ஓசியா 6:1-11
6 “வாருங்கள், யெகோவாவிடம் திரும்பிப் போகலாம்.அவர் சிங்கம்போல் நம்மைக் கடித்துக் குதறியிருந்தாலும்+ நம்மைக் குணமாக்குவார்.
அவர் நம்மைத் தாக்கியிருந்தாலும் நம்முடைய காயங்களுக்குக் கட்டுப்போடுவார்.
2 இரண்டு நாட்களுக்குப் பின்பு புத்துயிர் தருவார்.
மூன்றாம் நாளில் நம்மைத் தூக்கி நிறுத்துவார்.நாம் அவர்முன் வாழ்வோம்.
3 யெகோவாவை நாம் தெரிந்துகொள்வோம்,
அவரைத் தெரிந்துகொள்ள ஊக்கமாக முயற்சி செய்வோம்.பொழுது விடிவது எப்படி உறுதியோ அப்படியே அவர் நம்மிடம் வருவது உறுதி.பருவ மழையைப் போல் அவர் நம்மிடம் வருவார்,
நிலத்தை நனைக்கும் வசந்த கால மழைபோல் வருவார்.”
4 “எப்பிராயீமே, நான் உன்னை என்ன செய்வேன்?
யூதாவே, நான் உன்னை என்ன செய்வேன்?
உங்களுடைய மாறாத அன்பு காலைநேர மேகங்களைப் போலவும்பனித்துளிகளைப் போலவும் சீக்கிரத்தில் மறைந்துபோகிறதே!
5 அதனால், தீர்க்கதரிசிகளை அனுப்பி உங்களை வீழ்த்துவேன்.+என் வார்த்தைகளால் உங்களைக் கொல்வேன்.+
உங்களுக்கு வரும் தண்டனைகள் வெளிச்சம் போலத் தெளிவாகத் தெரியும்.+
6 நீங்கள் எனக்குப் பலிகள் கொடுக்க வேண்டும் என்றல்ல,எனக்கு விசுவாசமாக இருக்க* வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.
நீங்கள் எனக்குத் தகன பலிகள் தர வேண்டும் என்றல்ல,என்னை நன்றாகத் தெரிந்துகொள்ள* வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.+
7 நீங்களோ அற்ப மனுஷர்களைப் போல ஒப்பந்தத்தை மீறினீர்கள்.+
உங்கள் தேசத்திலே எனக்குத் துரோகம் செய்தீர்கள்.
8 கீலேயாத் பொல்லாதவர்களின் ஊர்.+அது இரத்தக்கறையால் நிறைந்திருக்கிறது.+
9 குருமார்கள் கொள்ளைக்கூட்டத்தார் போல இருக்கிறார்கள்.
சீகேமின்+ சாலையில் காத்திருந்து கொலை செய்கிறார்கள்.கேவலமாக நடந்துகொள்கிறார்கள்.
10 இஸ்ரவேல் ஜனங்கள் செய்கிற படுமோசமான காரியத்தை நான் பார்த்தேன்.
எப்பிராயீம் விபச்சாரம் செய்கிறான்.+இஸ்ரவேல் தன்னையே கெடுத்துக்கொண்டான்.+
11 யூதாவே, உனக்கு ஓர் அறுவடைக் காலம் காத்திருக்கிறது.சிறைபிடிக்கப்பட்டுப் போன உன்னை மறுபடியும் கூட்டிக்கொண்டு வருவேன்.”+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “மாறாத அன்பு காட்ட; இரக்கம் காட்ட.”
^ வே.வா., “என்னைப் பற்றிய அறிவைப் பெற.”