சங்கீதம் 112:1-10

  • நீதிமான் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்

    • தாராளமாகக் கொடுக்கிறவன் செழிப்பான் (5)

    • “நீதிமான் என்றென்றும் நினைவில் வைக்கப்படுவான்” (6)

    • தாராள குணமுள்ளவன் ஏழைகளுக்குக் கொடுக்கிறான் (9)

112  “யா”வைப் புகழுங்கள்!*+ א [ஆலெஃப்] யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவன் சந்தோஷமானவன்.+ב [பேத்]அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.+ ג [கீமெல்]   அவனுடைய வாரிசுகள் இந்த உலகத்தில் பலம்படைத்தவர்களாக இருப்பார்கள்.ד [டாலத்]நேர்மையானவனின் வம்சம்* ஆசீர்வதிக்கப்படும்.+ ה [ஹே]   அவனுடைய வீட்டில் பணமும் பொருளும் குவிந்திருக்கும்.ו [வா]அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கும். ז [ஸாயின்]   நேர்மையான ஆட்களுக்கு, இருட்டில் பிரகாசிக்கும் ஒளியைப் போல அவன் இருக்கிறான்.+ ח [ஹேத்] கரிசனையாகவும்* இரக்கமாகவும்+ நீதியாகவும் நடந்துகொள்கிறான். ט [டேத்]   தாராளமாக* கடன் கொடுக்கிறவனுக்கு எந்தக் குறையும் வராது.+ י [யோத்] அவன் எல்லாவற்றையுமே நியாயமாகச் செய்கிறான். כ [காஃப்]   அவன் அசைக்கப்படவே மாட்டான்.+ ל [லாமெத்] நீதிமான் என்றென்றும் நினைவில் வைக்கப்படுவான்.+ מ [மேம்]   கெட்ட செய்தியைக் கேட்டு அவன் பயப்பட மாட்டான்.+ נ [நூன்] அவனுடைய உள்ளம் உறுதியாக இருக்கிறது, யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறது.+ ס [சாமெக்]   அவனுடைய நெஞ்சம் நிலைதடுமாறாது;* அவன் எதற்கும் பயப்பட மாட்டான்.+ע [ஆயின்]கடைசியில், எதிரிகளை வெற்றிப் பெருமிதத்தோடு பார்ப்பான்.+ פ [பே]   அவன் வாரி வழங்கியிருக்கிறான், ஏழைகளுக்குக் கொடுத்திருக்கிறான்.+ צ [சாதே] அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.+ ק [கோஃப்] அவனுடைய பலத்தின் மகிமை கூடிக்கொண்டே போகும். ר [ரேஷ்] 10  பொல்லாதவன் அதைப் பார்த்து எரிச்சலடைவான். ש [ஷீன்] பற்களை நறநறவென்று கடித்து, கடைசியில் மறைந்துபோவான். ת [ட்டா] பொல்லாதவர்களுடைய ஆசைகள் அழிந்துபோகும்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா., “நேர்மையானவர்களின் தலைமுறை.”
வே.வா., “கனிவாகவும்.”
வே.வா., “கனிவாக.”
வே.வா., “திடமாக இருக்கும்; உறுதியாக இருக்கும்.”