சங்கீதம் 3:1-8

  • ஆபத்துகளின் மத்தியிலும் கடவுள்மேல் நம்பிக்கை

    • ‘ஏன் இத்தனை எதிரிகள்?’ (1)

    • ‘யெகோவாதான் மீட்பு தருகிறவர்’ (8)

தாவீது தன்னுடைய மகனாகிய அப்சலோமிடமிருந்து தப்பித்து ஓடியபோது பாடிய சங்கீதம்.+ 3  யெகோவாவே, ஏன் இத்தனை பேர் என் எதிரிகளாகிவிட்டார்கள்?+ ஏன் இத்தனை பேர் எனக்கு எதிராகக் கிளம்பிவிட்டார்கள்?+   “கடவுள் அவனைக் காப்பாற்ற மாட்டார்” என்று நிறைய பேர் சொல்கிறார்கள்.+ (சேலா)*   ஆனால் யெகோவாவே, நீங்கள் கேடயம்போல் எல்லா பக்கத்திலிருந்தும் என்னைப் பாதுகாக்கிறீர்கள்.+நீங்கள்தான் என் மகிமை,+ நீங்கள்தான் என்னைத் தலைநிமிர வைப்பவர்.+   யெகோவாவை நோக்கி நான் சத்தமாகக் கூப்பிடுவேன்.பரிசுத்த மலையிலிருந்து+ அவர் எனக்குப் பதில் சொல்வார். (சேலா)   யெகோவா எனக்கு எப்போதும் துணையாக இருக்கிறார்.அதனால், நான் படுத்துத் தூங்கி,நிம்மதியாக* எழுந்திருப்பேன்.+   என்னைச் சுற்றி ஆயிரமாயிரம் பேர் திரண்டு நின்றாலும்,நான் பயப்பட மாட்டேன்.+   யெகோவாவே, எழுந்து வாருங்கள்! என் கடவுளே, என்னைக் காப்பாற்றுங்கள்!+ நீங்கள் என் எதிரிகள் எல்லாருடைய தாடையையும் நொறுக்குவீர்களே.பொல்லாதவர்களுடைய பற்களை உடைப்பீர்களே.+   யெகோவாவே, நீங்கள்தான் மீட்பு தருகிறீர்கள்.+ உங்களுடைய ஜனங்களை நீங்கள்தான் ஆசீர்வதிக்கிறீர்கள். (சேலா)

அடிக்குறிப்புகள்

வே.வா., “பத்திரமாக.”