சங்கீதம் 5:1-12

  • யெகோவா நீதிமான்களுக்குத் தஞ்சம்

    • அக்கிரமத்தைக் கடவுள் வெறுக்கிறார் (4, 5)

    • “உங்களுடைய நீதியான பாதையில் என்னை வழிநடத்துங்கள்” (8)

நெகிலோத்* இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம். 5  யெகோவாவே, நான் பேசுவதைக் கேளுங்கள்.+நான் பெருமூச்சு விடுவதைக் கவனியுங்கள்.   என் கடவுளே, என் ராஜாவே, உதவிக்காக நான் கதறுவதைக் கேளுங்கள்.ஏனென்றால், நான் உங்களிடம்தான் ஜெபம் செய்கிறேன்.   யெகோவாவே, காலையில் நீங்கள் என் குரலைக் கேட்பீர்கள்.+என் கவலைகளைக் காலையில் உங்களிடம் கொட்டிவிட்டு,+ பதிலுக்காக ஆவலோடு காத்திருப்பேன்.   ஏனென்றால், நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல.+கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.+   ஆணவம் பிடித்தவர்கள் யாரும் உங்கள் முன்னால் நிற்க முடியாது. அக்கிரமம் செய்கிற எல்லாரையும் நீங்கள் வெறுக்கிறீர்கள்.+   பொய் பேசுகிறவர்களை நீங்கள் அழிப்பீர்கள்.+ வன்முறையில் இறங்குகிறவர்களையும்* ஏமாற்றுக்காரர்களையும் யெகோவா அருவருக்கிறார்.+   நீங்கள் அளவுகடந்த அன்பை* காட்டுவதால்+ உங்கள் ஆலயத்துக்குள் வருவேன்.+உங்கள்மேல் உள்ள பயபக்தியால் உங்கள் பரிசுத்த ஆலயத்தை நோக்கித் தலைவணங்குவேன்.+   யெகோவாவே, எதிரிகள் என்னைச் சூழ்ந்திருப்பதால்,உங்களுடைய நீதியான பாதையில் என்னை வழிநடத்துங்கள்.உங்களுடைய வழியில் தடைகள் இல்லாமல் நடப்பதற்கு உதவி செய்யுங்கள்.+   அவர்கள் சொல்கிற எதையுமே நம்ப முடியாது.அவர்களுக்கு உடம்பெல்லாம் விஷம்.*அவர்களுடைய தொண்டை ஒரு திறந்த கல்லறை.அவர்கள் தங்களுடைய நாவினால் போலியாகப் புகழ்கிறார்கள்.+ 10  கடவுளே, நீங்கள் அவர்களைக் குற்றவாளிகள் என்று அறிவிப்பீர்கள்.அவர்களுடைய சதித்திட்டங்களே அவர்களைப் படுகுழியில் தள்ளிவிடும்.+ அவர்கள் உங்களுக்கு அடங்கி நடக்காமல் நிறைய குற்றங்கள் செய்திருக்கிறார்கள்.அதனால், அவர்களை விரட்டியடியுங்கள். 11  உங்களிடம் தஞ்சம் அடைகிறவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.+அவர்கள் எப்போதும் சந்தோஷத்தோடு உங்களைப் புகழ்ந்து பாடுவார்கள். அவர்களுக்குக் கெடுதல் செய்ய யாரையும் விட மாட்டீர்கள்.உங்கள் பெயரை நேசிக்கிறவர்கள் உங்களை நினைத்து சந்தோஷப்படுவார்கள். 12  யெகோவாவே, நீதிமான்களை நீங்கள் ஆசீர்வதிப்பீர்கள்.அவர்களுக்குக் கருணை காட்டி,* பெரிய கேடயம்போல் எல்லா பக்கத்திலிருந்தும் பாதுகாப்பீர்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “கொலைகாரர்களையும்.”
வே.வா., “மாறாத அன்பை.”
வே.வா., “அவர்களுடைய உள்ளத்தில் இருப்பதெல்லாம் கெட்ட எண்ணம்.”
வே.வா., “அவர்களை அங்கீகரித்து.”