சங்கீதம் 65:1-13

  • பூமியைக் கடவுள் அக்கறையோடு கவனித்துக்கொள்கிறார்

    • ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ (2)

    • ‘உங்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் சந்தோஷமானவர்’ (4)

    • கடவுள் ஏராளமான நன்மைகளைப் பொழிகிறார் (11)

இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம். ஒரு பாடல். 65  கடவுளே, சீயோனில் உங்களுக்குப் புகழ்மாலை காத்திருக்கிறது.+எங்களுடைய நேர்த்திக்கடன்களை நாங்கள் உங்களுக்குச் செலுத்துவோம்.+   ஜெபத்தைக் கேட்கிறவரே, எல்லா விதமான மக்களும் உங்களைத் தேடி வருவார்கள்.+   என்னுடைய தவறுகள் என்னைத் திணறடிக்கின்றன.+ஆனால், நீங்கள் எங்களுடைய குற்றங்களை மன்னிக்கிறீர்கள்.+   உங்களுடைய பிரகாரங்களில் தங்குவதற்காக நீங்கள் யாரைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பக்கத்தில் கொண்டுவருகிறீர்களோ அவர் சந்தோஷமானவர்.+ நாங்கள் உங்களுடைய வீடாகிய பரிசுத்த ஆலயத்தில்+ கிடைக்கும் நன்மைகளால் திருப்தியடைவோம்.+   எங்களை மீட்கும் கடவுளே,உங்களுடைய நீதியினால் பிரமிப்பான காரியங்களைச் செய்து எங்களுக்குப் பதில் தருவீர்கள்.+பூமியெங்கும் குடியிருக்கிற மக்களுக்கும்,தொலைதூரக் கடல் பகுதிகளில் இருக்கிற ஜனங்களுக்கும்நீங்கள்தான் நம்பிக்கையாக இருக்கிறீர்கள்.+   உங்களுடைய வல்லமையால் மலைகளை உறுதியாக நிலைநிறுத்தினீர்கள்.பலத்தை உடைபோல் உடுத்தியிருக்கிறீர்கள்.+   கடல்களின் சீற்றத்தையும், அலைகளின் இரைச்சலையும்,+தேசங்களின் கொந்தளிப்பையும் அடக்குகிறீர்கள்.+   நீங்கள் செய்கிற அடையாளங்களைப் பார்த்து தொலைதூரத்தில் வாழ்கிறவர்கள் மலைத்துப்போவார்கள்.+கிழக்கிலிருந்து மேற்குவரை* இருக்கிறவர்களை நீங்கள் சந்தோஷ ஆரவாரம் செய்ய வைப்பீர்கள்.   நீங்கள் பூமியை அக்கறையோடு கவனித்துக்கொள்கிறீர்கள்.அதைச் செழிப்பாக்குகிறீர்கள், அமோகமாக விளைய வைக்கிறீர்கள்.+ உங்கள் ஓடையைப் பெருக்கெடுத்து ஓட வைக்கிறீர்கள்.மக்களுக்குத் தானியத்தைத் தருகிறீர்கள்.+ இந்த விதத்தில்தான் பூமியைப் படைத்திருக்கிறீர்கள். 10  வயல்களின் சால்களில்* தண்ணீரை நிரப்பி, அவற்றின் வரப்புகளை* சமப்படுத்துகிறீர்கள்.மழையைப் பொழிந்து மண்ணை மிருதுவாக்கி, அதன் விளைச்சலை ஆசீர்வதிக்கிறீர்கள்.+ 11  நீங்கள் பொழியும் நன்மைகள் வருஷத்துக்குக் கிரீடம் சூட்டுவதுபோல் இருக்கிறது.உங்கள் பாதைகள் நிரம்பி வழிகின்றன.+ 12  வனாந்தரத்தின் மேய்ச்சல் நிலங்களும் நிரம்பி வழிந்தபடி இருக்கின்றன.+மலைகள் சந்தோஷத்தை உடைபோல் உடுத்தியிருக்கின்றன.+ 13  மேய்ச்சல் நிலங்களில் மந்தைகள் நிறைந்திருக்கின்றன.பள்ளத்தாக்குகளைத் தானியங்கள் கம்பளம்போல் போர்த்தியிருக்கின்றன.+ அவையெல்லாம் வெற்றி முழக்கம் செய்து, பாட்டுப் பாடுகின்றன.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “சூரியன் உதிக்கிற திசையிலிருந்து மறைகிற திசைவரை.”
சால்கள் என்பது உழும்போது நிலத்தில் ஏற்படும் பள்ளங்கள்.
வே.வா., “உழப்பட்ட நிலத்தை.”