டாடுகிற மாதப் பிறப்புகளையும் பண்டிகைகளையும் நான் வெறுக்கிறேன். அதெல்லாம் எனக்கு எரிச்சலாக இருக்கிறது.அதைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போய்விட்டேன். 15  உங்கள் கைகளில் இரத்தக்கறை படிந்திருக்கிறது.+அதனால், நீங்கள் என்முன் கைகளை விரித்தாலும் நான் பார்க்க மாட்டேன்.+நீங்கள் எவ்வளவுதான் ஜெபம் செய்தாலும்+நான் கேட்க மாட்டேன்.+ 16  உங்களைச் சுத்தமாக்குங்கள், உங்களைத் தூய்மையாக்குங்கள்.+என் கண் முன்னாலேயே நீங்கள் அக்கிரமங்கள் செய்தது போதும்.அதற்கு ஒரு முடிவுகட்டுங்கள்.+ 17  நல்லது செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நியாயத்தைத் தேடுங்கள்.+மற்றவர்களை அடக்கி ஒடுக்குகிறவர்களைத் திருத்துங்கள்.அப்பா இல்லாத பிள்ளைகளின்* உரிமைகளுக்காக வாதாடுங்கள்.விதவைகளுக்காக வழக்காடுங்கள்.”+ 18  யெகோவா உங்களிடம், “வாருங்கள், நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம்.+ உங்களுடைய பாவங்கள் இரத்தம்போல் சிவப்பாக இருந்தாலும்,பனிபோல் வெண்மையாகும்.+செக்கச்செவேல் என்று இருந்தாலும்,வெள்ளைவெளேர் என்று ஆகும். 19  நீங்கள் மனப்பூர்வமாக எனக்குக் கீழ்ப்படிந்து நடந்தால்,தேசத்தின் நல்ல விளைச்சலை அனுபவிப்பீர்கள்.+ 20  என் பேச்சைக் கேட்காமல் முரண்டுபிடித்தால்,வாளால் கொல்லப்படுவீர்கள்.+யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன்” என்கிறார். 21  விசுவாசமாக இருந்த நகரமே,+ இப்படித் துரோகம் செய்துவிட்டாயே!+ நீ நியாயத்தால் நிறைந்திருந்தாய்.+உன்னிடம் நீதி குடிகொண்டிருந்தது.+ஆனால், இப்போது கொலைகாரர்கள் குடியிருக்கிறார்கள்.+ 22  உன் வெள்ளி வெறும் கசடாகிவிட்டது.*+உன் மதுபானம்* தண்ணீர் கலந்ததாகிவிட்டது. 23  உன் தலைவர்கள் திருந்தாதவர்கள்; திருடர்களின் கூட்டாளிகள்.+ ஒவ்வொருவரும் லஞ்சத்தை எதிர்பார்க்கிறார்கள், ஆதாயத்துக்காக அலைகிறார்கள்.+ அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு நியாயம் வழங்காமல் இருக்கிறார்கள்.விதவைகளின் வழக்குகளை விசாரிக்காமல் ஒதுக்குகிறார்கள்.+ 24  அதனால் இஸ்ரவேலர்களின் வல்லமையுள்ள கடவுளும்,உண்மையான எஜமானும், பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “என் விரோதிகளை ஒழித்துக்கட்டுவேன்,எதிரிகளைப் பழிவாங்குவேன்.+ 25  உன்னைத் தண்டித்துத் திருத்துவேன்.உன்னைப் புடமிட்டு உன் கசடுகளையெல்லாம் நீக்குவேன்,நன்றாகச் சுத்தமாக்குவேன்.+ 26  முன்பு போலவே உனக்காக நியாயாதிபதிகளை நியமிப்பேன்.ஆரம்பத்தில் இருந்தது போலவே ஆலோசகர்களைத்+ தருவேன். அதன்பின், ‘நீதியின் நகரம்’ என்றும், ‘விசுவாசத்தின் ஊர்’ என்றும் நீ அழைக்கப்படுவாய்.+ 27  நியாயத்தினால் சீயோன் விடுவிக்கப்படும்.+அங்கே திரும்பி வருகிறவர்கள் நீதியினால் விடுவிக்கப்பட்ட ஜனங்களாக இருப்பார்கள். 28  யெகோவாவுக்கு அடங்காதவர்களும் பாவம் செய்கிறவர்களும் நொறுக்கப்படுவார்கள்.+அவரைவிட்டு விலகுகிறவர்கள் அழிந்துபோவார்கள்.+ 29  பெரிய மரங்களை விரும்பியவர்கள் அவமானப்பட்டுப் போவார்கள்.+அவர்கள் தேர்ந்தெடுத்த தோட்டங்களை* குறித்து வெட்கப்பட்டுப் போவார்கள்.+ 30  இலைகள் உதிர்ந்த பெரிய மரத்தைப் போலவும்,+தண்ணீர் இல்லாத தோட்டத்தைப் போலவும் அவர்கள் ஆவார்கள். 31  பலசாலி பலமில்லாத* நார்போல் ஆகிவிடுவான்.அவன் செய்வதெல்லாம் தீப்பொறிபோல் ஆகிவிடும்.யாராலும் அணைக்க முடியாத நெருப்பு அவனைச் சுட்டெரிக்கும்.அவன் செய்வதையெல்லாம் அழித்துவிடும்.”

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “யெகோவா தரும் மீட்பு.”
வே.வா., “அவர்களுடைய எஜமானை.”
வே.வா., “புரிந்துகொள்ளாமல்.”
வே.வா., “கொடுங்கோலர்களே.”
வே.வா., “அறிவுரையை.”
வே.வா., “முதலாம் பிறையிலும்.”
வே.வா., “அநாதைகளின்.”
கசடு என்பது உலோகம் புடமிடப்படும்போது நீக்கப்படும் கழிவு.
அதாவது, “கோதுமையிலிருந்து தயாரிக்கப்பட்ட பீர்.”
அநேகமாக, இந்த மரங்களும் தோட்டங்களும் உருவ வழிபாட்டுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.
வே.வா., “நெருப்பு பட்டதும் எரிந்துவிடுகிற.”