சங்கீதம் 113:1-9

  • உயர்ந்த இடத்தில் இருக்கிற கடவுள் எளியவனைத் தூக்கிவிடுகிறார்

    • யெகோவாவின் பெயர் என்றும் புகழப்படும் (2)

    • கடவுள் குனிந்து பார்க்கிறார் (6)

113  “யா”வைப் புகழுங்கள்!* யெகோவாவின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள்.யெகோவாவின் பெயரைப் புகழுங்கள்.   யெகோவாவின் பெயர் புகழப்படட்டும்.+இன்றும் என்றும் புகழப்படட்டும்.   சூரியன் உதிக்கிற திசையிலிருந்து மறைகிற திசைவரையெகோவாவின் பெயர் புகழப்படட்டும்.+   எல்லா தேசங்களுக்கும் மேலாக யெகோவா உயர்ந்திருக்கிறார்.+அவருடைய மகிமை வானங்களுக்கும் மேலாக உயர்ந்திருக்கிறது.+   நம் கடவுளாகிய யெகோவாவைப் போல யார் இருக்கிறார்கள்?+அவர் உயர்ந்த இடத்தில் குடிகொண்டிருக்கிறார்.*   அவர் வானத்தையும் பூமியையும் குனிந்து பார்க்கிறார்.*+   எளியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார். ஏழையைச் சாம்பல் குவியலிலிருந்து* உயர்த்துகிறார்.+   அவனை அதிபதிகளோடு உட்கார வைக்கிறார்.தன்னுடைய மக்களின் அதிபதிகளோடு உட்கார வைக்கிறார்.   குழந்தையில்லாத பெண்ணுக்குக் குழந்தை பாக்கியத்தைத் தருகிறார்.வீட்டில் குழந்தைகுட்டிகளோடு அவளைச் சந்தோஷமாக வாழ வைக்கிறார்.+ “யா”வைப் புகழுங்கள்!*

அடிக்குறிப்புகள்

வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா., “வீற்றிருக்கிறார்.”
வே.வா., “வானத்தையும் பூமியையும் பார்ப்பதற்காகத் தன்னையே தாழ்த்துகிறார்.”
அல்லது, “குப்பை மேட்டிலிருந்து.”
வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.