சங்கீதம் 11:1-7

  • யெகோவாவிடம் தஞ்சம் புகுதல்

    • “யெகோவா தன்னுடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்” (4)

    • வன்முறையை விரும்புகிறவனைக் கடவுள் வெறுக்கிறார் (5)

இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் பாடல். 11  யெகோவாவிடம் நான் தஞ்சம் புகுந்திருக்கிறேன்.+ அப்படியிருக்கும்போது, நீங்கள் எப்படி என்னிடம், “பறவையைப் போல உன் மலைக்குப் பறந்து போ!” என்று சொல்லலாம்?   அதுமட்டுமல்ல, “பொல்லாதவர்கள் எப்படி வில்லை வளைக்கிறார்கள், பார்!நேர்மையான நெஞ்சமுள்ளவர்களைக் கொன்றுபோடுவதற்காகஅவர்கள் இருட்டிலிருந்து அம்பைக் குறிபார்த்து எறிகிறார்கள்.   அஸ்திவாரங்களே* தகர்க்கப்படும்போது,நீதிமான்களால் என்ன செய்ய முடியும்” என்று நீங்கள் எப்படி என்னிடம் சொல்லலாம்?   யெகோவா தன்னுடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.+ யெகோவாவின் சிம்மாசனம் பரலோகத்தில் இருக்கிறது.+ அவருடைய கூர்மையான* கண்கள் மனிதர்களை ஆராய்கின்றன.+   நீதிமானையும் பொல்லாதவனையும் யெகோவா ஆராய்கிறார்.+வன்முறையை விரும்புகிற எவனையும் அவர் வெறுக்கிறார்.+   பொல்லாதவர்கள்மேல் அவர் கண்ணிகளை வர வைப்பார்.*நெருப்பும் கந்தகமும்+ அனல் காற்றும் அவர்களைத் தாக்கும்படி செய்வார்.*   யெகோவா நீதியுள்ளவர்;+ நீதியான செயல்களை விரும்புகிறவர்.+ நேர்மையானவர்கள் அவருடைய முகத்தைப் பார்ப்பார்கள்.*+

அடிக்குறிப்புகள்

வே.வா., “நியாயத்தின் அஸ்திவாரங்களே.”
வே.வா., “உன்னிப்பான; ஒளிவீசும்.”
அல்லது, “எரிகிற தணலைக் கொட்டுவார்.”
நே.மொ., “அவர்களுடைய கிண்ணத்தின் பங்காக இருக்கும்.”
வே.வா., “அவருடைய கருணையைப் பெறுவார்கள்.”