சங்கீதம் 146:1-10

  • மனிதர்களை அல்ல, கடவுளை நம்புங்கள்

    • சாகும்போது மனிதனுடைய யோசனைகள் அழிந்துபோகின்றன (4)

    • துவண்டுபோனவர்களைக் கடவுள் தூக்கி நிறுத்துகிறார் (8)

146  “யா”வைப் புகழுங்கள்!*+ என் ஜீவன் யெகோவாவைப் புகழட்டும்.+   வாழ்நாளெல்லாம் நான் யெகோவாவைப் புகழ்வேன். நான் உயிரோடு இருக்கும்வரை என் கடவுளைப் புகழ்ந்து பாடுவேன்.*   அதிகாரிகளை* நம்பாதீர்கள்,மற்ற மனிதர்களையும் நம்பாதீர்கள்.அவர்களால் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது.+   அவர்களுடைய உயிர்சக்தி* போய்விடுகிறது, அவர்கள் மண்ணுக்குத் திரும்புகிறார்கள்.+அதே நாளில் அவர்களுடைய யோசனைகள் அழிந்துபோகின்றன.+   யாக்கோபின் கடவுளைத் துணையாகக் கொண்டிருப்பவன் சந்தோஷமானவன்.+தன் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.+   அவர்தான் வானத்தையும் பூமியையும்கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தார்.+அவர் எப்போதுமே உண்மையோடு நடந்துகொள்கிறார்.+   மோசடி செய்யப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குகிறார்.பசியில் வாடுகிறவர்களுக்கு உணவு கொடுக்கிறார்.+ கைதிகளை யெகோவா விடுதலை செய்கிறார்.+   கண் தெரியாதவர்களின் கண்களை யெகோவா திறக்கிறார்.+துவண்டுபோனவர்களை யெகோவா தூக்கி நிறுத்துகிறார்.+நீதிமான்களை யெகோவா நேசிக்கிறார்.   தன் மக்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்தாரை யெகோவா பாதுகாக்கிறார்.அப்பா இல்லாத பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் ஆதரவாக இருக்கிறார்.+ஆனால், பொல்லாதவர்களின் திட்டங்களை முறியடிக்கிறார்.+ 10  யெகோவா என்றென்றும் ராஜாவாக இருப்பார்.+சீயோனே, உன் கடவுள்தான் தலைமுறை தலைமுறைக்கும் ராஜா. “யா”வைப் புகழுங்கள்!*

அடிக்குறிப்புகள்

வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா., “இசை இசைப்பேன்.”
வே.வா., “உங்கள் தலைவர்களை.”
வே.வா., “உயிர்மூச்சு.”
வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.