சங்கீதம் 71:1-24

  • வயதானவர்களின் நம்பிக்கை

    • சிறுவயதிலிருந்தே கடவுள்மேல் நம்பிக்கை (5)

    • “என் உடல் தளர்ந்துபோகும்போது” (9)

    • ‘சிறுவயதிலிருந்து கடவுள் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்’ (17)

71  யெகோவாவே, நான் உங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறேன். என்னை ஒருபோதும் அவமானப்பட விட்டுவிடாதீர்கள்.+   உங்களுடைய நீதியால் என்னை விடுவித்துக் காப்பாற்றுங்கள். என் ஜெபத்தைக் காதுகொடுத்து* கேட்டு, என்னைக் காப்பாற்றுங்கள்.+   என்னுடைய கற்பாறைக் கோட்டையாக இருங்கள்.நான் எப்போதுமே உங்களிடம் ஓடிவருவேன். என்னைக் காப்பாற்றுவதற்குக் கட்டளை கொடுங்கள்.ஏனென்றால், நீங்கள்தான் என்னுடைய மாபெரும் கற்பாறை, என் கோட்டை.+   கடவுளே, பொல்லாதவர்களின் கையிலிருந்தும்,+அநியாயமாக அடக்கி ஒடுக்குகிறவர்களின் பிடியிலிருந்தும் என்னை விடுவியுங்கள்.   உன்னதப் பேரரசரான யெகோவாவே, நீங்கள்தான் என்னுடைய நம்பிக்கை.சிறுவயதிலிருந்தே உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்.+   பிறந்ததிலிருந்தே உங்களைத்தான் சார்ந்திருக்கிறேன்.என் தாயின் வயிற்றிலிருந்து நீங்கள்தான் என்னை எடுத்தீர்கள்.+ உங்களை எப்போதும் புகழ்கிறேன்.   நிறைய பேர் என்னை அதிசயமாகப் பார்க்கிறார்கள்.ஆனால், நீங்கள்தான் எனக்குப் பலத்த அடைக்கலம்.   நான் உங்களை வாயாரப் புகழ்கிறேன்.+உங்களுடைய மேன்மையைப் பற்றி நாளெல்லாம் பேசுகிறேன்.   என்னுடைய வயதான காலத்தில் என்னை ஒதுக்கித்தள்ளாதீர்கள்.+என் உடல் தளர்ந்துபோகும்போது என்னைக் கைவிட்டுவிடாதீர்கள்.+ 10  எதிரிகள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.என்னைக் கொல்லத் துடிப்பவர்கள் ஒன்றுகூடி சதி செய்கிறார்கள்.+ 11  “கடவுள் அவனைக் கைவிட்டுவிட்டார். அவனைத் துரத்திப் பிடியுங்கள். அவனைக் காப்பாற்ற யாருமே இல்லை” என்று சொல்கிறார்கள்.+ 12  கடவுளே, என்னைவிட்டுத் தூரமாக இருக்காதீர்கள். என் கடவுளே, சீக்கிரமாக என் உதவிக்கு வாருங்கள்.+ 13  என்னை எதிர்க்கிறவர்கள் அவமானப்பட்டு அழிந்துபோகட்டும்.+ எனக்குக் கேடு செய்யத் துடிக்கிறவர்கள் கேவலப்பட்டும் வெட்கப்பட்டும் போகட்டும்.+ 14  ஆனால், நான் உங்களுக்காகக் காத்துக்கொண்டே இருப்பேன்.உங்களுடைய புகழுக்குப் புகழ் சேர்ப்பேன். 15  உங்களுடைய நீதியான செயல்களும்,+உங்களுடைய மீட்பின் செயல்களும்எண்ண முடியாத அளவுக்கு ஏராளமாக இருந்தாலும்,+அவற்றைப் பற்றி நாளெல்லாம் சொல்வேன். 16  உன்னதப் பேரரசரான யெகோவாவே,நான் போய் உங்களுடைய வல்லமையான செயல்களைப் பற்றிச் சொல்வேன்.உங்கள் நீதியைப் பற்றிச் சொல்வேன், உங்கள் நீதியைப் பற்றி மட்டுமே சொல்வேன். 17  கடவுளே, சிறுவயதிலிருந்து நீங்கள்தான் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள்.+உங்களுடைய அற்புதமான செயல்களைப் பற்றி இதுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.+ 18  கடவுளே, எனக்கு வயதாகி முடி நரைத்துப்போனால்கூட என்னைக் கைவிட்டுவிடாதீர்கள்.+ ஏனென்றால், உங்களுடைய வல்லமையைப் பற்றி அடுத்த தலைமுறைக்குச் சொல்ல விரும்புகிறேன்.உங்களுடைய பலத்தைப் பற்றி வருங்காலச் சந்ததிக்குச் சொல்லத் துடிக்கிறேன்.+ 19  கடவுளே, உங்களுடைய நீதி வானளவுக்கு உயர்ந்தது.+நீங்கள் மாபெரும் செயல்களைச் செய்திருக்கிறீர்கள்.கடவுளே, உங்களுக்கு நிகர் யார்?+ 20  நீங்கள் எனக்கு நிறைய வேதனைகளையும் கஷ்டங்களையும் அனுமதித்திருந்தாலும்கூட,+இப்போது எனக்குப் புத்துயிர் கொடுங்கள்.பூமியின் ஆழத்திலிருந்து* என்னைத் தூக்கிவிடுங்கள்.+ 21  நான் உயர்ந்துகொண்டே போவதற்கு உதவுங்கள்.என்னைச் சுற்றிலும் இருந்து, ஆறுதல் கொடுங்கள். 22  அப்போது, உங்களுடைய உண்மைத்தன்மையை நினைத்து,+நரம்பிசைக் கருவிகளால் உங்களைப் புகழ்வேன். என் கடவுளே, இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளே,யாழை மீட்டி உங்களைப் புகழ்ந்து பாடுவேன்.* 23  என் உதடுகள் கம்பீரமாகவும் சந்தோஷமாகவும் உங்களைப் புகழ்ந்து பாடும்.+ஏனென்றால், நீங்கள் என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்.+ 24  என் நாவு உங்களுடைய நீதியைப் பற்றி நாள் முழுவதும் பேசும்.+ஏனென்றால், என்னை அழிக்கத் துடிக்கிறவர்கள் அவமானத்தில் தலைகுனிவார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “குனிந்து.”
வே.வா., “ஆழமான தண்ணீரிலிருந்து.”
வே.வா., “இசை இசைப்பேன்.”