ஓசியா 9:1-17

  • பாவம் செய்வதால் எப்பிராயீமைக் கடவுள் ஒதுக்கிவிடுகிறார் (1-17)

    • அருவருப்பான தெய்வத்துக்கு ஜனங்கள் தங்களை அர்ப்பணிக்கிறார்கள் (10)

9  “இஸ்ரவேலே, நீ சந்தோஷப்படாதே!+மற்ற ஜனங்களைப் போல மகிழ்ச்சியாக இருக்காதே. ஏனென்றால், நீ விபச்சாரம் செய்து* உன் கடவுளைவிட்டு விலகிப்போனாய்.+ களத்துமேடுகளில் செய்த விபச்சாரத்துக்கு ஆசையோடு கூலி வாங்கினாய்.+   களத்துமேடும் திராட்சரச ஆலையும் உன் வயிற்றை நிரப்பாது.புதிய திராட்சமதுவும் உனக்குக் கிடைக்காது.+   யெகோவாவின் தேசத்தில் இனி நீ வாழ மாட்டாய்.+எப்பிராயீமே, நீ எகிப்துக்குத் திரும்புவாய்.அசீரியாவில் அசுத்தமானவற்றைச் சாப்பிடுவாய்.+   இனி யெகோவாவுக்குத் திராட்சமதுவைப் பானபலியாகக் கொடுக்க மாட்டாய்.+உன்னுடைய பலிகளை அவர் விரும்ப மாட்டார்.+ அவை சாவு வீட்டு சாப்பாட்டைப் போல இருக்கின்றன.அவற்றைச் சாப்பிடுகிற எல்லாரும் தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்வார்கள். உன் சாப்பாடு உன்னோடு இருக்கட்டும். அது யெகோவாவின் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படாது.   விருந்து நாளில் நீ என்ன செய்வாய்?யெகோவாவின் பண்டிகை நாளில் என்ன செய்வாய்?   அழிவைப் பார்த்து நீ தப்பியோடுவாய்.+ எகிப்து உன்னை வாரிக்கொள்ளும்,+ மோப் உன்னைப் புதைத்துவிடும்.+ விலைமதிப்புள்ள வெள்ளி இருந்த இடத்தில் முட்செடிகள் முளைக்கும்.உன் கூடாரங்கள் முட்புதராகிவிடும்.   விசாரணை நாட்கள் வரும்.+தண்டனைத் தீர்ப்பின் நாட்களும் வரும்.இஸ்ரவேலுக்கு இது தெரியும். உன் தீர்க்கதரிசி முட்டாளாவான், தெய்வ வாக்கு சொல்கிறவன் பைத்தியமாவான்.உன் குற்றங்களுக்குக் கணக்கில்லை, அதனால் உன்மேல் காட்டப்படுகிற வெறுப்புக்கு அளவில்லை.”   எப்பிராயீமின் காவல்காரன்+ என் கடவுள் பக்கம் இருந்தான்.+ ஆனால், இப்போது அவனுடைய தீர்க்கதரிசிகளின் செயல்களெல்லாம்+ வேடனின் கண்ணிகள்போல் இருக்கிறது.அவனுடைய கடவுளின் ஆலயத்தில் பகை தங்கியிருக்கிறது.   கிபியாவில் நடந்தது போல இஸ்ரவேலர்கள் மிகவும் சீர்கெட்டு நடக்கிறார்கள்.+ அவர்களுடைய அக்கிரமத்தைக் கடவுள் நினைத்துப் பார்ப்பார், பாவங்களுக்காகத் தண்டிப்பார்.+ 10  “வனாந்தரத்தில் திராட்சைப் பழங்களைக் கண்டுபிடிப்பதுபோல் இஸ்ரவேலை நான் கண்டுபிடித்தேன்.+ உன் முன்னோர்கள் முதலில் பழுத்த அத்திப் பழங்களைப் போல் இருந்தார்கள். ஆனால், அவர்கள் பாகால் பேயோரிடம்+ போய்விட்டார்கள்.வெட்கங்கெட்ட தெய்வத்துக்குத் தங்களை அர்ப்பணித்தார்கள்.+தாங்கள் நேசித்த சிலையைப் போல் அருவருப்பானவர்களாக ஆனார்கள். 11  எப்பிராயீமின் பெருமையெல்லாம் பறவையைப் போலப் பறந்துபோனது.அவர்கள் யாரும் குழந்தையைப் பெற்றெடுப்பது இல்லை, கர்ப்பமாக இருப்பது இல்லை, கருத்தரிப்பதுகூட இல்லை.+ 12  அவர்கள் பிள்ளைகளை வளர்த்தாலும்,ஒரு பிள்ளைகூட வளர்ந்து ஆளாவதற்கு விடமாட்டேன்.+ நான் அவர்களைவிட்டு விலகும்போது அவர்களுக்குக் கேடுதான் வரும்!+ 13  மேய்ச்சல் நிலத்தில் நடப்பட்ட எப்பிராயீம் எனக்கு தீருவைப் போல இருந்தான்.+கொலை செய்யப்படுவதற்காகத் தன் மகன்களை வெளியே கொண்டுபோய் விடுவான்.” 14  யெகோவாவே, அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் இருந்துவிடாதீர்கள்.கரு தங்காத கர்ப்பப்பையையும் பால் சுரக்காத மார்பகங்களையும் கொடுங்கள். 15  “கில்காலில் எல்லா கெட்ட காரியங்களையும் அவர்கள் செய்தார்கள்;+ அங்கே நான் அவர்களை வெறுத்தேன். அவர்களுடைய அக்கிரமங்களுக்குத் தண்டனையாக அவர்களை என் வீட்டிலிருந்து துரத்திவிடுவேன்.+ இனி அவர்களிடம் அன்புகாட்ட மாட்டேன்.+அவர்களுடைய தலைவர்கள் எல்லாரும் பிடிவாதக்காரர்கள். 16  எப்பிராயீம் வெட்டப்படுவான்.+ அவனுடைய வேர் காய்ந்துபோகும், பழங்கள் எதுவும் தர மாட்டான். அவனுக்குப் பிள்ளைகள் பிறந்தாலும், அவனுடைய செல்லப் பிள்ளைகளைக் கொன்றுவிடுவேன்.” 17  அவர்கள் கீழ்ப்படியாமல் போனார்கள்.+அவர்களை என் கடவுள் ஒதுக்கிவிடுவார்.அவர்கள் மற்ற தேசங்களில் நாடோடிகளாகத் திரிவார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஒழுக்கங்கெட்டு நடந்து.”