சங்கீதம் 70:1-5

  • உடனடியாக உதவும்படி ஜெபம் செய்யப்படுகிறது

    • “சீக்கிரமாக எனக்கு உதவி செய்யுங்கள்” (5)

இசைக் குழுவின் தலைவனுக்கு; ஒரு நினைப்பூட்டுதலாக தாவீது பாடிய பாடல். 70  கடவுளே, என்னைக் காப்பாற்றுங்கள்.யெகோவாவே, சீக்கிரமாக என் உதவிக்கு வாருங்கள்.+   என்னைத் தீர்த்துக்கட்ட வழிதேடுகிறவர்கள்அவமானத்தில் தலைகுனியட்டும். நான் கஷ்டப்படுவதைப் பார்த்து சந்தோஷப்படுகிறவர்கள்வெட்கப்பட்டுப் பின்வாங்கட்டும்.   என்னைப் பார்த்துக் கேலி செய்கிறவர்கள் அவமானப்பட்டு ஓடட்டும்.   ஆனால், உங்களைத் தேடுகிறவர்கள்உங்களை நினைத்து சந்தோஷத்தில் பூரித்துப்போகட்டும்.+ நீங்கள் தருகிற மீட்பை விரும்புகிறவர்கள் “கடவுளுக்கு மகிமை சேரட்டும்!” என்று எப்போதும் சொல்லட்டும்.   நானோ ஆதரவற்ற ஒரு ஏழை.+கடவுளே, சீக்கிரமாக எனக்கு உதவி செய்யுங்கள்.+ நீங்கள்தான் எனக்குத் துணை, நீங்கள்தான் என்னைக் காப்பாற்றுகிறவர்.+யெகோவாவே, தாமதிக்காதீர்கள்.+

அடிக்குறிப்புகள்