சங்கீதம் 147:1-20

  • கடவுளுடைய அன்பான, வல்லமையான செயல்களைப் புகழ்தல்

    • உள்ளம் உடைந்தவர்களை அவர் குணமாக்குகிறார் (3)

    • நட்சத்திரங்கள் ஒவ்வொன்றையும் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார் (4)

    • வெள்ளைக் கம்பளத்தால் மூடுவதுபோல் பனியால் மூடுகிறார் (16)

147  “யா”வைப் புகழுங்கள்!* நம் கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது.அவரைப் புகழ்வது எவ்வளவு இனிமையானது! எவ்வளவு பொருத்தமானது!+   யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்.+இஸ்ரவேலிலிருந்து சிதறிப்போனவர்களைக் கூட்டிச்சேர்க்கிறார்.+   உள்ளம் உடைந்தவர்களை அவர் குணமாக்குகிறார்.அவர்களுடைய காயங்களுக்குக் கட்டுப் போடுகிறார்.   நட்சத்திரங்களை அவர் எண்ணுகிறார்.அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார்.+   நம்முடைய எஜமான் மகத்தானவர், மகா வல்லமை உள்ளவர்.+அவருடைய புரிந்துகொள்ளுதலுக்கு எல்லையே இல்லை.+   தாழ்மையானவர்களை* யெகோவா தூக்கிவிடுகிறார்.+ஆனால், பொல்லாதவர்களைத் தரையில் தள்ளிவிடுகிறார்.   யெகோவாவுக்கு நன்றி சொல்லிப் பாடுங்கள்.யாழ் இசைத்து நம் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.   அவர் வானத்தை மேகங்களால் மூடுகிறார்.பூமிக்கு மழை தருகிறார்.+மலைகள்மேல் புல்லை முளைக்க வைக்கிறார்.+   விலங்குகளுக்கு இரை தருகிறார்.+பசியில் கத்துகிற அண்டங்காக்கைக் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்கிறார்.+ 10  குதிரைகளின் பலத்தைப் பார்த்து அவர் ஆச்சரியப்படுவதில்லை.+மனிதனுடைய கால்களின் வலிமையைப் பார்த்து அவர் அசந்துபோவதில்லை.+ 11  யெகோவா தனக்குப் பயந்து நடக்கிறவர்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்.+தன்னுடைய மாறாத அன்புக்காகக் காத்திருப்பவர்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்.+ 12  எருசலேமே, யெகோவாவை மகிமைப்படுத்து. சீயோனே, உன் கடவுளைப் புகழ்ந்திடு. 13  உன்னுடைய வாசலின் தாழ்ப்பாள்களை அவர் உறுதியாக்குகிறார்.உன்னிடம் இருக்கிற உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். 14  உன்னுடைய எல்லைகளுக்குள் சமாதானத்தைப் பொழிகிறார்.+உயர்தரமான கோதுமையால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.+ 15  அவர் பூமிக்குக் கட்டளை கொடுக்கிறார்.அவருடைய வார்த்தை வேகமாக ஓடிவருகிறது. 16  பூமியை வெள்ளைக் கம்பளத்தால் மூடுவதுபோல் பனியால் அவர் மூடுகிறார்.+சாம்பலைத் தூவுவதுபோல் உறைபனியைத் தூவுகிறார்.+ 17  ஆலங்கட்டிகளை* ரொட்டித் துணுக்குகள்போல் விழ வைக்கிறார்.+ அவர் வர வைக்கும் குளிரை யாரால் தாங்க முடியும்?+ 18  அவர் கட்டளை கொடுக்கிறார், ஆலங்கட்டிகள் உருகுகின்றன. அவர் தன்னுடைய காற்றை வீச வைக்கிறார்,+ தண்ணீர் பாய்ந்தோடுகிறது. 19  யாக்கோபுக்குத் தன்னுடைய வார்த்தையைச் சொல்கிறார்.இஸ்ரவேலுக்குத் தன்னுடைய விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் தெரியப்படுத்துகிறார்.+ 20  வேறெந்தத் தேசத்தாருக்கும் இதுபோல் அவர் செய்ததில்லை.+அவருடைய நீதித்தீர்ப்புகளைப் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. “யா”வைப் புகழுங்கள்!*+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா., “சாந்தமானவர்களை.”
அதாவது, “பனிக்கட்டிகளை.”
வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.