சங்கீதம் 39:1-13

  • வாழ்க்கை குறுகியது

    • மனிதன் வெறும் மூச்சுக்காற்றுதான் (5, 11)

    • “என் கண்ணீரைப் பார்க்காமல் இருந்துவிடாதீர்கள்” (12)

இசைக் குழுவின் தலைவனுக்கு; எதித்தூன்;*+ தாவீதின் சங்கீதம். 39  “என் வாயால் பாவம் செய்யாதபடி,+நான் கவனமாக நடந்துகொள்வேன். பொல்லாதவன் என் முன்னால் இருக்கும்வரை,என் வாய்க்குப் பூட்டுப்போட்டுக் காத்துக்கொள்வேன்”+ என்று சொன்னேன்.    நான் வாய் திறக்காமல் அமைதியாக இருந்தேன்.+நல்ல விஷயத்தைக்கூட பேசாமல் மவுனமாக இருந்தேன்.ஆனால், வேதனையில் பயங்கரமாகத் துடித்தேன்.   என் இதயம் எனக்குள் புகைந்தது. நான் யோசிக்க யோசிக்க,* அது நெருப்பாய்ப் பற்றியெரிந்தது. அப்போது, நான் இப்படிச் சொன்னேன்:   “யெகோவாவே, என் முடிவைப் பற்றியும்,என் வாழ்நாட்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள எனக்கு உதவுங்கள்.+அப்போதுதான், என் வாழ்க்கை எவ்வளவு குறுகியது* என்று புரிந்துகொள்வேன்.   உண்மையில், நீங்கள் என்னுடைய நாட்களைக் குறைத்திருக்கிறீர்கள்.+உங்கள் பார்வையில் என் ஆயுள்காலம் ஒன்றுமே இல்லை.+ மனிதன் பாதுகாப்பாக வாழ்வதுபோல் தெரிந்தாலும், அவன் வெறும் மூச்சுக்காற்றுதான்.+ (சேலா)   மனிதனின் வாழ்க்கை நிழல் போலத்தான் இருக்கிறது. அவன் ஓடி ஓடி உழைப்பதெல்லாம் வீணாகத்தான் போகிறது. தன் சொத்துகளை யார் அனுபவிப்பார்கள் என்றுகூட அவனுக்குத் தெரியாது. ஆனாலும், அவற்றைக் குவித்து வைக்கிறான்.+   அப்படியிருக்கும்போது, யெகோவாவே, நான் எதற்காக நம்பிக்கையோடு காத்திருப்பேன்? நீங்கள்தான் என்னுடைய ஒரே நம்பிக்கை.   நான் செய்த எல்லா குற்றங்களிலிருந்தும் என்னை விடுவியுங்கள்.+ முட்டாள்கள் என்னை மரியாதையில்லாமல் நடத்துவதற்கு விடாதீர்கள்.   நான் அமைதியாக இருந்தேன்.என்னால் வாய் திறக்கவே முடியவில்லை.+ஏனென்றால், இது உங்களுடைய செயல்.+ 10  நீங்கள் கொடுத்திருக்கும் தண்டனையை நீக்கிவிடுங்கள். உங்கள் கையில் அடி வாங்கி வாங்கி நான் தளர்ந்துபோயிருக்கிறேன். 11  மனிதன் செய்கிற தவறுக்காக அவனைத் தண்டித்துத் திருத்துகிறீர்கள்.+அவன் சேர்த்து வைக்கிற பொக்கிஷங்களை அந்துப்பூச்சிபோல் அரித்துவிடுகிறீர்கள். மனிதன் வெறும் மூச்சுக்காற்றுதான்.+ (சேலா) 12  யெகோவாவே, என் ஜெபத்தைக் கேளுங்கள்.உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேளுங்கள்.+ என் கண்ணீரைப் பார்க்காமல் இருந்துவிடாதீர்கள். என் முன்னோர்களைப் போல நானும் உங்கள்முன் ஒரு அன்னியனாகவும்,+நாடோடியாகவும்* இருக்கிறேன்.+ 13  உங்களுடைய கோபப் பார்வையை என்னைவிட்டுத் திருப்பிவிடுங்கள்.அப்போதுதான், நான் இந்த உலகத்திலிருந்து ஒழிந்துபோவதற்கு முன்னால் கொஞ்சமாவது சந்தோஷப்படுவேன்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “பெருமூச்சு விட்டபோது.”
வே.வா., “நிலையற்றது.”
வே.வா., “குடியேறியாகவும்.”