சங்கீதம் 28:1-9

  • சங்கீதக்காரனின் ஜெபம் கேட்கப்படுகிறது

    • “யெகோவா என் பலம், என் கேடயம்” (7)

தாவீதின் பாடல். 28  யெகோவாவே, என் கற்பாறையே,+ நான் உங்களைக் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறேன்.உங்கள் காதை அடைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் மவுனமாக இருந்தால்,நான் சவக்குழிக்குள்* போகிறவர்களைப் போல ஆகிவிடுவேன்.+   உங்களுடைய ஆலயத்திலுள்ள மகா பரிசுத்த அறையைப் பார்த்தபடி கைகளை உயர்த்தி,உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேளுங்கள்.+   உள்ளத்தில் கெட்ட எண்ணத்தை வைத்துக்கொண்டு,வெளியே சமாதானமாகப் பேசுகிற+ பொல்லாதவர்களோடும்அக்கிரமக்காரர்களோடும்* சேர்த்து என்னைத் தண்டித்துவிடாதீர்கள்.+   அவர்களுடைய செயல்களுக்கு ஏற்ற கூலி கொடுங்கள்.+அவர்களுடைய அக்கிரமங்களுக்குத் தகுந்த கூலி கொடுங்கள். அவர்களுடைய கைகள் செய்த குற்றங்களுக்குத் தகுந்த தண்டனை கொடுங்கள்.சரிக்குச் சரிக்கட்டுங்கள்.+   யெகோவாவின் செயல்களையும் அவருடைய கைகள் செய்தவற்றையும்அவர்கள் கண்டுகொள்வதே இல்லை.+ அதனால் அவர் அவர்களைக் கவிழ்த்துப் போடுவார், கட்டியெழுப்ப மாட்டார்.   நான் யெகோவாவைப் புகழ்வேன்.ஏனென்றால், உதவிக்காக நான் கெஞ்சியபோதெல்லாம் அவர் கேட்டார்.   யெகோவா என் பலம்,+ என் கேடயம்.+என் இதயம் அவரையே நம்பியிருக்கிறது.+ அவர் எனக்கு உதவி செய்தார், அதனால் என் இதயம் சந்தோஷப்படுகிறது.நான் அவரைப் புகழ்ந்து பாடல் பாடுவேன்.   யெகோவாதான் தன்னுடைய மக்களுக்குப் பலம்.அவர்தான் கோட்டை, தான் தேர்ந்தெடுத்தவரை* அற்புதமாக மீட்கிறவர்.+   கடவுளே, உங்களுடைய மக்களைக் காப்பாற்றுங்கள்; உங்களுடைய சொத்தை ஆசீர்வதியுங்கள்.+ அவர்களை மேய்த்து, உங்களுடைய கைகளில் என்றென்றும் சுமந்து செல்லுங்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “கல்லறைக்குள்.”
வே.வா., “மற்றவர்களுக்குத் தீங்கு செய்துகொண்டே இருக்கிறவர்களோடும்.”
வே.வா., “அபிஷேகம் செய்தவரை.”