Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சகரியா புத்தகம்

அதிகாரங்கள்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • யெகோவாவிடம் திரும்பி வருவதற்கான அழைப்பு (1-6)

      • ‘என்னிடம் திரும்பி வாருங்கள், அப்போது நானும் உங்களிடம் திரும்பி வருவேன்’ (3)

    • தரிசனம் 1: குழிநாவல் மரங்களுக்கு இடையில் குதிரைவீரர்கள் (7-17)

      • “யெகோவாவாகிய நான் மறுபடியும் சீயோனை ஆறுதல்படுத்துவேன்” (17)

    • தரிசனம் 2: நான்கு கொம்புகளும் நான்கு கைத்தொழிலாளிகளும் (18-21)

  • 2

    • தரிசனம் 3: அளவுநூலைக் கையில் பிடித்திருக்கிற ஒருவர் (1-13)

      • எருசலேம் அளக்கப்பட வேண்டும் (2)

      • யெகோவா ‘நெருப்பு மதில்போல் சூழ்ந்திருக்கிறார்’ (5)

      • கடவுளின் கண்மணியைத் தொடுகிறவன் (8)

      • பல தேசத்து ஜனங்கள் யெகோவாவிடம் வருவார்கள் (11)

  • 3

    • தரிசனம் 4: தலைமைக் குருவின் உடை மாற்றப்படுகிறது (1-10)

      • தலைமைக் குருவாகிய யோசுவாவை சாத்தான் எதிர்க்கிறான் (1)

      • “தளிர் என்றழைக்கப்படும் என் ஊழியனை நான் அழைத்து வருகிறேன்” (8)

  • 4

    • தரிசனம் 5: ஒரு குத்துவிளக்கும் இரண்டு ஒலிவ மரங்களும் (1-14)

      • ‘மனித சக்தியால் அல்ல, என்னுடைய சக்தியால்தான் எல்லாமே நடக்கும்’ (6)

      • சிறியளவில் ஆரம்பிக்கப்பட்ட வேலையை அற்பமாக நினைக்கக் கூடாது (10)

  • 5

    • தரிசனம் 6: பறக்கும் சுருள் (1-4)

    • தரிசனம் 7: அளப்பதற்கான ஒரு பாத்திரம் (5-11)

      • அக்கிரமக்காரி என்று அழைக்கப்பட்ட ஒரு பெண் பாத்திரத்திற்குள் இருக்கிறாள் (8)

      • அந்தப் பாத்திரம் சினேயார் தேசத்துக்குக் கொண்டுபோகப்படுகிறது (9-11)

  • 6

    • தரிசனம் 8: நான்கு ரதங்கள் (1-8)

    • தளிர் என்ற பெயருடையவர் ராஜாவாகவும் குருவாகவும் சேவை செய்வார் (9-15)

  • 7

    • போலியாக விரதம் இருப்பவர்களை யெகோவா கண்டிக்கிறார் (1-14)

      • ‘நீங்கள் எனக்காகவா சாப்பிடாமல் புலம்பி அழுதீர்கள்?’ (5)

      • “நீதிநியாயத்தோடு தீர்ப்பு கொடுங்கள், ஒருவருக்கொருவர் மாறாத அன்பையும் இரக்கத்தையும் காட்டுங்கள்” (9)

  • 8

    • யெகோவா சீயோனுக்குச் சமாதானத்தையும் சத்தியத்தையும் தருகிறார் (1-23)

      • எருசலேம், “சத்திய நகரம்” (3)

      • “நீங்கள் ஒருவரோடு ஒருவர் உண்மை பேச வேண்டும்” (16)

      • விரதம் இருந்த நாட்கள் பண்டிகை நாட்களாக மாறும் (18, 19)

      • “யெகோவாவை மனதார தேடிப் போகலாம்” (21)

      • பத்துப் பேர் ஒரு யூதனுடைய உடையை இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறார்கள் (23)

  • 9

    • சுற்றியுள்ள தேசங்களுக்கு எதிராகக் கடவுளுடைய தீர்ப்பு (1-8)

    • சீயோனின் ராஜா வருகிறார் (9, 10)

      • தாழ்மையுள்ள ராஜா கழுதையின் மேல் ஏறிவருகிறார் (9)

    • யெகோவாவுடைய ஜனங்கள் விடுவிக்கப்படுவார்கள் (11-17)

  • 10

    • மழைக்காக யெகோவாவிடம் கேளுங்கள், பொய் தெய்வங்களிடம் கேட்காதீர்கள் (1, 2)

    • யெகோவா தன்னுடைய ஜனங்களை ஒன்றுசேர்ப்பார் (3-12)

      • யூதா வம்சத்தாரிடமிருந்து மிக முக்கியமானவர் வருகிறார் (3, 4)

  • 11

    • கடவுளுடைய உண்மை மேய்ப்பனை ஒதுக்கித்தள்ளுபவர்களுக்கு வரும் விளைவுகள் (1-17)

      • “வெட்டுவதற்காகவே வைக்கப்பட்டுள்ள ஆடுகளை நீ மேய்க்க வேண்டும்” (4)

      • இனிமை, ஒற்றுமை என்ற இரண்டு கோல்கள் (7)

      • மேய்ப்பனின் கூலி: 30 வெள்ளிக் காசுகள் (12)

      • அந்தக் காசுகள் பொக்கிஷ அறையில் தூக்கியெறியப்படுகின்றன (13)

  • 12

    • யூதாவையும் எருசலேமையும் யெகோவா பாதுகாப்பார் (1-9)

      • எருசலேம், “ஒரு பாறாங்கல்” (3)

    • குத்தப்பட்டவருக்காக ஜனங்கள் அழுது புலம்புகிறார்கள் (10-14)

  • 13

    • சிலைகளும் பொய்த் தீர்க்கதரிசிகளும் ஒழிக்கப்படுகிறார்கள் (1-6)

      • பொய்த் தீர்க்கதரிசிகள் வெட்கப்பட்டுப்போவார்கள் (4-6)

    • மேய்ப்பன் தாக்கப்படுவான் (7-9)

      • மூன்றாவது பங்கு புடமிடப்படும் (9)

  • 14

    • உண்மை வணக்கத்துக்குக் கிடைக்கும் முழு வெற்றி (1-21)

      • ஒலிவ மலை இரண்டாகப் பிளக்கும் (4)

      • ஜனங்கள் யெகோவாவை மட்டும்தான் வணங்குவார்கள், அவருடைய பெயரை மட்டும்தான் புகழ்வார்கள் (9)

      • எருசலேமை எதிர்க்கிறவர்களுக்கு வரும் பயங்கரமான நோய் (12-15)

      • கூடாரப் பண்டிகை கொண்டாடப்படுகிறது (16-19)

      • எல்லா சமையல் பாத்திரங்களும் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக இருக்கும் (20, 21)