ஏசாயா 46:1-13

  • பாபிலோனியர்களின் சிலைகளும் இஸ்ரவேலர்களின் கடவுளும் (1-13)

    • எதிர்காலத்தைப் பற்றி யெகோவா முன்கூட்டியே சொல்கிறார் (10)

    • கிழக்கிலிருந்து ஒரு கழுகு (11)

46  நேபோ கூனிக்குறுகுகிறது,+ பேல் அவமானத்தில் தலைகுனிகிறது. அவற்றின் சிலைகள் மிருகங்கள்மேல் ஏற்றப்படுகின்றன.+களைத்துப்போன மிருகங்கள்மேல் வைக்கப்படுகிற சுமைபோல் அவை இருக்கின்றன.   சிலைகளின் சுமை தாங்காமல் மிருகங்கள் அப்படியே குனிந்துவிடுகின்றன.நேபோவாலும் பேலாலும் அவற்றை* காப்பாற்ற முடியாது.ஏனென்றால், அந்தத் தெய்வங்களே கைப்பற்றப்பட்டுக் கொண்டுபோகப்படும்.   “யாக்கோபின் வம்சத்தாரே, இஸ்ரவேல் ஜனங்களில் மீதியாக இருப்பவர்களே,+ கேளுங்கள்.உங்களைக் கருவிலிருந்தே காப்பாற்றியதும், பிறந்ததிலிருந்தே தூக்கிச் சுமந்ததும் நான்தான்.+   உங்களுக்கு வயதானாலும் உங்களைத் தூக்கிச் சுமப்பேன்.+உங்களுடைய தலைமுடி நரைத்துப்போனாலும் உங்களைத் தாங்குவேன். உங்களை எப்போதுமே சுமப்பேன், தாங்குவேன், காப்பாற்றுவேன்.+   என்னை யாரோடு ஒப்பிடுவீர்கள்? என்னை யாருக்குச் சமமாக்குவீர்கள்?+யாராவது எனக்கு இணையாக இருக்க முடியுமா?+   சிலர் ஆசாரிக்குக் கூலி கொடுத்து சிலை செய்யச் சொல்கிறார்கள்.அதற்காக, பையிலிருந்து தங்கத்தைக் கொட்டுகிறார்கள். வெள்ளியைத் தராசில் எடைபோட்டுக் கொடுக்கிறார்கள். அதை வைத்து அவன் ஒரு சிலையைச் செய்கிறான்.+ அவர்கள் அதன் முன்னால் விழுந்து வணங்குகிறார்கள்.+   அதைத் தோளின் மேல் சுமந்துகொண்டு போகிறார்கள்.+பின்பு, அதை அதன் இடத்தில் வைக்கிறார்கள்; அது அங்கேயே நிற்கிறது. அந்த இடத்தைவிட்டு அது நகருவதே இல்லை.+ அவர்கள் அதைப் பார்த்து சத்தமாக வேண்டுகிறார்கள், ஆனால் அது பதில் கொடுப்பதே இல்லை.அந்தச் சிலையால் யாரையுமே கஷ்டத்திலிருந்து காப்பாற்ற முடிவதில்லை.+   இதை ஞாபகத்தில் வையுங்கள், தைரியமாக இருங்கள். என் பேச்சை மீறுகிறவர்களே, இதை நெஞ்சில் வையுங்கள்.   பழங்காலத்திலிருந்து நடந்த விஷயங்களை நினைத்துப் பாருங்கள்.நானே கடவுள், என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. நானே கடவுள், என்னைப் போல யாருமே இல்லை.+ 10  நடக்கப்போகும் விஷயங்களை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன்.அதை ரொம்பக் காலத்துக்கு முன்பிருந்தே சொல்லி வருகிறேன்.+ ‘நான் நினைத்தது* நிச்சயம் நிறைவேறும்.+விரும்புவதையெல்லாம் நான் செய்து முடிப்பேன்’+ என்று சொல்கிறேன். 11  கிழக்கிலிருந்து ஒரு கழுகை நான் கூப்பிடுகிறேன்.+நான் நினைத்ததை* நிறைவேற்ற தூர தேசத்திலிருந்து ஒருவரை அழைக்கிறேன்.+ நான் சொன்னேன், அதைச் செய்வேன். நான் தீர்மானித்தேன், அதை நிறைவேற்றுவேன்.+ 12  முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறவர்களே,*நீதியின் வழியைவிட்டுத் தூரமாகப் போனவர்களே,நான் சொல்வதைக் கேளுங்கள். 13  நான் சீக்கிரத்தில் நீதி வழங்கப்போகிறேன்.அந்தக் காலம் நெருங்கிவிட்டது;உங்களை மீட்பதற்கு நான் தாமதிக்க மாட்டேன்.+ நான் சீயோனை மீட்பேன், இஸ்ரவேலை மகிமைப்படுத்துவேன்.”+

அடிக்குறிப்புகள்

அதாவது, “மிருகங்கள் சுமக்கும் சிலைகளை.”
வே.வா., “என் நோக்கம்.”
வே.வா., “என் நோக்கத்தை.”
வே.வா., “பிடிவாத நெஞ்சம் உள்ளவர்களே.”