சங்கீதம் 116:1-19

  • நன்றிப் பாடல்

    • ‘நான் யெகோவாவுக்கு என்ன கைமாறு செய்வேன்?’ (12)

    • “மீட்பு என்ற கிண்ணத்தை எடுத்துக்கொள்வேன்” (13)

    • ‘யெகோவாவிடம் நேர்ந்துகொண்டதையெல்லாம் நிறைவேற்றுவேன்’ (14, 18)

    • உண்மையாக இருப்பவர்களின் மரணம் பெரிய இழப்பு (15)

116  நான் யெகோவாமேல் அன்பு வைத்திருக்கிறேன்.ஏனென்றால், அவர் என் குரலைக் கேட்கிறார்,* உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேட்கிறார்.+   நான் சொல்வதைக் காதுகொடுத்து* கேட்கிறார்.+நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் அவரை நோக்கி வேண்டுவேன்.   மரணக் கயிறுகள் என்னைச் சுற்றிக்கொண்டன.கல்லறையின் பிடியில் சிக்கிக்கொண்டேன்.+ துன்பத்திலும் துயரத்திலும் மூழ்கிப்போனேன்.+   அப்போது, நான் யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டினேன்.+ “யெகோவாவே, என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று கதறினேன்.   யெகோவா கரிசனையுள்ளவர்,* நீதியுள்ளவர்.+நம் கடவுள் இரக்கமுள்ளவர்.+   அனுபவம் இல்லாதவர்களை யெகோவா காக்கிறார்.+ நான் துவண்டுபோனேன், அவர் என்னைக் காப்பாற்றினார்.   யெகோவா எனக்கு அன்போடு உதவினார்.அதனால், நான் மறுபடியும் நிம்மதியாக இருப்பேன்.   கடவுளே, நீங்கள் என்னை மரணத்திலிருந்து காப்பாற்றினீர்கள்.என் கண்கள் கலங்காதபடியும்,என் கால்கள் தடுமாறாதபடியும் பார்த்துக்கொண்டீர்கள்.+   இந்த உலகத்தில் நான் தொடர்ந்து யெகோவாவுக்கு முன்பாக நடப்பேன். 10  நான் விசுவாசம் வைத்தேன், அதனால் பேசினேன்.+நான் பயங்கர கஷ்டத்தில் தவித்தேன். 11  நான் பதறிப்போய், “மனிதர்கள் எல்லாருமே பொய்யர்கள்”+ என்று சொன்னேன். 12  யெகோவா எனக்குச் செய்திருக்கிற எல்லா நன்மைகளுக்காகவும்நான் அவருக்கு என்ன கைமாறு செய்வேன்? 13  மீட்பு* என்ற கிண்ணத்தை எடுத்துக்கொள்வேன்.யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வேன். 14  யெகோவாவிடம் நேர்ந்துகொண்டதையெல்லாம்அவருடைய மக்கள் எல்லாருக்கும் முன்பாக நிறைவேற்றுவேன்.+ 15  யெகோவா தனக்கு உண்மையாக* இருப்பவர்களின் மரணத்தைபெரிய இழப்பாக* நினைக்கிறார்.+ 16  யெகோவாவே, நான் உங்கள் ஊழியன்.அதனால் உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன். நான் உங்கள் ஊழியன், உங்களுடைய அடிமைப்பெண்ணின் மகன். என்னுடைய கட்டுகளிலிருந்து என்னை விடுவித்தீர்கள்.+ 17  நான் உங்களுக்கு நன்றிப் பலியைச் செலுத்துவேன்.+யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வேன். 18  யெகோவாவிடம் நேர்ந்துகொண்டதையெல்லாம்அவருடைய மக்கள் எல்லாருக்கும் முன்பாக நிறைவேற்றுவேன்.+ 19  யெகோவாவின் ஆலயப் பிரகாரங்களிலே,+எருசலேமின் நடுவிலே அவற்றை நிறைவேற்றுவேன். “யா”வைப் புகழுங்கள்!*+

அடிக்குறிப்புகள்

அல்லது, “யெகோவா என் குரலைக் கேட்பதால் எனக்குள் அன்பு பொங்குகிறது.”
வே.வா., “குனிந்து.”
வே.வா., “கனிவுள்ளவர்.”
வே.வா., “மாபெரும் மீட்பு.”
வே.வா., “பற்றுமாறாமல்.”
நே.மொ., “மதிப்புள்ளதாக.”
வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.