சங்கீதம் 55:1-23

  • நண்பன் துரோகம் பண்ணியபோது செய்த ஜெபம்

    • நெருங்கிய நண்பனால் நோகடிக்கப்படுதல் (12-14)

    • “யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு” (22)

இசைக் குழுவின் தலைவனுக்கு; நரம்பிசைக் கருவிகளோடு பாட வேண்டியது. மஸ்கீல்.* தாவீதின் பாடல். 55  கடவுளே, என் ஜெபத்தைக் கேளுங்கள்.+இரக்கத்துக்காக நான் வேண்டுவதை அலட்சியம் செய்யாதீர்கள்.*+   நான் சொல்வதைக் கவனித்துக் கேட்டு, பதில் கொடுங்கள்.+ கவலையால் நான் நிம்மதியில்லாமல் தவிக்கிறேன்.+பித்துப் பிடித்தவன்போல் ஆகிவிட்டேன்.   ஏனென்றால், எதிரிகள் கண்டபடி பேசுகிறார்கள்.பொல்லாதவர்கள் என்னைப் பாடாய்ப் படுத்துகிறார்கள். தொல்லைக்குமேல் தொல்லை கொடுக்கிறார்கள்.கோபத்தில் என்னைப் பயங்கரமாகப் பகைக்கிறார்கள்.+   வேதனையில் என் நெஞ்சம் துடிக்கிறது.+மரண பயம் என்னை உலுக்கியெடுக்கிறது.+   பயமும் திகிலும் என்னைப் பிடித்து ஆட்டுகிறது.நான் நடுநடுங்கிக்கொண்டிருக்கிறேன்.   “எனக்கு மட்டும் புறாவைப் போலச் சிறகுகள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நான் எங்கேயாவது பறந்துபோய் பாதுகாப்பாக வாழ்வேனே!   கண்காணாத இடத்துக்குத் தப்பித்துப் போவேனே!+ வனாந்தரத்தில் போய்த் தங்கியிருப்பேனே!+ (சேலா)   புயலிலும் சூறாவளியிலும் சிக்காமல்,பத்திரமான இடத்துக்கு வேகமாய்ப் போவேனே!” என்று புலம்பிக்கொண்டிருக்கிறேன்.   யெகோவாவே, அவர்களைக் குழப்புங்கள். அவர்களுடைய திட்டங்களைக் குலைத்துப்போடுங்கள்.+ஏனென்றால், நகரத்தில் வன்முறைகளும் மோதல்களும் நடப்பதை நான் பார்க்கிறேன். 10  அவர்கள் ராத்திரி பகலாக அதன் மதில்கள்மேல் நடந்துகொண்டிருக்கிறார்கள்.நகரத்துக்குள் ஒரே பகையும் பிரச்சினையுமாக இருக்கிறது.+ 11  நகரமே சீரழிந்துவிட்டது.அதன் பொது சதுக்கத்தில் அடக்குமுறையும் மோசடியும்தான் நடக்கிறது.+ 12  என்னை நோகடிக்கிறவன் எதிரி அல்ல.+அப்படியிருந்தால் சகித்திருப்பேனே! எனக்கு எதிராகக் கிளம்பியிருக்கிறவன் விரோதி அல்ல;அப்படியிருந்தால் ஓடி ஒளிந்திருப்பேனே! 13  ஆனால், உண்மையில் என்னை எதிர்க்கிறவன் நீதான்.நீ எனக்குச் சமமானவன்.+எனக்கு நன்றாகப் பழக்கப்பட்டவன்.+ 14  நாம் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.மக்கள் எல்லாரோடும் சேர்ந்து கடவுளுடைய ஆலயத்துக்கு நடந்துபோனோம். 15  எதிரிகள் அழிந்துபோகட்டும்!+ உயிரோடு கல்லறைக்குள் புதைந்துபோகட்டும்! ஏனென்றால், அவர்களைச் சுற்றியும் அவர்களுக்கு உள்ளேயும் அக்கிரமம்தான் குடிகொண்டிருக்கிறது. 16  ஆனால், நான் கடவுளைக் கூப்பிடுவேன்.யெகோவா என்னைக் காப்பாற்றுவார்.+ 17  சாயங்காலத்திலும் காலையிலும் மத்தியானத்திலும்நான் வேதனையில் குமுறுகிறேன்.+அவர் என் குரலைக் கேட்கிறார்.+ 18  என்னோடு மோதுகிற ஆட்களிடமிருந்து அவர் என்னைக் காப்பாற்றி, எனக்கு நிம்மதி தருவார்.ஏனென்றால், ஏராளமானவர்கள் என்னைத் தாக்க வருகிறார்கள்.+ 19  கடவுள் என் வேண்டுதலைக் கேட்பார்.காலம்காலமாகச் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பவர்+ அவர்களுக்குப் பதிலடி கொடுப்பார்.+ (சேலா) கடவுளுக்குப் பயப்படாத அந்த ஆட்கள் திருந்தவே மாட்டார்கள்.+ 20  என் நண்பன்* தன்னோடு நெருங்கிப் பழகியவர்களையே தாக்கினான்.+தான் செய்த ஒப்பந்தத்தையே மீறினான்.+ 21  அவனுடைய வார்த்தைகள் வெண்ணெயைவிட மென்மையாக இருக்கின்றன.+ஆனால், அவனுடைய உள்ளத்தில் பகையும் வெறுப்பும் நிறைந்திருக்கின்றன. அவனுடைய வார்த்தைகள் எண்ணெயைவிட மென்மையாக இருக்கின்றன.ஆனால், அவை வாள்போல் தாக்குகின்றன.+ 22  யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு.+அவர் உன்னை ஆதரிப்பார்.+ நீதிமானை ஒருபோதும் தள்ளாட விடமாட்டார்.+ 23  கடவுளே, பொல்லாதவர்களை நீங்கள் படுகுழியில் தள்ளுவீர்கள்.+ கொலைகாரர்களும் மோசடிக்காரர்களும் தங்கள் வாழ்நாளில் பாதியைக்கூட தாண்ட மாட்டார்கள்.+ ஆனால், நான் உங்களையே நம்பியிருப்பேன்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “நான் உதவி கேட்டு ஜெபம் செய்யும்போது மறைந்துகொள்ளாதீர்கள்.”
அதாவது, 13, 14 வசனங்களில் குறிப்பிடப்பட்ட முன்னாள் நண்பனைக் குறிக்கிறது.