சங்கீதம் 6:1-10

  • கருணைக்காகக் கெஞ்சுதல்

    • இறந்தவர்களால் கடவுளைப் புகழ முடியாது (5)

    • கருணைக்காகக் கெஞ்சும்போது கடவுள் கேட்கிறார் (9)

இசைக் குழுவின் தலைவனுக்கு; செமினீத்* இசையில் நரம்பிசைக் கருவிகளோடு பாட வேண்டிய தாவீதின் சங்கீதம். 6  யெகோவாவே, கோபத்தோடு என்னைக் கண்டிக்காதீர்கள்.ஆக்ரோஷத்தோடு என்னைத் தண்டிக்காதீர்கள்.+   யெகோவாவே, நான் பலவீனமாகிக்கொண்டே போகிறேன்; எனக்குக் கருணை* காட்டுங்கள். யெகோவாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன, என்னைக் குணப்படுத்துங்கள்.+   நான் வேதனையில் தவியாய்த் தவிக்கிறேன்.+யெகோவாவே, நீங்களே சொல்லுங்கள், இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்தக் கஷ்டம்?+   யெகோவாவே, நீங்கள் வந்து என்னுடைய உயிரைக் காப்பாற்றுங்கள்.+உங்களுடைய மாறாத அன்பினால் என்னைக் காப்பாற்றுங்கள்.+   இறந்த பிறகு யாரால் உங்களைப் பற்றிப் பேச* முடியும்?கல்லறைக்குப் போன பிறகு யாரால் உங்களைப் புகழ முடியும்?+   நான் பெருமூச்சுவிட்டு பெருமூச்சுவிட்டுக் களைத்துப்போகிறேன்.+ராத்திரியெல்லாம் அழுது அழுது என் படுக்கையைக் கண்ணீரால் நனைக்கிறேன்,என் கட்டிலைக் குளமாக்குகிறேன்.+   துக்கத்தில் என் கண்ணே சோர்ந்துவிட்டது.+என்னைக் கொடுமைப்படுத்துகிற ஆட்களால் என் பார்வையே மங்கிவிட்டது.   அக்கிரமம் செய்கிறவர்களே, என்னைவிட்டு விலகிப் போங்கள்.என்னுடைய கதறலை யெகோவா கண்டிப்பாகக் கேட்பார்.+   கருணைக்காக நான் கெஞ்சுவதை யெகோவா கேட்பார்.+என்னுடைய ஜெபத்தை யெகோவா ஏற்றுக்கொள்வார். 10  என்னுடைய எதிரிகள் எல்லாரும் அவமானப்பட்டுப்போய், கதிகலங்குவார்கள்.அவர்கள் கேவலப்பட்டுப்போய், திடீரென்று பின்வாங்குவார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “இரக்கம்.”
வே.வா., “நினைத்துப் பார்க்க.”