சங்கீதம் 115:1-18

  • கடவுளை மட்டுமே மகிமைப்படுத்த வேண்டும்

    • உயிரில்லாத சிலைகள் (4-8)

    • பூமி மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது (16)

    • “இறந்தவர்கள் ‘யா’வைப் புகழ்வதில்லை” (17)

115  எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல,*உங்களுடைய பெயருக்கே மகிமை சேரும்படி செய்யுங்கள்.+ஏனென்றால், நீங்கள்தான் மாறாத அன்புள்ளவர், உண்மையுள்ளவர்.+   “அவர்களுடைய கடவுள் எங்கே போய்விட்டார்?” என்று மற்ற தேசத்து மக்கள் ஏன் கேட்க வேண்டும்?+   நம்முடைய கடவுள் பரலோகத்தில் இருக்கிறார்.எல்லாவற்றையும் தன்னுடைய விருப்பப்படியே செய்கிறார்.   அவர்கள் வணங்குகிற சிலைகள் வெறும் வெள்ளியும் தங்கமும்தான்.மனிதர்களுடைய கைகளால் செய்யப்பட்டவைதான்.+   அவற்றுக்கு வாய் இருக்கிறது, ஆனால் பேச முடியாது.+கண்கள் இருக்கின்றன, ஆனால் பார்க்க முடியாது.   காதுகள் இருக்கின்றன, ஆனால் கேட்க முடியாது.மூக்கு இருக்கிறது, ஆனால் முகர முடியாது.   கைகள் இருக்கின்றன, ஆனால் தொட்டு உணர முடியாது.கால்கள் இருக்கின்றன, ஆனால் நடக்க முடியாது.+அவற்றின் தொண்டையிலிருந்து எந்தச் சத்தமும் வராது.+   அவற்றைச் செய்கிற ஆட்களும் அவற்றை நம்புகிற எல்லாரும்+அவற்றைப் போலத்தான் ஆவார்கள்.+   இஸ்ரவேலர்களே, யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள்.+அவரே உங்கள் துணை, அவரே உங்கள் கேடயம்.+ 10  ஆரோன் வம்சத்தாரே,+ யெகோவாவை நம்புங்கள்.அவரே உங்கள் துணை, அவரே உங்கள் கேடயம். 11  யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவை நம்புங்கள்.+அவரே உங்கள் துணை, அவரே உங்கள் கேடயம்.+ 12  யெகோவா நம்மை ஞாபகத்தில் வைத்திருக்கிறார், அவர் நம்மை ஆசீர்வதிப்பார்.இஸ்ரவேல் வம்சத்தாரை அவர் ஆசீர்வதிப்பார்.+ஆரோன் வம்சத்தாரை அவர் ஆசீர்வதிப்பார். 13  யெகோவா தனக்குப் பயந்து நடக்கிற எல்லாரையும் ஆசீர்வதிப்பார்.சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாரையும் ஆசீர்வதிப்பார். 14  யெகோவா உங்களைப் பெருக வைப்பார்.உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பெருக வைப்பார்.+ 15  யெகோவா உங்களை ஆசீர்வதிக்கட்டும்.+அவரே வானத்தையும் பூமியையும் படைத்தவர்.+ 16  வானம்* யெகோவாவுக்குச் சொந்தம்.+ஆனால், இந்தப் பூமியை மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.+ 17  இறந்தவர்கள் “யா”வை* புகழ்வதில்லை.+மவுனமான இடத்துக்கு* இறங்குகிறவர்கள் அவரைப் புகழ்வதில்லை.+ 18  ஆனால், நாங்கள் இன்றும் என்றும்“யா”வைப் புகழ்வோம். “யா”வைப் புகழுங்கள்!*

அடிக்குறிப்புகள்

வே.வா., “எங்களுக்குத் தகுதியில்லை, யெகோவாவே, எங்களுக்கு எந்தத் தகுதியுமில்லை.”
வே.வா., “பரலோகம்.”
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா, “சவக்குழிக்குள்.”
வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.