சங்கீதம் 118:1-29

  • யெகோவா தந்த வெற்றிக்கு நன்றி சொல்லுதல்

    • ‘நான் “யா”வை நோக்கிக் கூப்பிட்டேன், அவர் என் குரலைக் கேட்டார்’ (5)

    • “யெகோவா என் பக்கத்தில் இருக்கிறார்” (6, 7)

    • ஒதுக்கித்தள்ளப்பட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாகும் (22)

    • “யெகோவாவின் பெயரில் வருகிறவர்” (26)

118  யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர்.+அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.   “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று இஸ்ரவேல் மக்கள் சொல்லட்டும்.   “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று ஆரோனின் வம்சத்தார் சொல்லட்டும்.   “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்கள் சொல்லட்டும்.   நான் வேதனையில் தவித்தபோது, “யா”வை* நோக்கிக் கூப்பிட்டேன்.“யா” என் குரலைக் கேட்டு, என்னைப் பாதுகாப்பான* இடத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்.+   யெகோவா என் பக்கத்தில் இருக்கிறார், நான் பயப்பட மாட்டேன்.+ மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?+   யெகோவா என் பக்கத்திலேயே எனக்குத் துணையாக இருக்கிறார்.*+என்னை வெறுக்கிறவர்களை நான் வெற்றிப் பெருமிதத்தோடு பார்ப்பேன்.+   மனிதர்களை நம்புவதைவிடயெகோவாவிடம் தஞ்சம் அடைவதே நல்லது.+   தலைவர்களை நம்புவதைவிடயெகோவாவிடம் தஞ்சம் அடைவதே நல்லது.+ 10  எல்லா தேசத்து மக்களும் என்னைச் சுற்றிவளைத்தார்கள்.ஆனால், யெகோவாவின் பெயரால் அவர்களை விரட்டியடித்தேன்.+ 11  அவர்கள் என்னைச் சுற்றிவளைத்தார்கள், தப்பிக்க முடியாதபடி சுற்றிவளைத்தார்கள்.ஆனால், யெகோவாவின் பெயரில்அவர்களை விரட்டியடித்தேன். 12  தேனீக்கள்போல் அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.ஆனால், முட்செடியில் பற்றிய நெருப்புபோல் சட்டென்று அணைந்துபோனார்கள். யெகோவாவின் பெயரில்அவர்களை விரட்டியடித்தேன்.+ 13  என்னை விழ வைப்பதற்காக பலமாய்த் தள்ளினார்கள்.*ஆனால், யெகோவா எனக்கு உதவி செய்தார். 14  “யா”* என் அடைக்கலம், என் பலம்.அவர் என் மீட்பரானார்.+ 15  சந்தோஷ சத்தமும் வெற்றி* முழக்கமும்நீதிமான்களின் கூடாரங்களில் கேட்கிறது. யெகோவாவின் வலது கை அவருடைய வல்லமையை வெளிக்காட்டுகிறது.+ 16  யெகோவாவின் வலது கை உயர்ந்தோங்கியிருக்கிறது.யெகோவாவின் வலது கை அவருடைய வல்லமையை வெளிக்காட்டுகிறது.+ 17  நான் சாக மாட்டேன்.“யா”வின்* செயல்களை அறிவிப்பதற்காக வாழ்வேன்.+ 18  “யா”* என்னைக் கடுமையாகக் கண்டித்தார்.+ஆனால், நான் சாகும்படி அவர் விடவில்லை.+ 19  நீதியின் கதவுகளை எனக்குத் திறந்துவிடுங்கள்,+நான் உள்ளே போய், “யா”வை* புகழ்வேன். 20  இது யெகோவாவின் கதவு. நீதிமான்கள் அதன் வழியாகப் போவார்கள்.+ 21  கடவுளே, நீங்கள் எனக்குப் பதில் தந்து, என் மீட்பராக இருந்தீர்கள்.அதனால், நான் உங்களைப் புகழ்வேன்.+ 22  கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லேமூலைக்குத் தலைக்கல்லாக ஆனது.+ 23  இது யெகோவாவின் செயல்.+இது நம்முடைய கண்களுக்கு அருமையாக இருக்கிறது.+ 24  இது யெகோவா வர வைத்திருக்கும் நாள்.இந்த நாளில் நாம் சந்தோஷத்தில் பூரித்துப்போவோம். 25  யெகோவாவே, தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள், உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறோம். யெகோவாவே, தயவுசெய்து எங்களுக்கு வெற்றி கொடுங்கள்! 26  யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.+நாங்கள் யெகோவாவின் ஆலயத்திலிருந்து உங்கள் எல்லாரையும் ஆசீர்வதிக்கிறோம். 27  யெகோவாதான் கடவுள்.அவர் நமக்கு வெளிச்சம் தருகிறார்.+கையில் கிளைகளைப் பிடித்துக்கொண்டு பண்டிகை ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள்.+ பலிபீடத்தின் கொம்புகள்வரை+ போங்கள். 28  என் கடவுளே, நான் உங்களை மெச்சிப் பேசுவேன்.நீங்கள்தான் என் கடவுள், நான் உங்களைப் புகழ்வேன்.+ 29  யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்,+ அவர் நல்லவர்.அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.+

அடிக்குறிப்புகள்

“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா., “விசாலமான.”
அல்லது, “எனக்கு உதவி செய்கிறவர்களோடு இருக்கிறார்.”
அல்லது, “தள்ளினீர்கள்.”
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா., “மீட்பின்.”
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.