ஏசாயா 56:1-12

  • மற்ற தேசத்தாருக்கும் அண்ணகர்களுக்கும் ஆசீர்வாதங்கள் (1-8)

    • எல்லாருக்கும் ஒரு ஜெப வீடு (7)

  • குருட்டுக் காவல்காரர்கள், ஊமை நாய்கள் (9-12)

56  யெகோவா சொல்வது இதுதான்: “நியாயமாகவும்+ நீதியாகவும் நடந்துகொள்ளுங்கள்.நான் சீக்கிரத்தில் உங்களை மீட்கப்போகிறேன்.நான் நீதியுள்ளவர் என்பதை அப்போது எல்லாரும் புரிந்துகொள்வார்கள்.+   இதைச் செய்கிறவர்களும்,இதை உறுதியாகக் கடைப்பிடிக்கிறவர்களும்,ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கிறவர்களும், அதன் புனிதத்தைக் கெடுக்காதவர்களும்,+கெட்ட காரியங்கள் செய்யாதவர்களும் சந்தோஷமானவர்கள்.   யெகோவாவின் ஜனங்களோடு சேர்ந்துகொள்கிற மற்ற தேசத்தார்,+‘யெகோவா என்னை அவருடைய ஜனங்களிடமிருந்து கண்டிப்பாக ஒதுக்கிவிடுவார்’ என்று சொல்லக் கூடாது. அண்ணகர்கள்* யாரும், ‘நான் ஒரு பட்டமரம்’ என்று சொல்லக் கூடாது.”  யெகோவாவின் கட்டளைப்படி ஓய்வுநாளைக் கடைப்பிடித்து, அவருக்குப் பிரியமானதைச் செய்து, அவருடைய ஒப்பந்தத்தின்படி நடக்கிற அண்ணகர்களைப் பற்றி அவர் சொல்வது இதுதான்:   “என்னுடைய வீட்டில் அவர்களுக்கு ஒரு இடத்தையும்* ஒரு பெயரையும் கொடுப்பேன்.குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதத்தைவிட பெரிய ஆசீர்வாதமாக அது இருக்கும். என்றென்றும் அழியாத ஒரு பெயரைநான் அவர்களுக்குக் கொடுப்பேன்.   என் ஜனங்களோடு சேர்ந்துகொள்ள வருகிற மற்ற தேசத்து ஜனங்களையும் நான் ஏற்றுக்கொள்வேன்.யெகோவாவுக்குச் சேவை செய்யவும், யெகோவாவின் பெயரை நேசிக்கவும்,+அவருடைய ஊழியர்களாக இருக்கவும் அவர்கள் வருவார்கள்.அவர்கள் என்னுடைய ஓய்வுநாளின் புனிதத்தைக் கெடுக்காமல் அதை அனுசரிப்பார்கள்.என்னுடைய ஒப்பந்தத்தின்படி நடப்பார்கள்.   அவர்களையும் என்னுடைய பரிசுத்த மலைக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+என்னுடைய ஜெப வீட்டில் அவர்களைச் சந்தோஷமாக இருக்க வைப்பேன். என்னுடைய பலிபீடத்தில் அவர்கள் செலுத்துகிற தகன பலிகளையும் காணிக்கைகளையும் ஏற்றுக்கொள்வேன். ஏனென்றால், என் வீடு எல்லா ஜனங்களுக்குமான ஜெப வீடு என்று அழைக்கப்படும்.”+  சிதறிப்போன இஸ்ரவேலர்களைக் கூட்டிச்சேர்க்கிற உன்னதப் பேரரசராகிய யெகோவா+ சொல்வது இதுதான்: “நான் ஏற்கெனவே கூட்டிச்சேர்த்த ஜனங்களோடு மற்றவர்களையும் கூட்டிச்சேர்ப்பேன்.”+   வயல்வெளி மிருகங்களே, காட்டு விலங்குகளே,வந்து சாப்பிடுங்கள்!+ 10  காவல்காரர்கள் சரியான குருடர்கள்;+ அவர்கள் எதையுமே கவனிக்கவில்லை.+ அவர்கள் குரைக்க முடியாத ஊமை நாய்கள்.+ மூச்சு இரைத்துக்கொண்டே படுத்துக் கிடக்கிறார்கள்; எப்போதும் தூங்கவே விரும்புகிறார்கள். 11  அவர்கள் அகோரப் பசியுள்ள நாய்கள்.அவர்கள் திருப்தி அடைவதே இல்லை. அவர்கள் புத்தி* இல்லாத மேய்ப்பர்கள்.+ அவரவருக்கு இஷ்டமான வழியில் போகிறார்கள்.ஆதாயத்துக்காக அநியாயமாய் நடந்துகொள்கிறார்கள். 12  அவர்கள் ஒவ்வொருவரும், “வாருங்கள், நாம் திராட்சமது குடிப்போம்.போதை தலைக்கேறும்வரை குடிப்போம்.+ இன்று போலவே நாளைய தினமும் இருக்கும், சொல்லப்போனால் இன்னும் நன்றாகவே இருக்கும்!” என்கிறார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “நினைவுச் சின்னத்தையும்.”
வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”