சங்கீதம் 143:1-12

  • வறண்ட நிலம் மழைக்காக ஏங்குவதுபோல் கடவுளுக்காக ஏங்குதல்

    • ‘நீங்கள் செய்தவற்றைப் பற்றி யோசித்துப் பார்க்கிறேன்’ (5)

    • “உங்களுடைய விருப்பப்படி நடக்க எனக்குக் கற்றுக்கொடுங்கள்” (10)

    • ‘உங்களுடைய அருமையான சக்தி என்னை வழிநடத்தட்டும்’ (10)

தாவீதின் சங்கீதம். 143  யெகோவாவே, என் ஜெபத்தைக் கேளுங்கள்.+உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேளுங்கள். உங்களுடைய உண்மைத்தன்மைக்கும் நீதிக்கும் ஏற்றபடி எனக்குப் பதில் கொடுங்கள்.   அடியேனை விசாரணைக் கூண்டில் நிறுத்தாதீர்கள்.உயிரோடு இருக்கிற யாருமே உங்கள்முன் நீதிமானாக இருக்க முடியாதே.+   எதிரி என்னைத் துரத்துகிறான்.என்னை* தரையில் போட்டு நசுக்குகிறான். ரொம்பக் காலத்துக்கு முன் இறந்தவர்களைப் போல என்னை இருட்டில் இருக்க வைக்கிறான்.   நான் நொந்துபோயிருக்கிறேன்.+என் இதயத்தில் தெம்பே இல்லை.+   கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.உங்களுடைய செயல்களைப் பற்றியெல்லாம் தியானிக்கிறேன்.+உங்களுடைய கைகளால் நீங்கள் செய்தவற்றைப் பற்றி ஆர்வத்தோடு யோசித்துப் பார்க்கிறேன்.*   கைகளை விரித்து உங்களிடம் ஜெபம் செய்கிறேன்.வறண்ட நிலம் மழைக்காகத் தவிப்பதுபோல்,நான் உங்களுக்காகத் தவிக்கிறேன்.+ (சேலா)   யெகோவாவே, எனக்குச் சீக்கிரம் பதில் கொடுங்கள்.+என் பலமெல்லாம் போய்விட்டது.+ உங்கள் முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்ளாதீர்கள்.+இல்லாவிட்டால், நான் சவக்குழிக்குள் போகிறவனைப் போல ஆகிவிடுவேன்.+   காலையில் உங்களுடைய மாறாத அன்பைப் பற்றிக் கேட்க வையுங்கள்.ஏனென்றால், நான் உங்களைத்தான் நம்பியிருக்கிறேன். நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காட்டுங்கள்.+ஏனென்றால், நான் உங்களிடம்தான் உதவிக்காகக் கெஞ்சுகிறேன்.   யெகோவாவே, எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். எனக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.+ 10  உங்களுடைய விருப்பப்படி நடக்க* எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+நீங்கள்தான் என் கடவுள். உங்களுடைய அருமையான சக்தி என்னைச் சமமான பாதையில்* வழிநடத்தட்டும். 11  யெகோவாவே, உங்களுடைய பெயரை மனதில் வைத்து என் உயிரைக் காப்பாற்றுங்கள். உங்கள் நீதியின்படி என்னை வேதனையிலிருந்து காப்பாற்றுங்கள்.+ 12  உங்களுடைய மாறாத அன்பினால் என் எதிரிகளுக்கு முடிவுகட்டுங்கள்.+என்னைக் கொடுமைப்படுத்துகிற எல்லாரையும் ஒழித்துக்கட்டுங்கள்.+ஏனென்றால், நான் உங்களுடைய ஊழியன்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “என் உயிரை.”
வே.வா., “படிக்கிறேன்.”
வே.வா., “சித்தத்தைச் செய்ய.”
வே.வா., “நேர்மையானவர்களின் தேசத்தில்.”