ஏசாயா 11:1-16

  • ஈசாய் என்ற அடிமரத்தினுடைய துளிரின் நீதியான ஆட்சி (1-10)

    • ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும் (6)

    • பூமி யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும் (9)

  • மீதியுள்ள இஸ்ரவேலர்களைக் கடவுள் திரும்பி வரச் செய்வார் (11-16)

11  ஈசாய்+ என்ற அடிமரத்திலிருந்து ஒரு துளிர்+ துளிர்க்கும்.அதன் வேர்களிலிருந்து ஒரு தளிர்+ முளைத்து கனி தரும்.   யெகோவாவின் சக்தி அவர்மேல்* தங்கியிருக்கும்.+அது அவருக்கு ஞானத்தையும்,+ புரிந்துகொள்ளும் திறனையும்,அறிவுரை சொல்லும் ஆற்றலையும், வல்லமையையும்,+அறிவையும், யெகோவாவைப் பற்றிய பயத்தையும் கொடுக்கும்.   யெகோவாவுக்குப் பயந்து நடப்பதில் அவர் சந்தோஷப்படுவார்.+ கண்ணால் பார்ப்பதை வைத்து தீர்ப்பு சொல்ல மாட்டார்.காதால் கேட்பதை வைத்து கண்டிக்க மாட்டார்.+   பூமியிலுள்ள ஏழைகளுக்கு நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.தாழ்மையானவர்களின்* சார்பாக ஜனங்களை நியாயமாகக் கண்டிப்பார். பூமியைத் தன் வாயின் கோலால் தாக்குவார்.+கெட்டவர்களைத் தன் வாயின் சுவாசத்தால் கொன்றுபோடுவார்.+   நீதி அவருக்கு இடுப்புவார் போல இருக்கும்.நம்பகத்தன்மை* அவருக்கு இடுப்புக்கச்சை போல இருக்கும்.+   அப்போது, ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்.+வெள்ளாட்டுக் குட்டி சிறுத்தையோடு படுத்துக்கொள்ளும்.கன்றுக்குட்டியும் சிங்கமும் கொழுத்த காளையும்* ஒன்றாக இருக்கும்.*+ஒரு சின்னப் பையன் அவற்றை ஓட்டிக்கொண்டு போவான்.   பசுவும் கரடியும் சேர்ந்து மேயும்.அவற்றின் குட்டிகள் ஒன்றாகப் படுத்துக்கொள்ளும். சிங்கம் மாட்டைப் போல வைக்கோல் தின்னும்.+   பால் குடிக்கும் குழந்தை நாகப்பாம்புப் புற்றின் மேல் விளையாடும்.பால் மறந்த பிள்ளை விஷப் பாம்பின் பொந்தில் தன் கையை விடும்.   என்னுடைய பரிசுத்த மலையில் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது.+எந்தக் கேடும் வராது.+ஏனென்றால், கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போலபூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.+ 10  அந்த நாளில், ஈசாயின் வேராக+ இருப்பவர் ஜனங்களுக்கு ஒரு கொடிக் கம்பம் போல நிற்பார்.+ பல தேசத்து ஜனங்கள் அவரைத் தேடி* வருவார்கள்.+அவர் தங்கும் இடம் மகிமையால் நிறைந்திருக்கும். 11  அந்த நாளில், யெகோவா தன்னுடைய ஜனங்களில் மீதியானவர்களை மீட்டுக்கொள்வதற்காக இரண்டாவது தடவை கைகொடுப்பார். அசீரியாவிலிருந்தும்,+ எகிப்திலிருந்தும்,+ பத்ரோசிலிருந்தும்,+ கூஷிலிருந்தும்,+ ஏலாமிலிருந்தும்,+ சினேயாரிலிருந்தும்,* காமாத்திலிருந்தும், தீவுகளிலிருந்தும்+ அவர்களைத் திரும்பி வரச் செய்வார். 12  எல்லா தேசங்களும் பார்க்கிற விதமாக ஒரு கொடிக் கம்பத்தை நாட்டி, சிதறிப்போன இஸ்ரவேல் ஜனங்களைக் கூட்டிச் சேர்ப்பார்;+ பூமியின் நாலாபக்கத்துக்கும் துரத்தியடிக்கப்பட்ட யூதா ஜனங்களை ஒன்றுசேர்ப்பார்.+ 13  எப்பிராயீமுக்கு இருந்த பொறாமை ஒழிந்துபோகும்.+யூதாவைப் பகைக்கிறவர்கள் அழிந்துபோவார்கள். இனி எப்பிராயீமுக்கு யூதாமேல் பொறாமை இருக்காது.யூதாவுக்கு எப்பிராயீம்மேல் பகை இருக்காது.+ 14  அவர்கள் மேற்கிலுள்ள பெலிஸ்தியர்களின் சரிவான பகுதிகளுக்குப் பாய்ந்து வருவார்கள்.கிழக்கிலுள்ள ஜனங்களிடம் இருப்பதையெல்லாம் கைப்பற்றுவார்கள். ஏதோமையும் மோவாபையும் தோற்கடிப்பார்கள்.+அம்மோன் ஜனங்களை அடிபணிய வைப்பார்கள்.+ 15  எகிப்திய கடலின் விரிகுடாவை யெகோவா பிளப்பார்.*+ஆற்றின் மேல்* தன்னுடைய கையை ஓங்குவார்.+ அனல் வீசும் தன்னுடைய மூச்சுக்காற்றை அதன் ஏழு நீரோடைகள்மேலும் வீச வைப்பார்.*ஜனங்கள் அதைக் கடந்து போவதற்கு* வழிசெய்வார். 16  மீந்திருக்கும் இஸ்ரவேலர்கள்+ அசீரியாவைவிட்டு வெளியே வருவதற்கு ஒரு நெடுஞ்சாலை இருக்கும்.+அது இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி நடந்து போன நெடுஞ்சாலையைப் போல் இருக்கும்.

அடிக்குறிப்புகள்

அதாவது, ஒன்றாம் வசனத்தில் “துளிர்” என்றும் “தளிர்” என்றும் சொல்லப்படுகிறவர்.
வே.வா., “சாந்தமானவர்களின்.”
வே.வா., “உண்மைத்தன்மை.”
நே.மொ., “மிருகமும்.”
அல்லது, “கன்றுக்குட்டியும் சிங்கமும் சேர்ந்து மேயும்.”
வே.வா., “வழிநடத்துதலுக்காக அவரிடம்.”
அதாவது, “பாபிலோனியாவிலிருந்தும்.”
அல்லது, “வற்றச் செய்வார்.”
அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றின் மேல்.”
அல்லது, “அதை அடித்து ஏழு நீரோடைகளாக ஆக்குவார்.”
நே.மொ., “செருப்புகள் போட்டபடி கடந்து போவதற்கு.”