ஏசாயா 4:1-6

  • ஏழு பெண்களுக்கு ஒரு ஆள் (1)

  • யெகோவா அமோக விளைச்சலைத் தருகிறார் (2-6)

4  அப்போது, ஏழு பெண்கள் ஓர் ஆளைப் பிடித்துக்கொண்டு,+ “தயவுசெய்து எங்கள் மானத்தைக் காப்பாற்றுங்கள்.*+எங்களைக் கல்யாணம் செய்துகொள்ளுங்கள்.*எங்களுக்கு நீங்கள் சாப்பாடும் போட வேண்டாம், துணிமணியும் தர வேண்டாம்.அதையெல்லாம் நாங்களே பார்த்துக்கொள்வோம்” என்று சொல்வார்கள்.  இஸ்ரவேலர்களில் உயிர்தப்பியவர்களுக்கு யெகோவா அமோக விளைச்சலைத் தருவார். நிலத்திலிருந்து கிடைக்கும் பலன் அவர்களுக்குப் பெருமையும் புகழும் சேர்க்கும்.+  சீயோனில் மீதியாக இருப்பவர்களும் எருசலேமில் எஞ்சியிருப்பவர்களும், அதாவது அங்கே வாழ்வதற்காக யாருடைய பெயரெல்லாம் எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் எல்லாரும், பரிசுத்தமானவர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.+  யெகோவா சீயோன் ஜனங்களைச் சுத்தமாக்குவார்.+ கோபத்தோடு எருசலேம் ஜனங்களைத் தண்டித்து, அவர்கள் இரத்தம் சிந்துவதை முடிவுக்குக் கொண்டுவருவார்.+  யெகோவா சீயோன் மலை முழுவதிலும், ஜனங்கள் மாநாடுகளுக்காகக் கூடிவருகிற இடத்திலும் பகலில் மேகத்தையும் புகையையும் தோன்ற வைப்பார்; கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை ராத்திரியில் தோன்ற வைப்பார்.+ மகிமையான அந்த இடத்தின் மேலெங்கும் பாதுகாப்பு இருக்கும்.  வெயிலுக்கு நிழலாகவும்,+ புயலிலிருந்தும் மழையிலிருந்தும் பாதுகாக்கிற அடைக்கலமாகவும்+ ஒரு கூடாரம் இருக்கும்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “திருமணம் ஆகாததாலும், பிள்ளைகள் இல்லாததாலும் வரும் அவமானத்தை நீக்குங்கள்.”
நே.மொ., “உங்களுடைய பெயரால் நாங்கள் அழைக்கப்பட வேண்டும்.”