ஓசியா 14:1-9

  • யெகோவாவிடம் திரும்பிவர வேண்டுகோள் (1-3)

    • யெகோவாவுக்குப் புகழ் செலுத்தப்படுகிறது (2)

  • துரோகம் செய்த இஸ்ரவேல் குணமாக்கப்படுகிறான் (4-9)

14  “இஸ்ரவேலே, உன் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்பி வா.+நீ பாவத்தில் விழுந்தாயே.   யெகோவாவிடம் திரும்பி வா. அவரிடம்,‘எங்களுடைய பாவங்களை மன்னியுங்கள்,+ எங்களிடமிருந்து நல்லதை ஏற்றுக்கொள்ளுங்கள்.அப்போது, இளம் காளைகளைச் செலுத்துவதுபோல் எங்கள் உதடுகளால் உங்களுக்குப் புகழைச் செலுத்துவோம்.+   அசீரியா எங்களைக் காப்பாற்றாது.+ இனி நாங்கள் குதிரைகளில் ஏற மாட்டோம்.+நாங்கள் உண்டாக்கியவற்றைப் பார்த்து, “எங்கள் கடவுளே!” என்று சொல்ல மாட்டோம்.ஏனென்றால், அப்பா இல்லாத பிள்ளைக்கு இரக்கம் காட்டுபவர் நீங்கள்தான்’+ என்று சொல்.   அவனை நான் குணமாக்குவேன்; அவன் இனி துரோகம் செய்ய மாட்டான்.+ அவனை மனப்பூர்வமாக நேசிப்பேன்.+அவன்மேல் கோபப்பட மாட்டேன்.+   நான் இஸ்ரவேலுக்குப் பனித்துளிபோல் இருப்பேன்.அவன் லில்லி பூவைப் போல் பூத்துக் குலுங்குவான்.லீபனோனின் மரங்களைப் போல் வேரூன்றி நிற்பான்.   அவனுடைய கிளைகள் விரிந்திருக்கும்.அவன் ஒலிவ மரத்தைப் போல் கம்பீரமாக நிற்பான்.லீபனோனைப் போல் மணம் வீசுவான்.   அவன் மறுபடியும் என் நிழலில் தங்குவான். தானியத்தைப் பயிர் செய்வான், திராட்சைக் கொடிபோல் அரும்பு விடுவான்.+ லீபனோனின் திராட்சமதுபோல் அவனுடைய புகழ் பரவும்.   ‘எனக்கும் உருவச் சிலைகளுக்கும் இனி என்ன சம்பந்தம்?’ என்று எப்பிராயீம் சொல்வான்.+ நான் அவனுடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பேன், அவனைப் பாதுகாப்பேன்.+ பச்சைப்பசேலென்று நிற்கும் ஆபால் மரத்தைப் போல் இருப்பேன். என்னிடமிருந்து அவன் பழங்களைப் பறிப்பான்.”   ஞானமுள்ளவன் யார்? அவன் இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ளட்டும். விவேகமுள்ளவன் யார்? அவன் இவற்றைத் தெரிந்துகொள்ளட்டும். ஏனென்றால், யெகோவாவின் வழிகள் நேர்மையானவை.+அந்த வழிகளில் நீதிமான்கள் நடப்பார்கள்,ஆனால், குற்றவாளிகள் தடுக்கி விழுவார்கள்.

அடிக்குறிப்புகள்