கொலோசெயருக்குக் கடிதம் 3:1-25

  • பழைய சுபாவமும் புதிய சுபாவமும் (1-17)

    • உடல் உறுப்புகளை அழித்துப்போடுங்கள் (5)

    • எல்லாரையும் பரிபூரணமாக இணைப்பது அன்புதான் (14)

  • கிறிஸ்தவ குடும்பங்களுக்கு அறிவுரை (18-25)

3  ஆனாலும், நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள்+ என்றால், கடவுளுடைய வலது பக்கத்தில் அவர் உட்கார்ந்திருக்கிற+ இடத்துக்குரிய காரியங்களையே, அதாவது பரலோகத்துக்குரிய காரியங்களையே, தொடர்ந்து தேடுங்கள்.  பூமிக்குரிய காரியங்கள் மீதல்ல,+ பரலோகத்துக்குரிய காரியங்கள் மீதே+ உங்கள் மனதைப் பதிய வையுங்கள்.  ஏனென்றால், நீங்கள் இறந்துபோனீர்கள்; கடவுளுடைய விருப்பத்தின்படி உங்கள் வாழ்வு கிறிஸ்துவின் கையில் இருக்கிறது.  நமக்கு வாழ்வு தரும் கிறிஸ்து+ வெளிப்படுத்தப்படும்போது, நீங்களும் அவரோடு மகிமையுடன் வெளிப்படுத்தப்படுவீர்கள்.+  அதனால், பாலியல் முறைகேடு,* அசுத்தமான நடத்தை, கட்டுக்கடங்காத காமப்பசி,+ கெட்ட ஆசை, சிலை வழிபாட்டுக்குச் சமமான பேராசை ஆகியவற்றைத் தூண்டுகிற உங்களுடைய உடல் உறுப்புகளை* அழித்துப்போடுங்கள்.*+  இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள்மீது கடவுளுடைய கடும் கோபம் வரப்போகிறது.  ஒருகாலத்தில் நீங்களும் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்துவந்தீர்கள்.+  இப்போதோ கடும் கோபம், சினம், கெட்ட குணம்,+ பழிப்பேச்சு ஆகிய எல்லாவற்றையும் அடியோடு விட்டுவிடுங்கள்;+ ஆபாசமான பேச்சு உங்கள் வாயிலிருந்து ஒருபோதும் வரக் கூடாது.+  ஒருவரிடம் ஒருவர் பொய் சொல்லாதீர்கள்.+ பழைய சுபாவத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் களைந்துபோட்டு,+ 10  கடவுள் தருகிற புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்;+ அதாவது, திருத்தமான அறிவின் மூலம் உங்கள் சுபாவத்தைக் கடவுளுடைய சாயலுக்கு ஏற்றபடி புதிதாக்கிக்கொண்டே இருங்கள்.+ 11  இந்த விஷயத்தில் கிரேக்கர் என்றோ, யூதர் என்றோ, விருத்தசேதனம் செய்தவர் என்றோ, விருத்தசேதனம் செய்யாதவர் என்றோ, அன்னியர் என்றோ, சீத்தியர்* என்றோ, அடிமை என்றோ, சுதந்திரமானவர் என்றோ எந்த வேறுபாடும் இல்லை. கிறிஸ்துதான் எல்லாருக்குள்ளும் எல்லாமுமாக இருக்கிறார்.+ 12  அதனால், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு+ அவருக்குப் பரிசுத்தமானவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருக்கிற நீங்கள், கனிவான பாசத்தையும் கரிசனையையும்+ கருணையையும் மனத்தாழ்மையையும்+ சாந்தத்தையும்+ பொறுமையையும்+ காட்டுங்கள்.* 13  ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால்,+ தொடர்ந்து ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னித்துக்கொண்டே இருங்கள்.+ யெகோவா* உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.+ 14  இவை எல்லாவற்றுக்கும் மேலாக அன்பைக் காட்டுங்கள்.*+ எல்லாரையும் பரிபூரணமாக இணைப்பது அன்புதான்.+ 15  கிறிஸ்து தருகிற சமாதானம் உங்கள் இதயங்களில் ஆட்சி செய்யட்டும்.+ ஏனென்றால், இதற்காகத்தான் நீங்கள் ஒரே உடலாக ஆகும்படி அழைக்கப்பட்டீர்கள்; இதற்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதைக் காட்டுங்கள். 16  கிறிஸ்துவின் போதனை உங்களுக்குள் நிறைவாக இருந்து, எல்லா ஞானத்தையும் கொடுக்கட்டும். சங்கீதங்களாலும்+ புகழ் பாடல்களாலும் நன்றியோடு* பாடப்படுகிற பக்திப்பாடல்களாலும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுத்து உற்சாகப்படுத்திக்கொண்டே* இருங்கள். உங்கள் இதயத்திலிருந்து யெகோவாவை* புகழ்ந்து பாடிக்கொண்டே இருங்கள்.+ 17  நீங்கள் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் நம் எஜமானாகிய இயேசுவின் பெயரில் செய்து, பரலோகத் தகப்பனாகிய கடவுளுக்கு அவர் மூலம் நன்றி சொல்லுங்கள்.+ 18  மனைவிகளே, உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்;+ இதுவே நம் எஜமானைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஏற்றது. 19  கணவர்களே, உங்கள் மனைவிமேல் எப்போதும் அன்பு காட்டுங்கள்,+ அவளிடம் கடுகடுப்பாக* நடந்துகொள்ளாதீர்கள்.+ 20  பிள்ளைகளே, உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எல்லா விஷயத்திலும் கீழ்ப்படிந்து நடங்கள்.+ இதுதான் நம் எஜமானுக்குப் பிரியமானது. 21  அப்பாக்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல்* உண்டாக்காதீர்கள்;+ அவர்கள் சோர்ந்துபோவார்கள். 22  அடிமைகளே, இந்த உலகத்தில் இருக்கிற உங்கள் எஜமான்களுக்கு எல்லா விஷயத்திலும் கீழ்ப்படிந்து நடங்கள்;+ மனிதர்களைப் பிரியப்படுத்துவதற்காக, அவர்கள் பார்க்கும்போது மட்டும் வேலை செய்யாமல், யெகோவாவுக்கு* பயந்து உண்மை மனதோடு வேலை செய்யுங்கள். 23  நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனிதர்களுக்காகச் செய்யாமல், யெகோவாவுக்காக* முழு மூச்சோடு செய்யுங்கள்.+ 24  அதன் பலனாக யெகோவாவிடமிருந்து* ஆஸ்தி கிடைக்கும்+ என்பது உங்களுக்குத் தெரியும், இல்லையா? எஜமானாகிய கிறிஸ்துவுக்கு அடிமைகளாக வேலை செய்யுங்கள். 25  தவறு செய்கிறவன் தான் செய்த தவறுக்குத் தகுந்த கூலியை நிச்சயம் பெறுவான்;+ இதில் எந்தப் பாரபட்சமும் கிடையாது.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “மண்ணினாலான உங்கள் உடல் உறுப்புகளை.”
நே.மொ., “சாகடியுங்கள்.”
காட்டுமிராண்டித்தனமான மக்களையும் இந்த வார்த்தை குறித்தது.
நே.மொ., “அணிந்துகொள்ளுங்கள்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “அணிந்துகொள்ளுங்கள்.”
வே.வா., “இனிமையாக.”
வே.வா., “புத்திசொல்லிக்கொண்டே.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “முரட்டுத்தனமாக.”
வே.வா., “கோபம்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.