சங்கீதம் 1:1-6

  • வித்தியாசமான இரண்டு பாதைகள்

    • கடவுளுடைய சட்டத்தைப் படிப்பதால் வரும் சந்தோஷம் (2)

    • நீதிமான்கள் கனி தருகிற மரம்போல் இருக்கிறார்கள் (3)

    • பொல்லாதவர்கள் பதரைப் போல் இருக்கிறார்கள் (4)

1  பொல்லாதவர்கள் சொல்கிற அறிவுரையைக் கேட்காமலும்,பாவிகள் போகிற பாதையில் போகாமலும்,+கேலி செய்கிறவர்கள்+ உட்காருகிற இடத்தில் உட்காராமலும் இருக்கிறவன் சந்தோஷமானவன்.   அவன் யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறான்.+அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிக்கிறான்.*+   அவன் வாய்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம் போலவும்,அந்தந்த பருவத்தில் கனி தருகிற பசுமையான* மரம் போலவும் இருப்பான். அவன் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.+   ஆனால், பொல்லாதவர்களின் நிலைமையே வேறு.அவர்கள் காற்றில் அடித்துக்கொண்டு போகப்படுகிற பதரைப் போல் இருக்கிறார்கள்.   அதனால்தான், நியாயத்தீர்ப்பின்போது பொல்லாதவர்கள் நிலைநிற்க மாட்டார்கள்.+நீதிமான்களின் கூட்டத்தில் பாவிகள் நிலைநிற்க மாட்டார்கள்.+   நீதிமான்களின் பாதை யெகோவாவுக்குத் தெரியும்.+ஆனால், பொல்லாதவர்களின் பாதை அழிந்துபோகும்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “தியானித்துக்கொண்டிருக்கிறான்.”
நே.மொ., “இலை உதிராத.”