ஓசியா 4:1-19

  • இஸ்ரவேலுக்கு எதிராக யெகோவாவின் வழக்கு (1-8)

    • ஜனங்கள் மத்தியில் கடவுளைப் பற்றிய அறிவு இல்லை (1)

  • இஸ்ரவேலர்களின் உருவ வழிபாடும் ஒழுக்கக்கேடும் (9-19)

    • விபச்சாரப் புத்தியால் வழிதவறிப் போகிறார்கள் (12)

4  இஸ்ரவேல் ஜனங்களே, யெகோவா சொல்வதைக் கேளுங்கள்.தேசத்து ஜனங்களோடு யெகோவா வழக்காடப் போகிறார்.+ஜனங்கள் மத்தியில் நேர்மையும் இல்லை, விசுவாசமும்* இல்லை,+ கடவுளைப் பற்றிய அறிவும் இல்லை.   அவர்கள் பொய் சத்தியம் செய்கிறார்கள், உண்மையைப் புரட்டுகிறார்கள்,+ உயிர்களைப் பறிக்கிறார்கள்,+திருடுகிறார்கள், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறார்கள்,+கொலைக்குமேல் கொலை செய்கிறார்கள்.+   அதனால், தேசம் துக்கத்தில் மூழ்கிப்போகும்.+ஜனங்கள் எல்லாரும் அழிந்துபோவார்கள்.காட்டு மிருகங்களும், வானத்துப் பறவைகளும்,கடல்மீன்களும்கூட அழிந்துபோகும்.   “ஆனாலும், உங்களை யாரும் தட்டிக்கேட்காமலும் கண்டிக்காமலும் இருக்கட்டும்.+ஏனென்றால், நீங்கள் குருவானவரையே தட்டிக்கேட்பவர்கள்போல் இருக்கிறீர்கள்.+   இருட்டில் தடுமாறி விழுவதுபோல் பட்டப்பகலில் நீங்கள் விழுவீர்கள்.தீர்க்கதரிசியும் உங்களோடு சேர்ந்து விழுவான். உங்களுடைய தாயின் மூச்சை நான் அடக்கிவிடுவேன்.   என் ஜனங்கள் என்னைப் பற்றிய அறிவைப் பெறாததால் அவர்களுடைய மூச்சு அடக்கப்படும்.* நீங்கள் என்னைப் பற்றிய அறிவை ஒதுக்கித்தள்ளினீர்கள்.+அதனால், எனக்குக் குருமார்களாகச் சேவை செய்யாதபடி நானும் உங்களை ஒதுக்கித்தள்ளுவேன்.என்னுடைய சட்டத்தை* நீங்கள் மறந்தீர்கள்.+அதனால், நானும் உங்களுடைய மகன்களை மறந்துவிடுவேன்.   என் ஜனங்கள் பெருகப்பெருக அவர்களுடைய பாவமும் பெருகியது.+ அவர்களுடைய புகழ்ச்சியை இகழ்ச்சியாக மாற்றிவிடுவேன்.*   என் ஜனங்கள் செய்கிற பாவத்தால் குருமார்கள் கொழுத்துப்போகிறார்கள்.என் ஜனங்களுடைய குற்றங்களைப் பார்க்க ஏங்குகிறார்கள்.   ஜனங்களுக்கும் குருமார்களுக்கும் ஒரே கதிதான் காத்திருக்கிறது.அவர்களுடைய அக்கிரமங்களுக்காக அவர்களைத் தண்டிப்பேன்.கெட்டது செய்கிறவர்களுக்குக் கெட்டதையே வர வைப்பேன்.+ 10  அவர்கள் சாப்பிடுவார்கள், ஆனால் திருப்தியடைய மாட்டார்கள்.+ ஒழுக்கக்கேடாக நடப்பார்கள், ஆனால் பிள்ளைகளைப் பெற மாட்டார்கள்.+ஏனென்றால், அவர்கள் யெகோவாவாகிய என்னை மதிக்கவே இல்லை. 11  விபச்சாரமும், பழைய திராட்சமதுவும், புதிய திராட்சமதுவும்சரியானதைச் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைக் கெடுக்கும்.+ 12  என் ஜனங்கள் மரச் சிலைகளிடம் ஆலோசனை கேட்கிறார்கள்.அவர்களுடைய கோல்* சொல்கிறபடி செய்கிறார்கள்.விபச்சாரப் புத்தியால் வழிதவறி நடக்கிறார்கள்.விபச்சாரம் செய்து தங்கள் கடவுளைவிட்டு விலகுகிறார்கள். 13  மலைகளின் மேல் பலி செலுத்துகிறார்கள்.+குன்றுகளின் மேலும், கருவாலி மரங்களின் கீழும்,எல்லா பெரிய மரங்களின் கீழும்* தூபம் காட்டுகிறார்கள்.+ஏனென்றால், அவை நல்ல நிழல் தருகின்றன. அதனால்தான், உங்கள் மகள்கள் விபச்சாரம் செய்கிறார்கள்.உங்கள் மருமகள்களும் கணவனுக்குத் துரோகம் செய்கிறார்கள். 14  விபச்சாரம் செய்கிற உங்கள் மகள்களையும்,கணவனுக்குத் துரோகம் செய்கிற உங்கள் மருமகள்களையும் தண்டிக்க மாட்டேன். ஏனென்றால், ஆண்கள் விலைமகள்களோடு போகிறார்கள்.கோயில் விபச்சாரிகளோடு சேர்ந்து பலி கொடுக்கிறார்கள்.புத்தி* இல்லாத இந்த ஜனங்கள்+ அழிந்துபோவார்கள். 15  இஸ்ரவேல் விபச்சாரம் செய்தாலும்,+யூதாவே, நீ குற்றம் செய்யக் கூடாது.+ நீ கில்காலுக்கோ+ பெத்-ஆவேனுக்கோ+ வராதே,‘உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’* என்று சொல்லாதே.+ 16  முரட்டுக்காளையைப் போல் இஸ்ரவேல் பிடிவாதம் பிடிக்கிறது.+ ஆட்டுக்குட்டியைப் புல்வெளியில் மேய்ப்பதுபோல் இஸ்ரவேலை யெகோவா இனி மேய்ப்பாரோ? 17  எப்பிராயீம், சிலைகளின் பக்கம் சேர்ந்துகொண்டான்.+ அவனை விட்டுவிடு! 18  மதுவை* ஊற்றி ஊற்றிக் குடிக்கிறான்.பின்பு, மாதுவிடம் மயங்குகிறான். அவனுடைய தலைவர்களும் தறிகெட்டு நடக்கவே விரும்புகிறார்கள்.+ 19  காற்று அதன் சிறகுகளில் அவனை வாரிக்கொண்டு போகும்.அவனுடைய பலிகளை நினைத்து அவன் வெட்கப்படுவான்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “மாறாத அன்பும்.”
வே.வா., “என் ஜனங்கள் அழிக்கப்படுவார்கள்.”
வே.வா., “அறிவுரையை.”
அல்லது, “நான் தந்த புகழ்ச்சியை ஒதுக்கிவிட்டு இகழ்ச்சியைத் தேடிக்கொண்டார்கள்.”
அதாவது, “மந்திரக்கோல்.”
எபிரெயுவில், “லிவ்னே மரங்களின் கீழும் எல்லா பெரிய மரங்களின் கீழும்.”
வே.வா., “புரிந்துகொள்ளும் திறன்.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயம்.”
வே.வா., “கோதுமையிலிருந்து தயாரிக்கப்பட்ட பீரை.”