சங்கீதம் 136:1-26

  • யெகோவா என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்

    • வானத்தையும் நிலப்பரப்பையும் கைத்திறமையால் படைத்திருக்கிறார் (5, 6)

    • பார்வோன் செங்கடலில் செத்தான் (15)

    • துவண்டுபோனவர்களைக் கடவுள் நினைத்துப் பார்க்கிறார் (23)

    • எல்லா உயிர்களுக்கும் உணவு (25)

136  யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.+   தேவாதி தேவனுக்கு+ நன்றி சொல்லுங்கள்.அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.   எஜமான்களுக்கெல்லாம் எஜமானுக்கு நன்றி சொல்லுங்கள்.அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.   அவர் ஒருவரே மாபெரும் அற்புதங்களைச் செய்கிறார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.+   அவர் தன்னுடைய கைத்திறமையால்* வானத்தைப் படைத்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.   அவர் தண்ணீருக்குமேல் நிலப்பரப்பை விரித்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.   அவர் மாபெரும் ஒளிச்சுடர்களைப் படைத்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.   அவர் பகலில் ஒளிவீச* சூரியனைப் படைத்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.   அவர் ராத்திரியில் ஒளிதர* நிலவையும் நட்சத்திரங்களையும் படைத்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். 10  அவர் எகிப்தியர்களின் முதல் பிறப்புகளைக் கொன்றுபோட்டார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். 11  அவர் இஸ்ரவேலர்களை அங்கிருந்து விடுதலை செய்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். 12  அவர் தன்னுடைய கைபலத்தாலும்+ மகா வல்லமையாலும் அவர்களை விடுவித்தார்.அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். 13  அவர் செங்கடலை இரண்டாகப் பிளந்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். 14  அவர் அதன் நடுவில் இஸ்ரவேலர்களை நடந்துபோக வைத்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். 15  அவர் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் மூழ்கடித்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். 16  அவர் தன்னுடைய மக்களை வனாந்தரத்தின் வழியாக அழைத்துவந்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். 17  அவர் மாபெரும் ராஜாக்களை வீழ்த்தினார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். 18  அவர் பலம்படைத்த ராஜாக்களைக் கொன்றுபோட்டார்.அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். 19  அவர் எமோரியர்களின் ராஜாவான சீகோனைக்+ கொன்றுபோட்டார்.அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். 20  அவர் பாசானின் ராஜாவான ஓகைச் சாகடித்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். 21  அவர் அந்த ஜனங்களுடைய தேசத்தைத் தன்னுடைய மக்களுக்குக் கொடுத்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். 22  அவர் அதைத் தன் ஊழியர்களான இஸ்ரவேலர்களுக்குச் சொத்தாகக் கொடுத்தார்.அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். 23  அவர் துவண்டுபோயிருந்த நம்மை நினைத்துப் பார்த்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.+ 24  அவர் நம்மை எதிரிகளிடமிருந்து மறுபடியும் மறுபடியும் காப்பாற்றினார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். 25  அவர் எல்லா உயிர்களுக்கும் உணவு தருகிறார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். 26  பரலோகத்தின் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “புத்திக்கூர்மையால்.”
வே.வா., “பகலை ஆள.”
வே.வா., “ராத்திரியை ஆள.”