சங்கீதம் 120:1-7
நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல்.*
120 வேதனையில் நான் யெகோவாவைக் கூப்பிட்டேன்.+அவர் எனக்குப் பதில் கொடுத்தார்.+
2 யெகோவாவே, பொய் பேசுகிற உதடுகளும் ஏமாற்றுகிற நாவும்,என் உயிரைப் பறித்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
3 ஏமாற்றுகிற நாவே,+கடவுள் உன்னை என்ன செய்வார் தெரியுமா?உன்னை எப்படித் தண்டிப்பார் தெரியுமா?
4 மாவீரனின் கூர்மையான அம்புகளாலும்,+சட்டென்று தீப்பிடிக்கிற பாலைவன மரத்தின் நெருப்புத் தணல்களாலும்+அவர் உன்னைத் தாக்குவார்.
5 ஐயோ! நான் மேசேக்கில்+ அன்னியனாக வாழ்ந்தது போதும்!
கேதாரின்+ கூடாரங்களுக்கு நடுவே குடியிருந்தது போதும்!
6 சமாதானத்தை வெறுக்கிறவர்களின் மத்தியிலேஇவ்வளவு காலம் தங்கியிருந்தது போதும்!+
7 நான் சமாதானத்தையே விரும்புகிறேன்.ஆனால், நான் என்ன பேசினாலும் அவர்கள் சண்டைக்குத்தான் நிற்கிறார்கள்.
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “ஏறுதலின் பாடல்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.