சங்கீதம் 63:1-11

  • கடவுளுக்காக ஏங்குதல்

    • “உங்களுடைய மாறாத அன்பு உயிரைவிட மேலானது” (3)

    • ‘அருமையான விருந்தைச் சாப்பிட்டது போன்ற திருப்தி’ (5)

    • ராத்திரியில் கடவுளைப் பற்றித் தியானித்தல் (6)

    • ‘கடவுளை இறுக்கமாகப் பிடித்திருக்கிறேன்’ (8)

யூதாவின் வனாந்தரத்தில் இருந்தபோது+ தாவீது பாடிய சங்கீதம். 63  கடவுளே, நீங்கள்தான் என் கடவுள். நான் எப்போதும் உங்களைத் தேடுகிறேன்.+ உங்களுக்காகத் தவிக்கிறேன்.+ தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் தேசத்திலே,உங்களுக்காகத் தவித்துத் தவித்துத் துவண்டு விழுகிறேன்.+   பரிசுத்த இடத்தில் நான் உங்களைப் பார்த்தேன்.உங்களுடைய பலத்தையும் மகிமையையும் கண்டேன்.+   உங்களுடைய மாறாத அன்பு உயிரைவிட மேலானது.+அதனால், என் உதடுகள் உங்களை மகிமைப்படுத்தும்.+   வாழ்நாளெல்லாம் உங்களைப் புகழ்வேன்.உங்களுடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வேன்.*   அருமையான விருந்தைச் சாப்பிட்டது போல நான் திருப்தியாக உணர்கிறேன்.அதனால், சந்தோஷம் பொங்க என் உதடுகளால் உங்களைப் புகழ்வேன்.+   படுத்திருக்கும் நேரத்தில் உங்களை நினைத்துப் பார்க்கிறேன்.நடுராத்திரியில் உங்களைப் பற்றித் தியானித்துப் பார்க்கிறேன்.+   ஏனென்றால், நீங்கள்தான் எனக்குத் துணை.+உங்களுடைய சிறகுகளின் நிழலில் சந்தோஷத்தோடு உங்களைப் புகழ்ந்து பாடுவேன்.+   உங்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.உங்கள் வலது கை என்னைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறது.+   என் உயிரை எடுக்கத் துடிப்பவர்கள்பூமியின் ஆழத்துக்குள் புதைந்துபோவார்கள். 10  அவர்கள் வாளுக்குப் பலியாவார்கள்.நரிகளுக்கு* இரையாவார்கள். 11  ஆனால், கடவுளை நினைத்து ராஜா சந்தோஷப்படுவார். கடவுளுடைய பெயரில் சத்தியம் செய்கிற எல்லாரும் பூரித்துப்போவார்கள்.*ஏனென்றால், பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “என் கைகளை உயர்த்துவேன்.”
வே.வா., “குள்ளநரிகளுக்கு.”
வே.வா., “பெருமையாகப் பேசுவார்கள்.”